M.SivaRajan Profile picture
Oct 22 14 tweets 3 min read
#மஹா_பிரதோஷ_சிறப்பு

இன்று அபூர்வமான சனி மஹாப்பிரதோஷம்...

*சனி மஹாப்பிரதோஷம்..!!*

🙏 சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
🙏 சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் ஆகும்.

🙏 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
🙏 சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனிப்பிரதோஷம்.

🙏 அதன்படி (ஐப்பசி 05) அக்டோபர் 22ஆம் தேதியான (சனிக்கிழமை) இன்று சனிப்பிரதோஷம் ஆகும்.
சனிப்பிரதோஷ நாளில் பிரதோஷ வேளையில் சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபட அனைத்துவிதமான தோஷங்களும் விலகி வாழ்வில் வளமும், நலமும் பெறலாம்.
நந்தி தேவர் சிறப்பு பெறுவது ஏன்?

🙏 பிரணவத்தின் முழு வடிவம் நந்தி தேவர்.

மேலும் எம்பெருமான் உருவாக்கிய நான்மறைகளையும் முதன்முதலில் நந்தியம் பெருமானுக்கு தான் உபதேசித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இதனால் தான் பிரதோஷ காலத்தில் முதல் மரியாதையும், பூஜையும் நந்தியம் பெருமானுக்கு செய்யப்படுகிறது.

சனிப்பிரதோஷத்தின் சிறப்பு :

🙏 சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
🙏 பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

🙏 இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
🙏 சிவாலயங்களில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
🙏 அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
🙏 நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
வீட்டில் எப்படி வழிபாடு செய்வது?

🙏 வீடு, வாசலை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

🙏 நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் சிவனை தரிசனம் செய்யுங்கள்.
🙏 கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே சிவனை மனதார நினைத்து தரிசனம் செய்யுங்கள்.

🙏 வீட்டில் சிவன்-பார்வதி, சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.
🙏நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி சிவனின் அருளை பரிபூரணமாக பெறுவோம்..!!

#மஹா_பிரதோஷ_சிறப்பு

#பிரதோஷ_வழிபாடு

#சைவசமயம்

#சிவவழிபாடு

#ஓம்நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 24
#தீபாவளி_லேகியம்

செய்முறை :

1 - சுக்கு -50 -கிராம்
2 - சித்தரத்தை 25 - கிராம்
3 -ஓமம் 10 - கிராம்
4 - அரிசி திப்பிலி -25 - கிராம்
5 - கண்டந் திப்பிலி -25 -கிராம்
6 - விரலி மஞ்சள் - 1 துண்டு
7 -நெய் - 50 - கிராம்
8 - நல்லெண்ணெய் -50- கிராம்
9 - பனை வெல்லம் - 200 -கிராம் Image
மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது மருந்து பொடியை போட்டு கிளறவும்
லேகியம் போல் இறுகி வரும் பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது எடுத்து விரல்களில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.
Read 5 tweets
Oct 24
#லட்சுமி_குபேர_பூஜை

செல்வ செழிப்புடன் வாழ வைக்கும் லட்சுமி குபேர பூஜையை பற்றிய பதிவு :*

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும். Image
ஏனென்றால் இந்த நேரத்தில் தான் குபேர மகாலட்சுமி தேவியை வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றார்.

எனவே நாமும் அதே நேரத்திலே அவர்களை வணங்க வேண்டும் என்பது தான் இந்த நேரத்திற்கான காரணம்.
இந்த பூஜைக்கு நமக்கு தேவையான பொருட்கள் மஹாலட்சுமி தாயார் படம் மற்றும் குபேர படம்.

படத்தை பூஜை அறையில் வடக்கு திசையை பார்ப்பது போல் வைக்க வேண்டும்.

இரண்டு குத்து விளக்கு, அல்லது இரண்டு அகல் விளக்கு அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
Read 11 tweets
Oct 23
*தீபாவளி பண்டிகையின் ஆன்மீக அறிவியல் விளக்கம்..!*

இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம்,சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்.. Image
ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம், புராணங்கள் போன்ற கதைகளாக வடித்துள்ளனர்.

இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும், மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.
இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப் பெருமான் தன "தெற்றுப் பல்லால்"
Read 39 tweets
Oct 23
#ஸ்ரீ_தன்வந்திரி_ஜெயந்தி

திருமால் மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.

நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. Image
ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணு அம்சமாக

பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்

முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும்,

இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி  அளிக்கிறார்.
அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட  ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன.
Read 13 tweets
Oct 23
*#ஸ்ரீ_ரங்கம்_தீபாவளி_சிறப்பு*

*தீபாவளி கொண்டாடும்*
*மாப்பிள்ளை* *ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள்*

புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டா வேண்டுமா என்ன?

*திருவரங்கத்தில்* *திவ்ய தம்பதியான அரங்கநாதன் தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுகிறாரே*! Image
*ஆம்* !!  *ஸ்ரீரங்கநாதர்* !!

*பெரியாழ்வாரின்* *மாப்பிள்ளை அல்லவா* !!

*ஆண்டாளை மணம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் ஆயிற்றே* !!

வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே அலாதியானது தான்.
முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர்.

மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள் ஆகியவையும் வழங்கப்படும்.
Read 9 tweets
Oct 23
தீபாவளியன்று வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

எதைப் பின்பற்றலாம்?

இருளின் மீது ஒளி வெற்றி கொண்ட நாளாக கருதப்படும் இந்த தீபாவளி திருநாளில் வீடுகளில் பெருமளவிலானோர் லக்ஷ்மி தேவி வழிபாட்டில் ஈடுபடுவர். Image
தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை அல்லது லட்சுமி குபேர பூஜை முக்கியத்துவம் வருகிறது.

தீபாவளியன்று மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க எவ்வாறான பூஜை முறைகளை செய்யலாம் என பார்க்கலாம்.

தீபாவளியை வரவேற்க வீடுகள் முழுவதும் வண்ணமயமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்க படுகின்றன.
பல வகையான பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள் செய்யப்பட்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றுதான் இந்த தீபாவளி திருநாள்.

வீடுகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்று வண்ணமயமான மின் விளக்குகளின் வெளிச்சத்தில் காட்சியளிக்கும்
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(