ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெற்றும் வாழலாம்.
மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
திருவரங்கம் பெரிய கோயிலில், நம்பெருமாள் தனது உபய நாச்சியார்களோடு கருவறையில் எழுந்தருளி இருக்கும் பீடத்திற்கு,
"பூபாலராயன்"
என்கிற பெயர் வழக்கத்தில் உள்ளது..
இந்தத் திருநாமம் ஏன் ஏற்பட்டது அறிந்து கொள்வோமா?
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்கிற பாண்டிய மன்னன்,
தனது ஆட்சிக் காலத்தில்,
சோழ மன்னனான மூன்றாம் ராஜேந்திரனின் மீது போர் தொடுத்து, அவனை வெற்றி கொண்டதுடன்,
சோழர்களுக்கு உறுதுணையாக இருந்த ஹொய்சாள மன்னனான
வீர சோமேஸ்வரனையும் தோற்கடித்தான்
சோழ நாட்டை வெற்றி கொண்ட இந்த முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்,
நம்பெருமாளுக்கு மிக உயர்ந்த க்ரீடமான "பாண்டியன் கொண்டை"யைத் தனது காணிக்கையாகச் சமர்ப்பித்தான்..
திருமலையில் திருப்பதி வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு, நாம் தரிசிக்கவேண்டிய பிரதான தெய்வம் அருள்மிகு வராக சுவாமிதான்...
திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
பெருமாளை தரிசித்து வழிபடுவதற்கு முன்பு மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபட வேண்டும். அவர்தான் அருள்மிகு வராக சுவாமி. சீனிவாச பெருமாள் திருமலையில் எழுந்தருள இடம் கொடுத்தவர்
அதனால் மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் பூஜை நைவேத்தியம் முதலியவை முதலில் வராக சுவாமிக்கே நடைபெறும்.
அதன் பிறகே வேங்கடேச பெருமாளுக்கு பூஜை, நைவேத்தியம் நடைபெறும். இந்த நடைமுறை இன்று வரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்குச் செல்பவர்கள் முதலில் சுவாமி புஷ்கரணியில் நீராடி, ஶ்ரீவராகசுவாமியை வழிபட்ட பிறகுதான் வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.