#JustIn | சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
#JustIn | எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்!
👉இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை; எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என பழனிசாமி - பன்னீர் தரப்பு காத்திருப்பு!
👉காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற உள்ளது; 9200 பேர் வாக்களிக்க ஏற்பாடு!
👉2 நாள் வேளாண்மை மாநாடு மற்றும் கண்காட்சியை இன்று டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி!
👉எம்.பி.பி.எஸ் & பி.டி.எஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை காலை 9 மணிக்கு வெளியிட உள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
👉உணவு பாதுகாப்பு சோதனையின்போது மாதிரிகளை எடுப்பதை ஊடகங்களில் வெளியிடுவதாக அதிகாரி சதீஷ்குமாருக்கு எதிராக சென்னை ஹோட்டல்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!
#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17 போலீசார் மீது நடவடிக்கை
அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை
எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது
கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது; எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது
துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்