M.SivaRajan Profile picture
Oct 22 16 tweets 4 min read
*சிவ மூலிகைகளின் சிகரம் #வில்வம்...

ஈசன் நமக்களித்த செல்வம்!*

வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும்

'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும்

சிறப்பாகப் போற்றப்படுகிறது.  

ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தினாலும், மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்த முடியும்.
இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது வில்வம்.

இதற்கு, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன.

வில்வ மரத்தின்  இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை... என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பலன் தரக்கூடியவை.
வில்வ தளம் என்பது, மூன்று இலைகள் சேர்ந்தது.

வில்வத்தின் இடதுபக்க இலை 'பிரம்மா' என்றும், வலதுபக்க இலை 'விஷ்ணு' என்றும் நடுவில் இருப்பது 'சிவன்' என்றும் சொல்லப்படுகிறது.

வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக்  கருதப்படுகிறது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளின் அம்சமாகப் போற்றப்படுகிறது.

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும்.

இது தீராத ஜென்ம பாவங்களைப் போக்கக்கூடியது .

இப்படிப்பட்ட வில்வமரத்தின் சிறப்புகளை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.
வில்வமரம் அதிகமாக சிவாலயங்களில் தான் வளர்க்கப்படுகின்றது.

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

ஞாயிறன்று வில்வ இலை அர்ச்சனை மிகச் சிறப்பான ஒன்று .

வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.
சிவனின் அருளைப் பெறமுடியும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன.

வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படும்.

வில்வப் பழம் அபிஷேகத்துக்கு உகந்ததாகும்.

வில்வ மரத்தின் கட்டையானது யாகம்,ஹோமம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.

வில்வ மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.
வில்வப்பழத்தின் ஓட்டைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணத்தையும், திருநீற்றையும் வைத்துக்கொள்ளலாம்.

அப்படி வைத்துக்கொள்வதால், மருத்துவப் பலன்கள் நமக்கு கிடைக்கும்.

வில்வ மரத்தின் சிறப்புகள்:

வீட்டில் வில்வமரம் வளர்ப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும்.
ஆனால், அதை பக்தி சிரத்தையோடு வளர்ப்பதுடன், அவ்வப்போது பூஜைகள் செய்வது நல்லது.

108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள்.

இலைகள் அனைத்தும் சிவரூபம்.

வேர்கள், கோடி ருத்திரர்கள்.

வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக்  கருதப்படுகிறது .

ஏழரைச் சனி பிடித்திருப்பவர்களுக்குப் பரிகாரமே வில்வம்தான்.
ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வதற்கு ஒப்பானது .

வில்வ மரத்தின் மருத்துவ பயன்கள்:

இது எளிதில் குணமடையாத நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாகச் செயல்படுகிறது.
வில்வ இலைகளை உண்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

காரத்தன்மையுள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பிழிந்து அதன் சாற்றுடன் பசும்பால் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுக்க கழிச்சல், மூலநோய் நீங்கும்.
வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் தன்மைகொண்டது.

வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாணமுருங்கைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால், சர்க்கரை நோய் குணமாகும்.

வில்வப்பழத்தை பிழிந்து சர்பத் போன்ற பானங்கள் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும்,
வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் , மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன.

பழத்தின் ஓட்டிலிருந்து தைலம் தயாரிக்கலாம். இது `வில்வ தைலம்’ எனப்படும்.
வில்வ இலைகளைப் பறிக்கும் போது கவனிக்க வேண்டியவை :

வில்வ இலைகளை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத் தனித்தனியாக பறிக்கக் கூடாது.
பல்வேறு ஆலயங்களில் வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும் வில்வ இலையால் பூஜை செய்யப்படுகிறது.

கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
வில்வம் இறைவன் நமக்களித்த செல்வம்.

சிவனுக்குப் பிரியமாகவும், ஆரோக்கியத்துக்கு அரணாகவும் திகழ்கிறது.

#வில்வம்

#வில்வ_இலை

#வில்வ_மரம்

#வில்வ_பழம்

#வில்வ_சிறப்புகள்

#வில்வ_மகிமைகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 22
#மஹா_பிரதோஷ_சிறப்பு

இன்று அபூர்வமான சனி மஹாப்பிரதோஷம்...

*சனி மஹாப்பிரதோஷம்..!!*

🙏 சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
🙏 சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் ஆகும்.

🙏 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
Read 14 tweets
Oct 22
#மஹா_பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 12 tweets
Oct 22
#கோவத்ச_துவாதசி

இன்று கோவத்ச துவாதசி.

ஐப்பசி மாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது.

அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள்.
#கோமாதா_ஸ்தோத்திரம்:

நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம:
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே:

நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம:
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம:

கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்:
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம:
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம:
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம:

இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்:
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான் புத்ர வான் பவேத்.
Read 4 tweets
Oct 22
*சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக*

வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்

சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
தீராத நோய் நொடி பிரச்சனைக்கும் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும்.

ஆன்மீகத்தில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் சில வழிகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதும்.

அது நமக்கு நல்லதொரு வாழ்க்கையை வரமாக கொடுத்துவிடும்.
முன்னோர்கள் சொன்னது அனைத்துமே மூட நம்பிக்கை என்று, இன்று எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கைகழுவி விட்டதால் தான் கஷ்டங்கள் வந்து நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Read 10 tweets
Oct 21
#தசாவதாரங்களில்_மகாலட்சுமி

🌹🌷தசாவதாரங்களில் மகாலட்சுமி🌹🌷

🌷திருமால் அன்பர்களை காத்து அருள் புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதார ங்கள் ஆகும்.

இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.
🌷திருமால் ஆமைஅவதாரம் எடுத்து மலையை தாங்கியதாலேயே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது.

அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினார்.

திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று தேவி யை மணந்து கொண்டார்.
🌷மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டி ருந்த திருமகளின் மறு கூறான பூமி தேவியை மேற்கொண்டு வந்தார்.

அவரை பூவராகம் என்று போற்றுகின்றனர்.

அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகிலவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.
Read 10 tweets
Oct 21
இன்று #ஏகாதசி.

#பெருமாள்_108_போற்றி

1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(