#DeathCleaning நாம் 60 வயதை அடைந்து விட்டால், சிறிது சிறிதாகவும், தொடர்ச்சியாகவும் ஒரு பண்பட்ட விதத்தில், கடந்த 60 வருடங்களில் சேகரித்த உலகாயுத பொருட்களை, மனதில் உள்ள பல கெட்ட படிமங்களை சுத்தம் செய்து வெளியேற்றத் தொடங்க வேண்டும். முதலில் நாம் சேகரித்து வைத்துள்ள தேவையற்ற துணிகள்
பொருட்கள், பல இடங்களில் நாம் வாங்கிய கலைப்பொருட்கள், ஞாபகார்த்த சின்னங்கள், நாம் பணிபுரிந்த இடங்களில் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், நாமே விரும்பி வாங்கிய பொருட்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை, அவை நமக்குப் பயனுள்ளதா என ஆராய்ந்து, சிறிது சிறிதாக வெளியேற்ற வேண்டும்.
வயதாகி விட்டால் இந்த உலகத்தில் நமக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். நம் குடும்பத்தாருக்கு நம்மை கவனிக்க நேரம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள், அவர்களுடைய சொந்த குடும்பம் ஆகியவை உள்ளன. நம்முடைய இறப்பிற்குப் பின் நாம் ஏன் மற்றவர்களுக்கு இந்த சுத்தம் செய்யும்
வேலைகளை மிச்சம் வைக்க வேண்டும்? நல்ல உடல் நிலையில், மனநிலையில் இருக்கும் பொழுதே, நம்மிடம் இருக்கும் பொருட்களை/ சொத்துக்களை, நன்கு சிந்தித்து அதற்கு ஏற்ப பயனாளர்களை தேர்ந்தெடுத்து, அதனால் அவர்கள் பயனடைகிறார்களா என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். அவர்கள்
சொந்தங்கள் ஆக இருக்கலாம், மற்றவர்கள் ஆகவும் இருக்கலாம். நம்மிடம் இருக்கும் பொருட்களை எடுத்து பகிர்ந்தளிக்கும் பொழுது, தீர்க்கமாகவும் மனசஞ்சலம் இல்லாமலும், அதைச் செய்ய வேண்டும். அப்படி பகிர்ந்தளிக்கும் பொழுது, மன அழுத்தத்திற்கு உள்ளாவதோ, உணர்வுப்பூர்வமாக மனசஞ்சலம் அடைவதோ அதீத
உணர்ச்சி அடைவதோ கூடாது. கொடுக்க நினைத்தால், கொடுத்துவிட வேண்டும். இதை இப்பொழுதே ஒவ்வொரு வாரமும், சிறிது சிறிதாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருட முடிவிலும் ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும். நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது.
இருக்கும் பணத்தை
பத்திரப்படுத்தி அதற்கான உயிலை எழுதி வைக்க வேண்டும். அதே சமயம் கடந்த கால நினைவுகளை போற்றிப் பாதுகாத்து வைக்க வேண்டும். அது கடைசி வரை, பல காலகட்டங்களில் நம்முடன் பயணம் செய்யும். கடந்த 60 வருட வாழ்நாளில் யாரையேனும் தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்தி இருந்தால், மனதளவிலோ அல்லது நேராகச்
சென்று மன்னிப்பு கேட்டு விட வேண்டும். நமக்கு உதவி செய்பவர்கள்/ செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம்.
நாம் யாரின் மேலும் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தால், அவற்றை சுத்தம் செய்து துடைத்தெறிந்து விட்டு, நம் மனத்தை தூய்மையாக வைத்து இருந்தால், எந்த துர் கர்மாகளும் இல்லாமல் இறப்பை
எதிர் நோக்க முடியும். நல்ல மனத்தையும் நல்ல எண்ணங்களையும் மட்டுமே நாம் கொண்டு செல்வோம். அது நம்முடைய மரபணுவில் ஒரு நல்ல அழிக்க இயலா அச்சை உருவாக்கும். இது ஒரு நல்ல கருத்தாக்கம். குறைந்த பாரம், இனிய நற்பயணம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 20
#மகாபெரியவா
சொன்னவர்: நெய்வேலி சந்தானகோபாலன்
ஒரு நாள் எங்கள் கல்லூரியில் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது பலர், சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே சம்ஸ்க்ருதம் & தெலுங்கில் தான் பாடி இருக்கிறார்கள். எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் Image
கூறினார்கள். தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளுக்கிடையில் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா
என்று வாதாடினேன். அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் எடுபடவில்லை. அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன். என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார். நானும்
Read 20 tweets
Oct 19
பழைய சாஸ்திரங்களில் ‘இஷ்டம்’, ‘பூர்த்தம்’, என்று ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘இஷ்டம்’ அல்லது ‘இஷ்டி’ என்பது யாக யஜ்ஞாதிகள். தசரதன் புத்ர காமேஷ்டி பண்ணினான் என்கிறோமே, அது புத்ர காம இஷ்டி தான் – அதாவது பிள்ளையை விரும்பிச் செய்த இஷ்டி Image
(யாகம்).
‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம்
உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர ஜனங்களிலிருந்து ச்ரௌதிகள் வரையில் ஏழை-பணக்காரன், அந்த-ஜாதிக்காரன் இந்த ஜாதிக்காரன் என்கிற பேதம் கொஞ்சம்கூட இல்லாமல் ஸகல ஜனங்களும் ஒன்று சேர்ந்து பண்ண வேண்டியதே “பூர்த்தம்”.–ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
Read 4 tweets
Oct 19
#FoidForThought A wealthy man watched an ant moving across the balcony carrying a big leaf several times its size. The man watched it for more than an hour. He saw that the ant faced many obstacles during its journey, paused, took a diversion and then continued towards its Image
destination. At one point the tiny creature came across a crack in the floor. It paused for a little while, analysed and then laid the huge leaf over the crack, walked over the leaf, picked the leaf on the other side then continued on its journey. The man was captivated by the
cleverness of the ant. The incident left the man in awe and forced him to contemplate over the miracle of creation. A while later the man saw that the creature had reached its destination – a tiny hole in the floor which was the entrance to its underground dwelling. And it was at
Read 11 tweets
Oct 19
#மாயவரம் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஆன்றோர் வாக்கு. சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது மயிலாடுதுறை.
காசியில் ஒரு விஸ்வநாதர் விசாலாட்சி. இங்கோ ஏழு விஸ்வநாதர் விசாலாட்சி. அந்த சப்த காசி தலம், #மயிலாடுதுறை என்னும் மாயவரம் என்னும் #மாயூரம்.
1. துலாகட்டத்திற்கு லாகடம்
தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர்
2.காவிரிப் பாலத்திற்கு தெற்கே பாலக்கரை விஸ்வநாதர்
3. வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர்
4. திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர்
5. வடக்கு வீதிக்கும் பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும்
நடுவே உள் விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர், கௌதமர் , அகத்தியர், பரத்வாஜர், இந்திரன் ஆகியோர் சிவலிங்கம் நிறுவி வழி பட்ட கோயில்கள்.
6. இது தவிர லாகடம் மார்க்கெட்டுக்குள் கொஞ்சம் பாழடைந்து திருப்பணி எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஸ்வநாதர்
7. கொரநாடு விஸ்வநாதர் ஆக மொத்தம் ஏழு காசி
Read 18 tweets
Oct 19
#MahaPeriyava
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan Image
who was a Sanskrit professor in the Madras University would inform Periyava about the request. Even though he said, "He is very keen to have darshan of Periyava; he bothers me frequently", Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly
one day, Dr. Raghavan received intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time our Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan
Read 19 tweets
Oct 18
20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே மத, சமூக மற்றும் கலாச்சாரத்தைக் கடைபிடித்து 2000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் ஒரு சமூகம் அல்லது பிரிவு அல்லது குலம் ஒன்றை ஒருவர் உலகில் தேடினால்,
தென்னிந்தியாவில் 1.399686°N, 79.693622°E இந்த முகவரியில் உள்ள பழமையான கோவில் நகரமான சிதம்பரத்தில்
வந்து தான் நிற்பார்.இதுபோன்ற சமூகத்தை ஒருவர் வேறெங்கும் கண்டுபிடிக்க முடியாது. இந்த பொது தீட்சிதர்கள் தில்லை வாழ் அந்தணர் அல்லது ‘தில்லைப் பிராமணர்கள்’ என்றும் அழைக்கப்படுபவர்கள் கோயிலுடன் அதன் தொடக்கத்திலிருந்தே தொடர்புடையவர்கள். இந்த தனித்தன்மை வாய்ந்த குலம் முதலில் மூவாயிரமாக
இருந்ததால் அவர்கள் தில்லை மூவயிரவர் என்றும் அழைக்கப்பட்டனர். ஸ்தல புராணங்கள், மரபுகள் மற்றும் சைவ நம்பிக்கைகளின்படி, சிதம்பரம் கோயிலின் முதன்மைக் கடவுளான நடராஜப் பெருமான் தில்லை பிராமணர்களில் ஒருவர். நடராஜப் பெருமான் அவர்களின் வழிபாட்டு கடவுள் மற்றும் அவர்களின் குலத்தின் தலைவர்.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(