M.SivaRajan Profile picture
Oct 10 13 tweets 2 min read
#விரதம்

*விரதம் என்றால் எதுவும் சாப்பிடக் கூடாதா❓

இறைவனை நினைத்து நாள் முழுக்க அவன் நாமம் சொல்லி மனம் முழுக்க இறைவனை வியாபித்து இருக்கும் நிலையே விரதம்.
முக்கிய விசேஷ நாட்களில் குறிப்பாக மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் மேற்கொள்வது வழக்கம்.

விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவது இல்லை.
உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக் கூடாதா?.

விரதம் என்பதற்கு உண்மையான பொருள் தான் என்ன?

நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும், மன நிம்மதி கிடைத்திடவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர்ந்திடவும் இறைவனை நினைத்து இருப்பது விரதம்.
இந்து சமயத்தில் விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் எனப்படுகிறது.

நோன்பு, உபவாசம் என்பவை விரதத்துடன் தொடர்புடையதாகும்.
இறைவனின் பெயரை நினைத்து அவனருகே வசித்தல் என்பதே உபவாசம் என்று கூறப்படுகிறது. இறைவனை நினைத்து தியானித்து, பல நாட்கள் உண்ணாமல் இருப்பதாகும்.

விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்து ஐம்புலனை அடக்கி,
உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகியவை தூய்மை அடையும் என்பது பெரியோர்கள் கூறுகின்றனர்.

விரதம் என்பதற்கு, "உரிய முறையில் வழிபாடு செய்தல்" என்பது இன்னொரு பொருள்.
உரிய முறையில் வழிபாடு செய்வதற்கு அகத்தூய்மை என்பது மிக முக்கியம்.

ஒருவர் உணவருந்தாமல்
விரதம் இருந்து தேவையற்ற சிந்தனைகளை எண்ணத்தில் ஓடவிட்டால் அதில் எந்த பலனும் இல்லை.
விரதம் இருப்பவர்கள் அந்த ஒரு நாளைக்கு சுகபோக வாழ்க்கையை மறந்து, உணவு, உறக்கம் ஏதுமின்றி இறைவனின் நாமத்தை மட்டுமே ஜபித்துக்கொண்டு, அவரின் நினைப்பாகவே இருப்பதே மிக சிறந்த விரதம்.
உடம்பிற்கு முடியாதவர்கள் மதிய வேளை உணவை மட்டும் அருந்திவிட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் பால் பழம் சாப்பிடுவதில் தவறில்லை.

ஆனால் விரத நாட்களில் இறைவனின் எண்ணம் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருநாள் இரவில் மட்டும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருப்பது, ஒருநாள் முழுவதும் மோர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது, ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல், ஒரு நாள் முழுவதும் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது,
ஒரு நாள் முழுவதும் புழுங்கல் அரிசி வறுத்து நன்கு பொடி செய்து அதில் நெய், தேங்காய் துருவல், சர்க்கரை ஆகியவை போட்டு பிசைந்து
பொரிமாவு செய்து அதை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல், ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது போன்றவை.
மேலும் விரத காலங்களில் பழங்கள் மட்டும் எடுப்பது, ஒருவேளை உணவு மட்டும் எடுப்பது, உணவில் வெங்காயம், பூண்டு என்று சேர்க்காமல் சாப்பிடுவது என விரதத்தில் பல வகைகள் உள்ளது.

ஆனால் விரதங்கள் என்பது உணவு முறையில் நிறைவடைவதில்லை.
தூய்மையான உள்ளத்தில் இறைவனை முழுமையாக நிறுத்துவதில் உள்ளது.

இறைவனை நேசிப்பதில் உள்ளது.

இறைவனை மட்டும் நினைப்பதில் முழுமை அடைகிறது.

#விரதம்_பற்றிய_பதிவு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 10
#நவக்கிரக_எளிய_பரிகாரங்கள்

நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்

சூரிய பகவான்

பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார்.
தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது.
சந்திர பகவான் :

சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது.

சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது.

கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது.
Read 18 tweets
Oct 10
#திருஷ்டி_சுற்றும்_காரணம்

*திருஷ்டி சுற்றுவதன் காரணம் தெரியுமா?*

கண் பார்வை மூலமாகப் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவா்.

அதனால் தான் புதுமண தம்பதிகளுக்கும் , குழந்தைகளுக்கும், வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது வழக்கம்.
இதற்கு காரணம் அவர்கள் மீது ஏதாவது கண் திருஷ்டி இருந்தால் அது விலக வேண்டும் என்பதே.

திருஷ்டி என்பது தமிழ் சொல் இல்லை அது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண்.

திருஷ்டி கழித்தலை தமிழர்கள் 'கண்ணேறு கழித்தல்' என்று தான் கூறுவார்கள்.
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். ப்பா..!! எத்தனை அழகு. அழகோ அழகுன்னு அனைவரும் கொஞ்சும் போது ஏற்படும் திருஷ்டிக்கு பரிகாரம் தான் 'கருப்பு திருஷ்டி' பொட்டு.

இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.

நெற்றியிலும், கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை நீக்கும்.
Read 12 tweets
Oct 9
#திருமணத்தடை_நீங்க_வழிபாடு

திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய சிவன் கோயில்!

ஈரோடு மாவட்டம் ஈரோடு என்ற ஊரில் உள்ள கோயில் மகிமாலீஸ்வரர் கோயில்.

இங்கு மகிமாலீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மங்களாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை சதய நட்சத்திரத்தில் இத்தலத்தில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அப்போது அப்பர் அடிகளுக்கு சிறப்பான முறையில் விழாக்களும், சுவாமி மகிமாலீஸ்வரருக்கும், அம்பாள் மங்களாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபமும் சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோயிலின் விமானம் 35 அடி உயரத்தில் நிழல் சாயாமல் அப்படியே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது, 63 நாயன்மார்கள் சிலையும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பு.

இந்தக் கோயிலுக்கு மிக அருகில் அப்பர் சுவாமிகள் மடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read 17 tweets
Oct 9
#கடன்_நிவர்த்தி_வழிபாடு

#கடன்_நிவர்த்தி_பரிகாரம்

கடன் பிரச்சினை தீர திங்கட்கிழமையில் திருச்சேறை கோயில் சென்று வணங்குங்கள்.

திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார்

கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை.

இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீ ருண விமோசனேஸ்வரர்.

இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார்.
பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது.

என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.

அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீ ருண விமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.
Read 6 tweets
Oct 9
#சப்த_மங்கை_ஸ்தலங்கள்

மிக முக்கியமான பதிவு :

கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள சப்த மங்கை தலங்கள் :

‘சப்த மாதர்கள்’ தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது.

இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.
பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு பேரும், ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் எழுவரும் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 ஆலயங்கள், கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது.
இந்த 7 ஆலயங்களும், ‘சப்த மங்கை தலங்கள்’ என்ற பெயரில் விளங்குகின்றன.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரையில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய 7 பருவங் களைக் கடந்து வருகிறாள்.
Read 21 tweets
Oct 9
#ஸ்ரீ_சிவ_தள_பூஜை

அனைத்து  துன்பங்களையும்  நீக்கும் எளிமையான  பஞ்ச ஸ்ரீ சிவ தளப் பூஜைகள்

நவராத்திரி போல, மாசி மாத மகாசிவராத்திரி போல, பெளர்ணமி இரவு கிரிவலம் போல, மாத சிவராத்திரி நாளில்
இரவில் வீட்டில் அல்லது ஆலயத்தில் சிவ பூஜைகளை (அர்ச்சனை, சிவகவசம், சிவபுராணம், தமிழ் மறைகளை ஓதுதல்) ஆற்றுதல் வேண்டும்.

வளர்பிறைப் பிரதோஷம், தேய்பிறைப் பிரதோஷம் இரண்டிலுமே, சுயம்புத் தலங்களில் பூஜித்து வருதல்,
தேய்பிறைப் பிரதோஷத்தை அடுத்து வருவதான மாத சிவராத்திரி நாளில் அருணாசல கிரிவலம் போன்று மலைத் தலங்களில் கிரிவலம் வருதல்  மிகவும் சிறப்புடையவை!

வாழ்வில் பலத்தத் துன்பங்களுடன் வாழ்வோர் இவ்வழிபாடுகளை மிக மிக எளிமையான வகையில்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(