கண் பார்வை மூலமாகப் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவா்.
அதனால் தான் புதுமண தம்பதிகளுக்கும் , குழந்தைகளுக்கும், வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது வழக்கம்.
இதற்கு காரணம் அவர்கள் மீது ஏதாவது கண் திருஷ்டி இருந்தால் அது விலக வேண்டும் என்பதே.
திருஷ்டி என்பது தமிழ் சொல் இல்லை அது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண்.
திருஷ்டி கழித்தலை தமிழர்கள் 'கண்ணேறு கழித்தல்' என்று தான் கூறுவார்கள்.
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். ப்பா..!! எத்தனை அழகு. அழகோ அழகுன்னு அனைவரும் கொஞ்சும் போது ஏற்படும் திருஷ்டிக்கு பரிகாரம் தான் 'கருப்பு திருஷ்டி' பொட்டு.
இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.
நெற்றியிலும், கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை நீக்கும்.
கோயில்களில் தரும் ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.
இதையடுத்து இளைஞர்களுக்கு வரும் திருஷ்டி. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி நிறுத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும்,
வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க.
நீரில் உப்பு கரைவது போன்று திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் ,
இவையனைத்தையும் சேர்த்து கொண்டு பெரியவர்களை தெருவாசலில் கிழக்கு பக்கமாக நிறுத்தி மண்சட்டிக்குள் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று தடவை சுற்றி
தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள்.
அதுமட்டுமின்றி கையோடு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள்.
இதனால் மற்ற யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும்
பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்திட வேண்டும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.
இன்னும் ஒரு சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவையனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு,
நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
இப்படி பல விதமாக கண் திருஷ்டியை கழித்தாலும், நரசிம்மர், காளி மற்றும் துர்கை போன்ற தெய்வங்களை வழிபடும் இடத்தில எந்த ஒரு கண் திருஷ்டியோ அல்லது தீய சக்தியோ நெருங்க முடியாது.
ஆகையால் அது போன்ற இடங்களில் திருஷ்டி சுற்ற வேண்டிய அவசியம் இல்லை.
பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார்.
தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது.
சந்திர பகவான் :
சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது.
சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது.
கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது.
இறைவனை நினைத்து நாள் முழுக்க அவன் நாமம் சொல்லி மனம் முழுக்க இறைவனை வியாபித்து இருக்கும் நிலையே விரதம்.
முக்கிய விசேஷ நாட்களில் குறிப்பாக மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் மேற்கொள்வது வழக்கம்.
விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவது இல்லை.
உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக் கூடாதா?.
விரதம் என்பதற்கு உண்மையான பொருள் தான் என்ன?
நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும், மன நிம்மதி கிடைத்திடவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர்ந்திடவும் இறைவனை நினைத்து இருப்பது விரதம்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு என்ற ஊரில் உள்ள கோயில் மகிமாலீஸ்வரர் கோயில்.
இங்கு மகிமாலீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மங்களாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை சதய நட்சத்திரத்தில் இத்தலத்தில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அப்போது அப்பர் அடிகளுக்கு சிறப்பான முறையில் விழாக்களும், சுவாமி மகிமாலீஸ்வரருக்கும், அம்பாள் மங்களாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபமும் சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோயிலின் விமானம் 35 அடி உயரத்தில் நிழல் சாயாமல் அப்படியே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது, 63 நாயன்மார்கள் சிலையும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பு.
இந்தக் கோயிலுக்கு மிக அருகில் அப்பர் சுவாமிகள் மடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் பிரச்சினை தீர திங்கட்கிழமையில் திருச்சேறை கோயில் சென்று வணங்குங்கள்.
திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார்
கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை.
இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீ ருண விமோசனேஸ்வரர்.
இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார்.
பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது.
என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.
அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீ ருண விமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.