M.SivaRajan Profile picture
Oct 17 21 tweets 3 min read
#சர்க்கரை_நோய்_நிவர்த்தி

*சர்க்கரை நோய் தீர்க்கும் தென்னகர் சிவன்!*

நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும்.

சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான்.
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன.

இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.

நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ‘தென்னகர் சிவன் கோயில்’ அமைந்துள்ளது.

இக்கோயில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் காலத்தில் உருவாகியிருக்கலாம் என்கிறது வரலாறு.
சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து நாளடைவில் சிற்றரசனாக மாறிய மளவராயன் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி பெயரும், புகழும் பெரும் செல்வங்களைப் பெற்றான்.

எனவே, தென்னகர் சிவபெருமானினின் சிவாலயத்தை புதுப்பித்துக் கட்டி வணங்கினான்.
அக்காலத்தில் இக்கோயில் மளவராய மன்னனின் அரண்மனை வளாகத்துக்குள்ளே இருந்ததாக வரலாறு கூறுகிறது.

இதற்குச் சான்றாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தாழிகள், பழங்கால போர்க் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னர் காலம் முடிந்துபோன நிலையில் இவ்வூர்
மளவராய மன்னனின் பெயரை தாங்கிய வகையில் ‘மளவராயநத்தம்’ என்ற பெயருடன் இன்றும் ஆன் மிகச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.

ஆலயத்தின் உள்ளே அற்புதமாக தத்ரூபமான உருவத்தில் தென்னகர் சிவபெருமான் லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
அவருக்கு முன்பு நந்தி பகவான் கம்பீரமாக அமர்ந்து காட்சி தருகிறார்.

ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான் வள்ளி-தெவானை சமேதராக வும், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.
இந்தப் பிராகாரத்தின் வெளிப்பகுதியில் தனிச்சன்னியில், ‘அறம்வளர்த்த நாயகி அம்பாள்’ தெற்கு நோக்கி அழகுற எழுந்தருளியுள்ளார்.

அம்பாள் திருச்சிலை சிற்பக் கலைஞர்களின் கைவண் ணத்தில் நிஜம் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இக்கோயிலிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் சிற்பக் கலைக்கு பெரும் சிறப்பு பெற்ற கிருஷ்ணராஜபுரம் சிற்பங்களுக்கு இணையாக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

தென்னகர் சிவபெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், கல்வி அறிவு பெருகும், அரசு உத்தியோகம் கிடைக்கும்,
தொழில் விருத்தியாகும், செல்வம் பெருகும், கேட்ட வரங்கள்யாவும் கிடைத்திடும் என்பது ஐதீகம்.

இதற்கெல்லாம் மேலாக தென்னகர் சிவனை வாரம்தோறும் வந்து வணங்கினால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள், மருத்துவம் ஏதும் இன்றி குணமாவதாக நம்பப்படுகிறது.
இதனை இங்குள்ள பக்தர்கள் ஆத்மார்த்தமாக உணர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

அறம் வளர்த்த நாயகி அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி, மலர் மாலை அணிவித்து வணங்கினால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதிகள் சண்டை தீர்ந்து அன்போடும், ஆனந்தமாக இணைவார்கள் என்பது ஐதீகம்.
விவாகரத்து வழக்கு வரை சென்ற தம்பதிகள் கூட அறம் வளர்த்த நாயகி அம்பாளை வணங்கி மீண்டும் இல்லற வாழ்வில் அன்பான தம்பதியர்களாக இணைந்திடுவது இன்றும் நிகழ்ந்து வருகிறது.
தென்னகர் சிவபெருமானை பக்தர்கள் வில்வ மாலை அணிவித்தும், அறம் வளர்த்த நாயகி அம்பாளை வெண்பட்டு வஸ்திரம், வளையல், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபட்டு வருகின்றனர்.

இங்குள்ள பைரவர், தட்சிணாமூர்த்தியை வணங்கினால் தோஷங்கள் தீரும்.

கோயிலின் ஸ்தல விருட்சம் அட்சய மரம்.
சிவபெருமானின் மூன்று கண் அம்சங்களை உணர்த்தும் வகையில் தென்னகர் (மளவராய நத்தம்), நடுநக்கர் (புதுக்குடி), வடநக்கர் (வெள்ளூர்) என மூன்று சிவன் கோயில்கள் இப்பகுதியில் இருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி சிவன் கோயில் மட்டும் காலமாற்றத்தால்,
சிலரது ஆதிக்கத்தால் ரெங்க ராஜபெருமாள் கோயிலாக மாறிப் போய் விட்டது. இக்கோயிலில் இருந்த நடுநக்கர் சிவபெரு மானின் சிலை வெள்ளூர் சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
மளவராயநத்தம் மற்றும் சுற்றுவட்டாரக் கிரா மங்களிலுள்ள விவசாயி கள் மழை பெய்ய வேண்டுமெனில் தென்னகர் சிவபெருமானை
தீர்த்தம் வைத்து வணங்குகின்றனர்.

வழிபாடுகளுக்குப் பின்பு அந்த தீர்த்த நீரை வெள்ளூர் கஸ்பா குளத்தில் கொண்டு ஊற்றினால் மழை பெய்யும் என்பது விவசாயிகளின் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதுபோன்று விவசாயத் தோட்டங்களில் புதியதாகக் கிணறு வெட்டுபவர்களும்,
ஆழ் துளைக் கிணறுகளை அமைப்பவர்களும் தென்னகர் சிவபெருமானை வந்து வணங்கிய பின்பே அப்பணிகளை துவங்குகின்றனர்.

தென்னகர் அருளால் விவசாயக் கிணறுகளில் கோடையில் கூட தண்ணீர் வற்றாமல் அமுத
சுரபியாக கிடைத்திடும் என்பது ஐதீகம்.
இவ்வாலயத்தில் பௌர்ணமி வழிபாடு, பிரதோஷம், சிவ ராத்திரி, சித்திரை வருடப் பிறப்பு, ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை தீப வழிபாடு, மார்கழி வழிபாடுகள் சிவபக்தர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல வருட காலமாக போதிய பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கும் தென்னகர் ஆலயத்தினை புனரமைக்கும் திருப்பணிகளை தற்போது சிவ பக்தர்கள் தங்களது தனிப்பட்ட முயற்சியாலும், ஊர் பொது மக்களின் பங்களிப்புடனும் மேற் கொண்டுள்ளனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 17
ஸ்ரீ பைரவர் அஷ்டோத்ர சதநாமாவளி :

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம Image
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 12 tweets
Oct 17
#துன்பங்கள்_விலக

*துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்!*

அளவில் மிகச் சிறிய கிராமம் துடையூர்.

அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது. Image
ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை. 

உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது.
‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார்.

ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.

சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு,
Read 20 tweets
Oct 17
#இறை_வழிபாடு

கண்களை மூடிகொண்டு இறைவனை வணங்கலாமா?

சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக் கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக் கொள்கிறார்கள்.

தீபாராதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது.

கோயிலில் உள்ள மூலவரை கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்த கண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள்.

இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள்.

அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.
எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய்.

நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.

உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை
Read 6 tweets
Oct 17
#ஐப்பசி_மாத_சிறப்பு

நாளை ஐப்பசி பிறக்கிறது. ஐப்பசி மாத விசேஷங்கள்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று  ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கிறது.

ஐப்பசி மாதம் துலாம் இராசிக்குரியது. துலாம் நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிகத்திற்குரியது.
காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.

காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
சக்தி நாயனார் குருபூஜை (18.10.22)

தேய்பிறை ஏகாதசி (20.10.22)

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.

இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.
Read 13 tweets
Oct 17
#திருச்செங்கோட்டு_மலை :

திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை" என்றும் பொருள்.

மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.

இந்த மலை உருவானதற்கு ஒரு புராணக்கதை உண்டு.
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது.

இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது.

ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும்.

வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.
இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன.

அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை.

ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.
Read 12 tweets
Oct 16
#சகல_தோஷ_நிவர்த்தி

*அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில், பாமணி*

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் 
அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது.

 சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் 
பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்
நாகநாதசுவாமி, பாம்பணிநாதர், திருப்பாதாளேஸ்வரர், ஸ்ரீபதி விண்ணகர ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.

பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு புற்று லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும்.

ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
Read 31 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(