பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு தானா…??
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் எனக்கு அந்த அமைப்பை பற்றி எதுவும் தெரியாது, நான் 2007 ஆம் வருடம் சட்டம் படிக்க கோயம்புத்தூர் சென்றபோது
மேற்படி ஒரு அமைப்பு இருப்பதாக தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் நான் வழக்கறிஞராக பதிவு செய்து கடந்த 2013 ஆம் வருடம் மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி எடுக்க மதுரை வந்து, எனது மூத்த வழக்கறிஞர் திரு. S.M.A. ஜின்னா அவர்களின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த போது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டேன். நான் என் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக அங்கே பல வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, அதில் பெரும்பாலான வழக்குகள் மனித உரிமைகள்
சம்பந்தமாகவும், அடக்கு முறையினரால் மற்றும் காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட நபருக்காக போடப்பட்ட வழக்குகளாக இருக்கும். அத்தகைய வழக்குகள் அனைத்திலும் பாதிக்கப்பட்ட நபருக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்களே சட்டம் சார்ந்த அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்ட
நபருக்கு செய்து வந்தார்கள், இன்னும் சொல்லப்போனால் நிறைய வழக்குகளில் வழக்கறிஞர் கட்டணம் உட்பட வழக்கு செலவுகள் அனைத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பே ஏற்று அந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கும். மற்ற அமைப்புகளை காட்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பில்
வழக்கறிஞர் பிரிவு அதிவிரைவாக பணிகளை செய்து வரும்.
அப்படி நான் பார்த்த வழக்குகளில் நான் பார்த்து வியந்த வழக்கு என்றால் அது கடந்த 2007 ஆம் வருடம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த மசூது என்பவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்து கொலை
செய்யப்பட்டிருப்பார். கொலை செய்த பின்னர் அவரது உடல் கிடைக்கக்கூடாது என்பதற்காக காவலர்களே அவரது உடலை தீயிட்டு கொளுத்தி விட்டார்கள். ஆரம்பத்தில் மசூது காணாமல் போய்விட்டதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. ஆனால் கணவனை இழந்த அசனம்மாள் என்ற பெண்மணிக்காக அந்த
வழக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்று பல சட்ட போராட்டங்கள் நடத்தி வழக்கு விசாரணையை CBCID க்கு மாற்றி கடந்த 2013 ஆம் வருடம் அந்த வழக்கு கொலை வழக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இன்றுவரை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்குக்காக திருநெல்வேலி
மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அசனம்மாள் பேரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 10க்கும் மேல். அந்த வழக்கத்திற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தினை சொல்ல
வேண்டுமென்றால் ஒரு புத்தகமே போடலாம்.
அதைப்போல ராமநாதபுரம் மாவட்டம் S.P. பட்டினம் காவல் நிலையத்தில் எவ்வித குற்ற வழக்கும் இல்லாத ஒரு இளைஞர் சார்பு ஆய்வாளர் அவர்களால் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்த கொலைக்கு நீதி கிடைக்க வேண்டி சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வழக்கறிஞர் பிரிவு சம்பவ இடத்திற்கு சென்று கள ஆய்வு செய்து, இரவோடு இரவாக வழக்கு தயார் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டு அந்த வழக்கில்
சாட்சியங்கள் மற்றும் தடையைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் அழிக்காத வண்ணம் பாதுகாக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கு நல்ல முறையில் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேற்படி வழக்குகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின்
செயல்பாடுகளை பார்த்து நான் வியந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து எந்த ஒரு வழக்கிலும் பாதிக்கப்பட்ட நபருக்காக ஒரு அமைப்பு ஆதி முதல் அந்தம் வரை செயல்பட்டதில்லை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் மற்ற இஸ்லாமிய அமைப்புகளை போல ஒரு மத சாயம் கொண்ட
அமைப்பாகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மிதந்த போது எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் முதல்ஆளாக மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு தன்னார்வ நிறுவனம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தான்…அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்தில் கொரோனாவால் இறந்து போன நபர்களின்
அருகே அந்த நபரின் குடும்பத்தினரே போக அச்சப்பட்ட காலத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மத வேறுபாடுகள் இன்றி பல்வேறு நபர்களின் சடலங்களை அவர்களின் சமுதாய வழக்கப்படி நல்லடக்கம் செய்தனர். இப்படியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஒரு மதம் சார்ந்த அமைப்பு என்ற
மாயையில் இருந்து பொதுமக்களுக்கான சமுதாய பணியாற்றும் அமைப்பு என்ற நல்ல பெயரை எடுத்தது.
இந்த நிலையில் தான் மத்திய அரசால் NRC மற்றும் CAA சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. மேற்படி மசோதாக்களை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு
அறப்போராட்டங்களை மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போதுதான் அந்த அமைப்பின் உண்மையான பலம் மத்திய அரசுக்கு தெரிய வந்ததாகவே நான் கருதுகிறேன். இங்கே ஒரு விஷயத்தை முக்கியமாக குறிப்பிட வேண்டும், மேற்படி போராட்டங்களில் எந்த இடத்திலும் வன்முறை நிகழ்வுகள் நடைபெறவில்லை,
பொதுமக்கள் யாருக்கும் எவ்வித தீங்கும் இன்றி அந்தப் போராட்டங்கள் நடைபெற்றது. நிச்சயமாக ஆளும் மத்திய அரசிற்கு எதிராக ஒரு தேசிய பேர் இயக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வளர்ந்து வந்தது என்பதே உண்மை. அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஆளும் மத்திய அரசு தனது அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய பல மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டி அதனை செயல்படுத்த தொடங்கியது. அதன் சிறு வெளிப்பாடு தான் ஆளுநர் ரவி சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து சில கருத்துக்களை
சம்பந்தமின்றி பதிவு செய்தார்.
சரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய எளிய வழி என்னவென்றால் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதே அன்றி வேறு எதுவும் இல்லை. அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் மீது எவ்வித தேச துரோக வழக்குகளோ அல்லது வெடிகுண்டு வழக்குகளோ கிடையாது.
அந்த சூழ்நிலையில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் NIA தேசிய புலனாய்வு முகமை மூலம் அதிரடி சோதனை என்ற பெயரில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தில் கடுமையாக பணியாற்றியவரும் உறுப்பினர்களை தேர்வு செய்து கைது செய்து அவர்களை மக்கள் விரோதிகளாக
சித்தரிக்க செய்யப்பட்டதே இதற்கு முன் நடந்த சோதனைகளும் கைதுகளும் ஆகும்.
அப்படி அவர்கள் கைது செய்ததில் எனக்கு நேரடியாக தெரிந்த நபர் என்றால் அவர் மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முகமது யூசுப் ஆவார். பழக்கத்திற்கு மிகவும் எளிமையான அந்த நபர், தனது வாழ்க்கையையும்
எளிமையாகவே வாழக்கூடிய ஒரு நபர். இந்தியா முழுவதும் பல்வேறு அடித்தள மக்களின் பிரச்சினைக்காக சுற்றி கொண்டிருப்பவர். தனது குழந்தைகளை ஒரு சாதாரண பள்ளியில் படிக்க வைத்து மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் ஒரு நபர். ஆனால் அவரையும் மக்கள் விரோதியாக சித்தரித்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த
கைது நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு அமைப்பின் வளர்ச்சியை தடுக்கவும் அவர்களின் அரசியல் செல்வாக்கினை குறைக்கவும் அரசு அவர்களை மக்கள் விரோதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிப்பது மிகவும் கொடுமையானது. சாதாரண மக்களின் மனதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் வெறுப்புணர்வு
மற்றும் பகை உணர்ச்சியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவது மிகவும் கீழ்த்தரமான மனிதாபிமானம் அற்ற செயல். எனவே அரசு கூறும் தகவலை உண்மை என அப்படியே நம்பாமல் அதில் இருக்கும் உண்மை தன்மை குறித்து ஆராய்ச்சிகள் செய்தோமானால் ஏன் இவ்வளவு அவசரமாக சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மற்றும்
அதனை தொடர்ந்து அவசர அவசரமாக ஏன் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினை தடை செய்தார்கள் என புலப்படும்.
மொத்தத்தில் ஒரு கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்போர் அனைவரும் தேசிய விரோதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனை நிறைந்த உண்மை.
க. நவநீதராஜா,
வழக்கறிஞர்,
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை.
@CMOTamilnadu
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு NIA சோதனை சம்மந்தமாக மதுரை வழக்கறிஞர் M.M.Abbas உரிமையுடன் எழுதும்✍️ கடிதம்!
***************
இக்கடிதம் இறைவனின் அருளால் உங்களை நல்ல உடல் நலத்துடனும்,மன நலத்துடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன்.
கடந்த 22.09.22 அன்று ஒன்றிய
பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை[NIA] தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் சிலரின் வீடுகளில் சட்டவிரோத சோதனை நடத்தி அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
முஸ்லிம் சமூகத்தின் மீதும்,முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களின் மீதும்
தீராத மத வெறுப்பு கொண்டதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசு என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் சமூகத்தால் நடத்தப்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பாரதிய ஜனதா அரசும் அதன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையான NIAவும் வெறுப்பு
பெட்ரோல் குண்டு வீசியதாக உயிரிழந்த நபரை கைதுசெய்ய வந்த இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.!
************************
நேற்று இராமநாதபுரத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக திருப்புலாணியை சார்ந்த முஸ்லிம் ஒருவரை விசாரணை செய்ய
வேண்டும் என கைது செய்ய வந்துள்ளனர் காவல்துறையினர். ஆனால் காவல்துறையினரால் விசாரணை செய்ய வந்த நபர் கொரோனாவால் உயிரிழந்து ஒருவருடம் ஆகிவிட்டது. அதற்கான இறப்பு சான்றிதழை கைது செய்ய வந்த காவல்துறையினரிடம் அந்த குடும்பத்தார்கள் அளித்த அடுத்த நிமிடம் அந்த இடத்திலிருந்து
வேகமாக சென்றுள்ளனர் காவல்துறையினர். ஒரு வருடத்திற்கு முன்பாக கொரோனாவால் இறந்த ஒருவரை நேற்று நடந்த ஒரு சம்பவத்திற்கு தேடி வந்திருக்கிறார்கள் என்றால் தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களை வேட்டையாட துவங்கிவிட்டதா என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நான் எப்போதும் மோடி ஜியை விமர்சிப்பேன், ஆனால் இன்று அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உனக்கு தெரியுமா:
மோடி இரண்டு முறை பிறந்தார் - முதலில் 29 ஆகஸ்ட் 1949 அன்று (அவரது பட்டப்படிப்பில்) மற்றும் இரண்டாவது
செப்டம்பர் 17, 1950 இல் (பொதுக் களத்தில் கிடைக்கும்).
1950 ஆம் ஆண்டு பிறந்த மோடி, வாட்நகர் ரயில் நிலையத்தில் 6 வயதில் தேநீர் விற்றார், ஆனால் வாட்நகரில் தண்டவாளங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973 ஆம் ஆண்டு மோடியின் 23 வயதில் கட்டப்பட்டது.
மோடி எமர்ஜென்சியின் போது
நிலத்தடியில் இருந்தார், ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978 இல் பட்டம் பெற்றார்.
மோடி 1983 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமல் குஜராத் பல்கலைக்கழகத்தில் முழு அரசியல் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..!
முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..
உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...
எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!
மேலே சொன்னது அனைத்தும் உண்மை...
*எந்த வடிவிலும் பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.
*டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும்.
*அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.