#கும்பம்_தேங்காய்_வழிபாடு
எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், யாகம் செய்யும்போதும் கலச பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. நவராத்திரி போன்ற பண்டிகைகளிலும் வீட்டில் பலர் கலசம் வைத்து வழிபடுகின்றனர். இதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி
அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப் படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப்
போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம். கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று என்பதுசொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்
படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவன் உடல் ஆக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் காணலாம். ஏலக்காய்த் தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப் படுகிறது. அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும்
என்றால் குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ. ஆர்.என்.ஏ. என்று சொல்கிறோமே அது போல. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டும் என்று பிரார்த்திக்கப் படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற
சடங்குகளுக்கும் பயன் படுத்தப் படுகிறது. கலசச் சொம்பு அல்லது குடத்தின் மேலே மாவிலையைச் சொருகி அதன் மேல் தலைப் பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்து விடும், ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே இருக்கும்
என்பதால் மாவிலையை கலசத்திற்குப் பயன் படுத்துகிறோம். மாமரம் அஞ்ஞானத்தைப் போக்கி, மெய் ஞானத்தைத் தரவல்லது. (ஞானப் பழம் மாமபழம் அந்த சம்பவம் நினைவுக்குக் கொண்டு வரவும்) அதே போல மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு உள்ளது. தேங்காய்க்கு மட்டுமே 3 கண்கள் அமைந்துள்ளன. இறைவனுக்கு
உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண்.இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன்
இறைவன் மட்டுமே. இந்த 3 கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய 3 கண்களை உடைய தேங்காயைத் தலைப் பகுதியாக உருவகப் படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம். தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிச்சிப் போடு என்று தானே சொல்கிறோம். தேங்காய் நாரை பிய்த்துப
போடு என்று யாரும் சொல்வதில்லை. குடுமி என்ற வார்த்தை தலையில் உள்ள முடிகளின் இணைப்புதானே. நம்மையும் அறியாமல் தேங்காயை மனிதனின் தலையாகவே பார்ப்பது என்பது நமக்குள் ஊறிவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி . கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை
ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது.
கும்பத்திற்கு உள்ள இந்தப் பெருமைகளால் நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூரண கும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்படுகின்றனர். இது அவர்களிடத்து
நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.
கும்ப வழிபாட்டின் அருமையை அறிந்து, அதன்படி பூஜித்து, நாமும் பயன் பெறுவோம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 1
This story that I read brought goosebumps to me.
Once, a young girl approached a Saint and said, “My father is quite ill. He is unable to get himself out of bed. Would you mind coming over to our house to meet him?”
“Yes, I will indeed come,” replied the Saint.
When the Saint Image
came to the house, he saw the sick and helpless old man lying in his bed with his head resting on two pillows. However, he also noticed an empty chair next to the bed.
“It appears that perhaps you were anticipating my arrival?” the Saint asked the old man.
“Oh, not at all. By the
way, who are you?” the old man inquired. Introducing himself, the Saint said, “Seeing the empty chair, I assumed you had an inkling I was coming.” The old man said, “O Saint! If you don’t mind, please close the bedroom door.”
Slightly alarmed at the request, the Saint went ahead
Read 12 tweets
Oct 1
#MahaPeriyava
“We say that Ambal is the embodiment of kindness and compassion. At the end of Lalitha Sahasranamam she is described as “Avyaaja karunaamoorthi” – one who showers kindness and compassion without any reason. However there are countless difficulties and hardships in Image
the world. Only I know that. People who come to me talk of the various difficulties faced by them in the world. Even people who do poojas, undertake pilgrimage, take bath in holy waters are afflicted with problems. During such times, many of them cry their heart out to me and
feel depressed saying, “In spite of all the poojas and my devotion, Ambal has only been giving me difficulties and hardships! You call her as the embodiment of compassion, but in my case she is blind”. They even get angry with Ambal. However, if you ask me, difficulties and
Read 19 tweets
Oct 1
#புரட்டாசி_ஸ்பெஷல்
#ஸ்ரீநிவாசப்பெருமாள்
#ஶ்ரீராமானுஜர்
உடையவரை, சிஷ்யர்கள் தெண்டனிட்டு "தேவரீர் தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்யவேணும்" என்று விண்ணப்பித்தனர்.இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம் Image
தொடங்கி, பாண்டியநாட்டு திவ்ய தேதங்களை சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்யதேசங்கள் சென்று, வடநாட்டுக்கு எழுந்தருளி சாளக்ராமம், திருவதரி முதலான திவ்யதேசங்களையும் சேவித்தபடியே #திருமலை வந்தடைந்தார். அங்கே,
"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும்
தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேலெந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாயிசைந்து”
என்று ஆழ்வார் அருளியபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஶ்ரீநிவாசனுக்கு லக்ஷணமாய் நீள்முடியும், சங்கு-சக்ர திவ்யாயுதங்களும், திருயஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை
Read 7 tweets
Oct 1
#Varaha_Avatar #Charama_Slokam #Upadesh_To_BoomiDevi
When Varaha, MahaVishnu's avatar rescued Boomadevi after vanquishing Hiranyakshan He found Her crying instead of rejoicing. He asked Her for the reason. She replied, "You came running to rescue me because I am your wife, Image
sishya, but what about the people in the world? Will you come to their rescue when in time of need like you did for me?" Immediately Bhagawan replied which is a Charama Slokha and an Upadesha to Boomedevi.
Sthite manasi susvasthe shareere sati yo narahaa lDhaatu-saamye sthite
smartaa Vishwaroopam ca Maamajam llTatas-tam mriyamaaNam tu kaashtta paashaaNa sannibham lAham smaraami madbhaktam nayaami paramaam gatim ll
Lord Varaha addresses Mother Earth or Bhoodevi who expresses concern for the well being of all Her children. "If anyone thinks of Me, when
Read 10 tweets
Oct 1
#வராஹர் #சரமஸ்லோகம் #பூமிதேவிக்கு_உபதேசம்
ஹிதன்யாக்‌ஷனை வதம் செய்து பூமி பிராட்டியை மீட்ட போது, பூமாதேவி அழுது கொண்டிருந்தாள். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள், “நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா?” என்று கேட்கிறார் பகவான். அதற்கு பிராட்டி சொல்கிறாள், “நான் கூக்குரல் Image
இட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா?” என்று கேட்டாள். பெருமாளும் பூமி பிராட்டிக்குப் பதில் (உபதேசம்) சொல்லத் தொடங்கினார்.
#வராக_சரமச்லோகம்.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா;  
விஸ்வரூபம் ச மாமஜம்;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்;  நயாமி பரமாம் கதிம்;
எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும் போது என்னையே நினத்துக்
Read 12 tweets
Oct 1
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை.
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீஎன்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குப் பணம் கொடுத்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக Image
ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் #ஸ்ரீவராகப்பெருமாள்.
அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் மீது நின்ற கோலத்தில் மக்களுக்கு அருள்
புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். திருப்பதி-வராக சுவாமி கோயில் வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம். பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்த போது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(