#அறிவோம்கடை - #அறிவோம்_சென்னை
ரொம்ப நாளா நீங்க கேட்டு சென்னை லிஸ்ட் போடவே முடியல.. மன்னிக்கவும்..
இப்போ List - 1 தயார்..இதோ உங்களுக்காக.. List - 2 வரும் வெள்ளிக்கிழமை கண்டிப்பா போஸ்ட் செய்யறேன்.
எப்பவும் சொல்றது தான். இது வியாபார நோக்கத்துடன் தயார் செய்யப்பட்ட லிஸ்ட் இல்லை.
இந்த லிஸ்ட் ல இருக்கர கடை சில பேருக்கு ரொம்ப பிடிக்கலாம், சில பேருக்கு பிடிக்காம போகலாம். சாப்பாடு எப்போதுமே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். எனவே "Take it as just info'
அடுத்த லிஸ்ட் ல இன்னும் ஒரு 25 கடைகள் இருக்கு. இங்கேயே thread ல பதிவிடறேன்.
*****Its not paid post*******
Skip 18th..
Thats different list.. By mistake added in chennai list.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அறிவோம்கடை : தம்பியண்ணன் இயற்கை நாட்டுக்கோழி விருந்து, கடத்தூர் பிரிவு, கணேசபுரம்
இந்த கடையை பற்றி எழுத ரொம்ப நாளா தவணை. இங்க நிறைய முறை சென்றிருக்கேன். இவங்க special மதிய உணவு தான்.
எப்போ இங்க போனாலும் Non veg மீல்ஸ் தான் சாப்பிடுவேன். உடன் கோச்சை கோழி வறுவல். எங்க போனாலும் பிராய்லர் தான் கிடைக்குது.. இந்த கோச்சை சாப்பிடவே இங்க போவேன். இவங்க நாட்டுக்கோழி குழம்பு கூட ரெண்டு வகையான ரசம் தருவாங்க.. அதுல பச்சை புளி ரசம் சும்மா அல்டிமேட் ஆக இருக்கும்👌
போன முறை போனப்போ மீல்ஸ் தீர்ந்திருச்சு னு. நாட்டுக்கோழி பிரியாணி வாங்கினேன். சீரக சம்பா அரிசில நல்லா இருந்திச்சு. அளவு போதுமானதாக இல்லை😓 ஆனா கொஞ்சம் white rice கேட்டாலும் தருவாங்க.. வாங்கி ரசம் போட்டு சாப்பிடுங்க👌
சமீபத்தில் திவ்யா என்ற பெண் தன் அனுபவத்தை கோவை புட் குரூப்பில் பகிர்ந்திருந்தார் .
சுருக்கமாக இங்கே :
இந்த ஆர்யாஸ் ஹோட்டல் ( ஓமலூர் #omalloor , கேரளா ) லில் restroom மட்டும் பயன் படுத்திவிட்டு , சாப்பாடு ஏதும் சாப்பிடாமல் வெளியேறி இருக்கார் . அதை பார்த்த உரிமையாளர்
உணவு ஏன் சாப்பிடலை னு கேட்டிருக்கார் . உடம்பு சரி இல்லை , நான் வேண்டும் என்றால் பார்சல் எதாவது வாங்கி கொள்கிறேன் னு சொல்லி இருக்கார். அதற்கு அந்த உரிமையாளர் இதென்ன 'Public Toilet' ah , யார் வேணா வந்து பாத்ரூம் போக .. ஒழுங்கு மரியாதையா 500 ரூபாய் எடு னு மிரட்டி இருக்கார்
இந்த பெண் கொடுக்க மறுத்து இருக்கார் . எந்த ஹோட்டல் போனாலும் இலவச தண்ணீர் , இலவச பாத்ரூம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஹோட்டல் களின் கடமை னு சொல்லி இருக்கார் . இதை கேட்டு கெட்ட கெட்ட வார்த்தையில் அந்த பெண்ணை திட்டி இருக்கார் . தாங்க முடியாம அங்கயே அழுது இருக்கார் .
நான் சில வருடங்கள் முன்னாடி ஒரு மருத்துவரிடம் பேசிட்டு இருந்தப்போ அவர் சொன்னது.. முடிஞ்ச அளவு குழந்தைகளை வெளிய சாப்பிடுவதை தவிர்த்திடுங்க.. அதுலயும் இந்த சவர்மா னு ஒன்னு விக்கறாங்க ல அதை ஒரு முறை கூட ஆசைக்கு வாங்கி கொடுத்திட வேண்டாம். அதை ஒரு நாள் சாப்பிடுவது என்பது
ஒரு மாசம் junk food சாப்பிடுவதற்கு சமம்னு சொன்னார்.கூடவே coke or any carbonated drinks(Disolved carbondioxide gas)அது மதுவிற்கு மேல் தீங்கானதுனு குழந்தைக்கு சொல்லி வளர்க்க சொன்னார்.சவர்மா எவ்ளோ கேடானது,இதை நிறைய பேருக்கு தெரியப்படுத்தனும்னு தயார் செஞ்சது தான் மேல இருக்கற போஸ்டர்.
இப்போ சமீபத்தில் ஒரு பெண் சவர்மா சாப்பிட்டு இறந்தார் மேலும் நிறைய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி னு செய்தி எல்லாரும் படிச்சிருப்பீங்க. கூடவே ஒரு மருத்துவர் சொல்ற அறிவுரையும் இங்கே பகிருந்துள்ளேன். படிங்க
#அறிவோம்கடை : Chin chin, Residency Towers,CBE
நான் நேத்து போஸ்ட் செஞ்ச பில் இங்க சாப்பிட்டது தான். இதுதான் முதல் முறையும் கூட.இது தான் கடைசி முறைனும் சொல்லலாம்.சில elite people கொடுத்த பில்ட்அப் எல்லாம் பார்த்து தான் இந்த ரெஸ்டரண்ட்க்கு போனேன்.சரி hypeக்கு worth ஆனு பார்க்கலாம்
இவங்க கிட்ட மெனு கார்டு கிடையாது.மெனுவை தெரிந்துகொள்ள இதோ கீழே படத்தில் உள்ளது போல் ஒரு QR கோட் இருக்கும் அதை ஸ்கேன் செய்தால் எல்லா dishes ம் விலையுடன் பார்த்து கொள்ளலாம்.நாங்க எல்லா dishesம் விலை பார்த்து தான் ஆர்டர் செய்தோம்.ஆனால் அளவு அதற்கு ஏற்றதாக இருந்ததா?வாங்க பார்க்கலாம்
Lung Fung Soup : 2.5/5
ரொம்ப சுமாரான சூப். ஒரு சூப் வாங்கி அதை 1 by 2 ஆக தர சொன்னோம்.
அளவு வகையில் இதை குறை சொல்ல முடியாது.. ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாராக தான் இருந்திச்சு. இதன் விலை : ₹300/-
#அறிவோம்கடை : மதுரை ஜிகர்தண்டா, Near Ramakrishna Hospital, Coimbatore.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா கடை பற்றி எழுதி இருந்தேன். அங்க எந்த ஒரு தனித்துவ சுவையும் இல்லாமல் நார்மல் ஆக இருந்திச்சு. ஆனா இங்க நான் எதிர்பார்கல இவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் னு.
Nuts Jigarthanda : 4.5/5
வேற எங்கேயும் இந்த nuts ஜிகர்தண்டா நான் சாப்பிட்டதில்லை.. முந்திரியை மிக அருமையா roast செஞ்சு அதை இந்த ஜிகர்தண்டா ல mix செஞ்சிருக்காங்க..சாப்பிடும் போது roasted nuts சுவை தனியா தெரியும். கோவையில் இப்போ வரை இது தான் பெஸ்ட் ஜிகர்தண்டா👌👌👌
Special Jigarthanda: 3.75/5
இது நம் எல்லா பக்கமும் கிடைக்கும் ஜிகர்தண்டா தான். முதலில் nuts சாப்பிட்ட காரணத்தால் இதன் சுவை பெருசா தெரியல.. ஆனா குறை ஏதும் சொல்ல முடியாது..