தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் மிக ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது ஸ்ரீகாலபைரவர் கோயில்.
கிருஷ்ணகிரி நகரின் பழைய பேட்டையிலிருந்து குப்பம் செல்லும் சாலையில், சையத் பாஷா எனும் மலைக்கு வலப்புறமாக ஆஞ்சநேயர் மலைக்குச் செல்லும் பாதையில், சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் பைரவர் கோயிலை அடையலாம்.
கோயிலை நெருங்குவதற்கு முன்பாக மலையின் அடிவாரத்தில் ஓர் அரசமரத்தின் அடியில் பெரிய பாறையைக் குடைந்து வடிக்கப்பட்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அங்கிருந்து சிறிது தூரத்திலேயே காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
கிழக்கு மற்றும் வடக்குப்புறங்களில் ஏரியும், மேற்கே ஆஞ்சநேயர் மலையும், பைரவர் மலையும் அமைந்திருக்க, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில், அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாலபைரவர்.
முற்காலத்தில் மேற்சொன்ன இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியாகவே பக்தர்கள்
இந்தக் கோயிலுக்கு வருவார்களாம். 17 வருடங்களுக்கு முன்புதான் ஆஞ்சநேயர் மலையை ஒட்டி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.
‘சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஹொய்சாள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இங்குள்ள சிவலிங்க மூர்த்தம் சுயம்புவாகத் தோன்றியதாகவும் அந்தச் சுயம்பு லிங்கமே கால பைரவரின் அம்சமாக விளங்குவ தாகவும் வழிவழியாகச் சொல்லப் பட்டு வருகிறது.
கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் போர் வீரர்கள் இந்தக் கோயிலில் போர்க்கருவிகளை வைத்து வழிபட்டதாகவும் செவிவழித் தகவல் ஒன்று
இப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.
விவசாயம் மற்றும் கால்நடை களை மேய்க்கும் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட 150 கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் ஸ்ரீ காலபைரவரை தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
அவர்கள், தங்களது வீட்டில் எந்தவொரு சுபநிகழ்ச்சி களை நடத்துவதாக இருந்தாலும், இந்த பைரவரை வழிபட்ட பிறகே அந்த சுப காரியங்களைத் துவங்குகிறார்கள்.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்தக் கோயிலுக்கு அருகில் ராஜேந்திர சோழர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பட்டதாகச் சொல்லப்படும் நந்தீஸ்வரர் சிலை ஒன்றும் உள்ளது.
நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவலிங்க மூர்த்தம் தெரிவதுபோல் அமைக் கப்பட்டிருப்பது விசேஷம்!''
‘ஆத்தி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் இந்தக் கோயிலில், லிங்க வடிவில் காட்சி தரும் ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அப்போது எலுமிச்சை, பூசணி, தேங்காய் மூடி ஆகியவற்றில் நெய்தீபம் ஏற்றி வைத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அதன் மூலம் ஸ்ரீ காலபைரவர் தங்களுக்குக் காவலாக இருப்பதுடன், தங்கள் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவார் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.
வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுத் தவறான முடிவுக்கு வரும் நிலையில் இருப்பவர்கள் ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்து சென்றால், அவர்கள் தங்களது பிரச்னைகளில் இருந்து சீக்கிரம் மீண்டு விடுவார்கள் என்பது நம்பிக்கை’’.
பக்தர்கள் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது.
நீங்களும் ஒருமுறையேனும் லிங்க சொரூபமான காலபைரவரைத் தரிசித்து வாருங்கள்; அவரருளால் கவலைகள் இல்லாத வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்.
சென்னை-பெங்களூரு மார்க்கத்தில் சென்னையில் இருந்து சுமார் 256 கி.மீ. தூரத்திலுள்ளது கிருஷ்ணகிரி. இவ்வூரில் `பழைய பேட்டை' என்ற இடத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்
சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
தீராத நோய் நொடி பிரச்சனைக்கும் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் சில வழிகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதும்.
அது நமக்கு நல்லதொரு வாழ்க்கையை வரமாக கொடுத்துவிடும்.
முன்னோர்கள் சொன்னது அனைத்துமே மூட நம்பிக்கை என்று, இன்று எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கைகழுவி விட்டதால் தான் கஷ்டங்கள் வந்து நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
🌷திருமால் அன்பர்களை காத்து அருள் புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதார ங்கள் ஆகும்.
இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.
🌷திருமால் ஆமைஅவதாரம் எடுத்து மலையை தாங்கியதாலேயே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது.
அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினார்.
திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று தேவி யை மணந்து கொண்டார்.
🌷மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டி ருந்த திருமகளின் மறு கூறான பூமி தேவியை மேற்கொண்டு வந்தார்.
அவரை பூவராகம் என்று போற்றுகின்றனர்.
அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகிலவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.