🌷திருமால் அன்பர்களை காத்து அருள் புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதார ங்கள் ஆகும்.
இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.
🌷திருமால் ஆமைஅவதாரம் எடுத்து மலையை தாங்கியதாலேயே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது.
அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினார்.
திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று தேவி யை மணந்து கொண்டார்.
🌷மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டி ருந்த திருமகளின் மறு கூறான பூமி தேவியை மேற்கொண்டு வந்தார்.
அவரை பூவராகம் என்று போற்றுகின்றனர்.
அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகிலவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.
🌷சில ஆலயங்களில் திருமகளை மடி மீது கொண்டுள்ள லட்சுமி,வராகரையும் சில தலங்களில் புவிமகளை மடி மீது கொண்டுள்ள வராகரையும் காணலாம்.
ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராக மூர்த்தி இரு பெரும் தேவியருடன் காட்சி யளிக்கின்றார்.
வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்
சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
தீராத நோய் நொடி பிரச்சனைக்கும் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் சில வழிகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதும்.
அது நமக்கு நல்லதொரு வாழ்க்கையை வரமாக கொடுத்துவிடும்.
முன்னோர்கள் சொன்னது அனைத்துமே மூட நம்பிக்கை என்று, இன்று எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கைகழுவி விட்டதால் தான் கஷ்டங்கள் வந்து நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்