பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார்.
தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது.
சந்திர பகவான் :
சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது.
சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது.
கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது.
(இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும்.
அங்காரக பகவான்
உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர்.
ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும்.
மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து, ஏதாவது ஒரு முருகன் கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும்.
புதன் பகவான்
வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப்புலமை தருவது புதனே. புதன் தோஷத்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை உபவாசமிருந்து கோவில் ஒன்றில் தீபம் ஏற்றுவது,
புதன்கிழமையில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை, புத்தகம், உணவு வழங்குவது எளிய பரிகாரமாகும்.
குரு பகவான்
விவாகத்திற்கும், குழந்தை பாக்கியத்திற்கும் குரு பலன் அவசியம்.
வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் திருக்கோவில் ஒன்றில் நெய்தீபம் ஏற்றுவதாலும்,
வியாழன் அன்று பெரியவர்கள், துறவிகள், சாதுக்களை வணங்கி ஆசி பெறுதலும், குரு தோஷ பரிகாரமாகும்.
சுக்கிர பகவான்
"சுக்கிரன் என்ற கிரகம் இல்லாவிடில் உலகமே காவி உடுக்கும்'' வாழ்க்கை தரும் சுகங்களை அனுபவிப்பதற்கு, ரசிப்பு தன்மை - ரசிக்கும் மனோபாவம், கலையுள்ளம் வேண்டும்.
இதை அளிப்பவர் சுக்கிர பகவானே.
சுக்கிரனின் தோஷத்தில் அகமிழந்து வேதனை அடைவோர் அரங்கனின்(ஸ்ரீரங்கம்)சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை நீராடி, உபவாசம் இருந்து, ஏழை சுமங்கலிப் பெண்ணிற்கு ஆடை, ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வது எளிய பரிகாரமாகும்
சனி பகவான்
ஜாதகத்தில் சனிபலம் பெற்றிருந்தால் நீண்ட ஆயுளும், குறைவிலா செல்வமும் பெறுவார்கள்.
கொடிய விபத்திலும் ஆயுளை பாதுகாக்கும் சக்தி கொண்டவர் சனி.
செய்த தவறுக்கு அந்த செயலாலே அழிவு ஏற்படுத்துபவர் சனிபகவான்.
வீட்டில் சனிக்கிழமை விரதமிருந்து மாலை தீபம் ஏற்றுவது, எள் கலந்த சாதம், ஏழை எளியவர்க்கு உணவு கொடுப்பது எளிய சனி தோஷப் பரிகாரமாகும்.
ராகு பகவான்
தவறான காதலில் விழுந்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அதில் ராகுவின் பங்குள்ளதை அறியலாம்.
இத்தகைய ஜாதகம் அமைந்த பெண்களுக்கு கூடிய வரையில் ராகுவின் ஆதிக்கம் வருவதற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது.
ஜாதகத்தில் புத்திரதோசம், சயன தோஷம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு பிரீதி செய்து கொள்வது அவசியமாகும்.
அருகில் உள்ள திருக்கோவில் ஒன்றில் இடைவிடாது எரிந்து கொண்டுள்ள கர்ப்பக்கிரக விளக்கில் முடிந்தபோதெல்லாம் நெய் சேர்த்து வருவது எளிய பரிகாரமாகும்.
கேது பகவான்
கேது இல்லையேல் சொர்க்கம் காலியாகும்.
கேது சுபமாயிருந்தால் ஆன்மீகத்தில் நாட்டமும் உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும் ஏற்படும்.
பாப விமோசனத்தை அளிப்பவர் கேது.
பிறவிப் பிணியறுப்பவர் கேது.
கேது தோஷம் ஏற்பட்டால் சர்ம ரோகம், பில்லி சூன்ய துன்பங்கள், ஒழுக்கமற்ற பெண் சேர்க்கை ஏற்படும்.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் கோவிலில் 100 கிராம் நல்லெண்ணை தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வரவும்.
கண் பார்வை மூலமாகப் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவா்.
அதனால் தான் புதுமண தம்பதிகளுக்கும் , குழந்தைகளுக்கும், வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது வழக்கம்.
இதற்கு காரணம் அவர்கள் மீது ஏதாவது கண் திருஷ்டி இருந்தால் அது விலக வேண்டும் என்பதே.
திருஷ்டி என்பது தமிழ் சொல் இல்லை அது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண்.
திருஷ்டி கழித்தலை தமிழர்கள் 'கண்ணேறு கழித்தல்' என்று தான் கூறுவார்கள்.
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். ப்பா..!! எத்தனை அழகு. அழகோ அழகுன்னு அனைவரும் கொஞ்சும் போது ஏற்படும் திருஷ்டிக்கு பரிகாரம் தான் 'கருப்பு திருஷ்டி' பொட்டு.
இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.
நெற்றியிலும், கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை நீக்கும்.
இறைவனை நினைத்து நாள் முழுக்க அவன் நாமம் சொல்லி மனம் முழுக்க இறைவனை வியாபித்து இருக்கும் நிலையே விரதம்.
முக்கிய விசேஷ நாட்களில் குறிப்பாக மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் மேற்கொள்வது வழக்கம்.
விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவது இல்லை.
உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக் கூடாதா?.
விரதம் என்பதற்கு உண்மையான பொருள் தான் என்ன?
நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும், மன நிம்மதி கிடைத்திடவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர்ந்திடவும் இறைவனை நினைத்து இருப்பது விரதம்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு என்ற ஊரில் உள்ள கோயில் மகிமாலீஸ்வரர் கோயில்.
இங்கு மகிமாலீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மங்களாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை சதய நட்சத்திரத்தில் இத்தலத்தில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அப்போது அப்பர் அடிகளுக்கு சிறப்பான முறையில் விழாக்களும், சுவாமி மகிமாலீஸ்வரருக்கும், அம்பாள் மங்களாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபமும் சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோயிலின் விமானம் 35 அடி உயரத்தில் நிழல் சாயாமல் அப்படியே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது, 63 நாயன்மார்கள் சிலையும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பு.
இந்தக் கோயிலுக்கு மிக அருகில் அப்பர் சுவாமிகள் மடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் பிரச்சினை தீர திங்கட்கிழமையில் திருச்சேறை கோயில் சென்று வணங்குங்கள்.
திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார்
கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை.
இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீ ருண விமோசனேஸ்வரர்.
இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார்.
பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது.
என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.
அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீ ருண விமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.