#சத்சங்கம் நம் இந்து மதத்தில் சத்சங்கத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. சத் சங்கம் என்றால் நல்லவர்களுடனான சேர்க்கை, அதனால் விளையும் நற்பலன்கள். ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது சத்சங்கம். #விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம்
தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து
வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய தீர்மானித்தார். யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார் வசிஷ்டர். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், நாமும் போய் அதைப்பெற வேண்டும் என்று
புறப்பட்டு வந்தார். ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டார். அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கோபம் அடைந்தார். “ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப் படுத்திவிட்டீர். தானம் வாங்கவந்த என்னை வெறும் கையுடன் அனுப்ப நினைத்து
விட்டீர்” என்றார். அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், “விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம்! பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சாவகாசப்பலன், ஒரு நாழிகை (24 - நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அதைக் கேட்டதும்
விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார். அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை. “சரி! விஸ்வாமித்திரரே! நீங்கள் போய், உலகுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் சூரியனையும், பூமியைத் தாங்கும் ஆதிசேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள்!” என்றார். சற்று யோசித்த விஸ்வாமித்திரர், சரி போய்த்தான்
பார்ப்போமே என்று எண்ணிப் புறப்பட்டார். ஆதிசேஷனிடம் தகவலைச் சொல்லி அழைத்தார். ஆதிசேஷன், “சுவாமி! நான் வந்துவிட்டால், என் வேலையை யார் செய்வது?” எனக் கேட்க, விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார். சூரியபகவானோ, “சுவாமி! உங்களுடன் நான் வந்தால், என் வேலையை யார்
செய்வார்கள்? உலகம் இருண்டுபோய்விடாதா?” எனச் சொல்லி மறுத்தார். விஸ்வாமித்திரர் திரும்பி வந்து, நடந்தவற்றை வசிஷ்டரிடம் சொன்னார். உடனே வசிஷ்டர், “அப்படியா? சரி! ஒரு நாழிகை சத்சங்க சாவகாசசப் பலன் என்னிடம் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் கால் பங்கை ஆதிசேஷனுக்கும் கால் பங்கை சூரிய
பகவானுக்கும் அளிக்கிறேன்.
இப்போது போய்க் கூப்பிடுங்கள்” என்றார். விஸ்வாமித்திரரும் போய் ஆதிசேஷனிடமும் சூரிய பகவானிடமும் தகவல் சொல்லி அழைத்தார். அவர்கள் இருவரும் உடனே வந்து விட்டார்கள். “முதலில் மறுத்த நீங்கள், இப்போது வருகிறீர்களே எப்படி? இப்போது மட்டும் உங்கள் வேலையை யார்
செய்வார்கள்?” எனக் கேட்டார். வசிஷ்டர் அளித்த கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலன் எங்கள் வேலையைச் செய்யும் என்று ஆதிசேஷனும் சூரியபகவானும் பதில் அளித்தார்கள். விஸ்வாமித்திரருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. சத்சங்க சாவகாசப் பலன், அதாவது நல்லவர்களின் கூட்டுறவு-சேர்க்கை எப்படிப்பட்ட
சக்தி படைத்தது என்பதை உணர்ந்தார். பணிவோடு, வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலனைப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார். திரும்பிய விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்தை நெருங்கும்போது, ஆசிரம வாசலில் மகாவிஷ்ணுவைப் போலத்தோற்றம் கொண்ட இருவர் இருப்பதைப் பார்த்தார். அவர்களை
நெருங்கி விஸ்வாமித்திரர் கேட்பதற்குள், அவர்களே விஸ்வாமித்திரரை நெருங்கி வந்து, “சுவாமி! நாங்கள் பகவானின் ஏவலர்கள். பகவான் ஸ்ரீராமராக அவதாரம் செய்யப் போகிறார். அப்போது சீதாதேவிக்கும் ஸ்ரீராமருக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பகவான்
அறிவித்து விட்டு வரச் சொன்னார். எல்லாம் சத்சங்க சாவகாசப்பலன்” என்று சொல்லிச் சென்றார்கள். அதன்படியே யாக பாதுகாப்பிற்காக ஸ்ரீராமரையும் லட்சுமணனையும் விஸ்வாமித்திரர் அழைத்துப் போனார். பின் சீதா கல்யாணம் இனிதே நிகழ்ந்தது. நல்லவர்களின் தொடர்பு என்ன பலனைத் தரும் என்பதை விளக்குகிறது
#MahaPeriyava A family went to have the darshan of Maha Periyava. Along with them, they took one of their family friends who had been living in the USA for some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron.
He went along with them, utterly disinterested in meeting Him. He was under the impression that Maha Periyava was a fundamentalist, an uneducated monk. This NRI had no great respect for Him at all. Not only that, he uttered such inauspicious things about Him, “What does He know?
Does He know English?”
There was a big throng of devotees at the Mutt and the family was standing at a decent distance from Him. As usual, Maha Periyava saw this family with His graceful eyes, and called all of them near Him.
They all went near Him, the friend too. After all the
முக்கூர் #ஸ்ரீமதழகியசிங்கர் சாமான்யமான லௌகிக விஷயங்களின் மூலம் ஆழமான சம்பிரதாயக் கருத்துக்களை சிஷ்யர்களின் மனதில் பதிய வைப்பதில் வல்லவர். ஒரு சமயத்தில் சிஷ்யர் ஒருவா் ஸ்ரீமதழகியசிங்கரிடம் விண்ணப்பித்தார், ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள
தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது சாத்யமா? என்று கேட்டார்.
ஸ்ரீமதழகியசிங்கரும் “ஆஹா! அளக்கலாமே! நாளை வரும்போது ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா” என்றார். அந்த சிஷ்யரும் மறுநாள்
பேப்பா் பேனா ஸகிதமாக வந்தார்.
ஆசார்யனும், “இந்த பேப்பரில் என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் பத்னீ, என் புத்ரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் வேஷ்டி என்று உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில்
#choose_your_teacher_wisely
There lived a woodcutter named Mari who was a big devotee of Sri Krishna. He will go to the temple first thing in the morning and then go to the forest to cut wood. One day he saw a fox which had lost its front feet. It was just lying under a tree.
The wood cutter became curious. How will this fox hunt and eat when it has no legs he wondered. His query was soon answered. A tiger appeared there with its hunted prey, ate to its heart content and went away leaving the rest. The fox moved slowly and came to the prey and ate
till it was full. The wood cutter got an idea observing this! He thought when God could provide food for this animal with no effort on its part why wouldn’t He provide all my requirements, especially being a devotee of Him. So he decided to not work from the next day onwards. He
#சனாதனதர்மம் ராமர் காட்டில் இருக்கும் போது ஓர் ஆற்றங்கரையில் துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக்
கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்வி தான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான். துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச்
சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம், இரண்டு குரங்குகள் அவர் எதிரே வந்து அமர்ந்து அந்த ரொட்டிகளை எப்படி
#மகாபெரியவா
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார் மெட்ராஸ்ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரில எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் நெருங்கிய நண்பர் ஒருவர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு
வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது. வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரில இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார். அந்த வித்வானுக்கு கால் கிடையாது. அவர் சம்சாரம்
அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா. இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினின்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ்ல இவா தான் அட்ராக்ஷன்.
பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால
#புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
ஆண்டு
முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் #விஷ்ணு_சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையை தரும். அந்த வகையில் இன்று 15.10.2022 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆகும். விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து
வீட்டிலிருக்கும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படத்தின் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும். பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். விஷ்ணு