அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது