நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சவுபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம்.
ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும்.
இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்யவேண்டும்.
மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிக மிக உயர்வானது.
அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம்.
அது மகா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது.
அந்நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும்.
இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
சதுர்த்தியின் மகிமை:
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார்.
ஸ்காந்தத்தில் எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும்.
காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற் கொண்டார்.
பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்.
முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
பார்வதி! ஆண்டுக்காலம் விரத்தைத்தை மேற் கொண்டு தன் பதியை அடைந்தாள்.
இந்திரன், ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
அனுமன் சீதையைக் கண்டதும், தமயந்தி நளனை அடைந்தது.
அகலிகை கவுதமரை அமைந்தது போன்றவை நிகழ்ந்ததும் விரதத்தின் மகிமையால் தான்.
சங்கடஹர சதுர்த்தி!
சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள்.
சுக்ல பட்ச (வளர்பிறை) சதுர்த்தியை வரசதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை சதுர்த்தியை) சங்கடஹர சதுர்த்தி என்றும், சங்கஷ்டஹர சதுர்த்தி என்றும் கூறுவர்.
நடுப்பகல் வரையுள்ள சுக்ல சதுர்த்தியும், இரவில் சந்திரோதயம் வரை நீடிக்கின்ற கிருஷ்ண சதுர்த்தியும் விரதத்திற்கேற்றவை.
சங்கட ஹர சதுர்த்தியில் பகலில் உபவாசம் இருப்பர்.
இரவு சந்திரனை கண்டதும் அர்க்கியம் தந்து, பூஜையை முடித்து பின் உண்பர்.
விநாயகரது திருவருளால் சிவபெருமாள் முடியில் இருக்கும் பேறு பெற்றார்.
அவனியைத் தாங்கவும், விநாயகருக்கு உதரபந்தனமாக இருக்கவும் திருமாலின் படுக்கையாகவும் ஆகும் வரம் பெற்றார்.
சங்கர ஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெறுவார்கள்.
செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து இன்பங்களையும் அடைவார்கள்.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியிலிருந்து 12 மாதங்கள் பிரதி மாதமும் அனுஷ்டித்து, விநாயகர் சதுர்த்திக்கு முந்திய தேற்பிறை சதுர்த்தியான மஹா சங்கட ஹர சதுர்த்தியன்று முடிக்கும் மரபும் உண்டு.
இவ் விரதத்தை ஓராண்டு, அதாவது விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி வரை, உறுதியுடன் அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர்.
இத்தகைய சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை வருடம் முழுவதும் அனுஷ்டிக்க முடியாதவர்கள்,
மஹா சங்கட ஹர சதுர்த்தி தினத்திலாவது அனுஷ்டித்தால் ஒரு வருடம் விரதம் கடைபிடிக்க பலனை விநாயகரின் அருளால் பெறுவார்கள் என்பது உறுதி.
அதிகம் சாப்பிட்டால் 'சாப்பாட்டு ராமன்' என்று ஏன் கூறுகிறார்கள்?
ராமனுக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
ஒருவர் சாப்பாட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது அல்லது விரும்பி சுவைத்து, ரசித்து, ஆக்ரோஷமாக சாப்பிடும் பொழுது அவர்களை நாம் சரியான ‘சாப்பாட்டு ராமன்’ என்பர்.
போதும் போதும் என்கிற அளவிற்கு வயிறு முட்ட சாப்பிடும் இந்த சாப்பாட்டு பிரியர்களை இப்படி கூறுவதற்கும், சாப்பாட்டு ராமன் என்கிற பெயரில் இருக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
இதற்கு பின்னணியில் இருக்கும் கதை காரணம் என்ன? என்கிற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ஸ்ரீ ராமர் ராவணனைப் போரில் வென்று விட்டு அயோத்தி திரும்பும் சமயத்தில் தன் குருவாகிய பரத்வாஜ முனிவரை காண விழைந்தார்.
அவருடைய ஆசியைப் பெற்றுக் கொண்டு பின்னர் அயோத்தி திரும்புவதாக முடிவு செய்தார்.
வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை.
அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்று கூட சிலர் சிறப்பித்திருக்கிறார்கள்.
திருப்பதி நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.
சேஷாத்திரி,
நீலாத்திரி,
கருடாத்திரி,
அஞ்சனாத்திரி,
வ்ருஷபாத்ரி,
நாராயணாத்ரி,
வேங்கடாத்ரி
ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்ற திருநாமம்.
திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும்,
பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.