சரஸ்வதி பூஜை நன்னாளில் புராணங்கள் போற்றும் கலைமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும். முதலில் கலைமகள் திருத்தலங்களை தரிசிப்போம்.
‘#சரஸ்’ என்றால் ‘#பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், #சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள்.
சரஸ்வதியின் #வாகனம்_அன்னப்_பறவை. இது, கல்வியாளர்
_களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது.
தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம்.
சரஸ்வதியின் கொடி
பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்
பட்டிருக்குமாம். இதை #சாரதா_த்வஜம்_என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்
பட்டிருக்கும்.
சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு.
#பாரதி_என்ற_பெயர்_ஏன்_தெரியுமா?
வேதங்கள் சரஸ்வதிதேவியை துதிகளின் வடிவாக #இடா’ என்றும், அறிவின் விளக்கமாக #பாரதி’ என்ற பெயரிலும், ஞான வடிவில் திகழும் அவளை `#சரஸ்வதி’ என்றும் போற்றுகின்றன. இடாதேவியா அவள் நம் வீடுகளில் வீற்றிருந்து மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கிறாள்.
பாரதி தேவி என்ற பெயரில் மக்களுக்கு கல்வி-கலை ஞானத்தை அருள்கிறாள். சரஸ்வதிதேவி வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் என்கின்றன ஞான நூல்கள்.
*விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும்... அறியாததும்...!*
காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார்.
*திருமாலின் ஏகாதசி* :
ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைபட்ட எல்லா சுபக்காரியங்களையும் நடத்தித் தந்து அருளுவார் திருமால்.
*துளசி* :
திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
*நரசிம்மர் வழிபாடு :*
நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும்.
கலைமகளின் புகைப்படத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து, அதனை மலர்களால் அலங்கரித்து, நாம் செய்யும் தொழில் சார்ந்த பொருட்களை அன்னையின் முன்பாக வைத்து வழிபாடு செய்தால், அந்த தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதனால்தான் மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் புத்தகங்களையும், வேலை செய்பவர்கள் தங்களுக்குரிய கருவிகளையும், எழுத்தாளர்கள் பேனாக்களையும் வைத்து வழிபடுவதை வழக்க மாகக் கொண்டுள்ளனர்.
இந்த நாளில் சரஸ்வதி தேவி அருளும் ஆலயங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..
கூத்தனூர் சரஸ்வதி
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே உள்ள பூந்தோட்டத்தில் சரஸ்வதி ஆலயம் ஒன்று உள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், கலைமகளை வழிபட நினைத்தார்.
தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தழைத்தோங்க வில்வ விதைகளை நல்ல சுப நாளில் வாங்கி மண்தொட்டியில் போட்டு தண்ணீர் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வில்வ கன்று விதையிலிருந்து துளிர்க்கும்.
தினசரி பஞ்சாட்சரம் செபித்து வர வேண்டும் .
ஒரு அடி வளர்ந்தவுடன் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் எதாவது ஒரு சிவன் கோவிலில் நட்டு வைத்து அதை நன்கு பராமரிக்க வேண்டும்.
அருகில் இருந்தால் தினசரி தண்ணீர் விட்டு வேலி அமைத்து கவனிக்கவும் 6 அடிக்கு மேல் வளர்ந்தவுடன் அது தானாகவே தழைக்கும்.
அந்த வில்வ இலைகளை சிவபெருமானுக்கு பயன்படும் பொழுது அனைத்து தீய கர்மாக்களும் விலகும்.
பெரும் புகழ் பாக்கியம் உண்டாகும்.ஈசன் அருளால் நன்மைகள் பல உண்டாகும்.பரம்பரை தரித்திரம், அடிமை வாழ்வு நீங்கும்.
சிவன் கோவிலில் வைக்க முடியாவிட்டால் கோவில் அருகில் வளர்க்கலாம்.