அதாவது, ஸ்வாமி சந்நிதியின் வலப் புறம் அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது.
இப்படி, அம்பாள் ஸ்வாமியின் வலப்பாகத்தில் சந்நிதி கொண்டிருப்பதை, கல்யாண கோல அமைப்பு என்று சிறப்பிப்பார்கள்.
ஆகவே, இந்த ஆலயத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருகி வழிபட்டுச் செல்ல, தடைகள் யாவும் நீங்கி, விரைவில் கல்யாணம் கைகூடும் என்கிறார்கள், பக்தர்கள்.
இக்கோயிலின் சிறப்பம்சம் இது மட்டும்தானா?
இல்லை.
வேறு சிறப்புகளும் இவ்வாலயத்துக்கு உண்டு.
ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடவுளைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்தது.
மேலும் தவத்தில் தாங்களே சிறந்தவர்கள் என்றும், தங்கள் மனைவிமார்களாகிய பத்தினி பெண்களின் கற்பே பெரிதென்றும் அவர்கள் கர்வம்கொண்டிருந்தனர்.
அந்தக் கர்வத்தின் காரணமாக கடவுளை நினைக்கவும், வழிபடவும் மறந்து போனார்கள்.
அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து அந்த ரிஷிகள் தவம் புரியும் தாருகாவனத்துக்கு அனுப்பினார்.
அதேபோல் தானும் பிச்சாடனர் வடிவம்கொண்டு அந்த முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.
மோகினி அவதாரம்கொண்ட திருமால், முனிவர்கள் அனைவரையும் தன் அழகால் மயக்கி, அவர்களின் தவத்தையும், அதன் பயனாகப் பெற்ற உயர்வையும் கெடுத்தார்.
இந்த நேரத்தில் சிவபெருமான் முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் மனைவியரிடம் பிச்சை வேண்டினார்.
அவரின் அழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள் சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் துவங்கினர்.
தாங்கள் வந்த வேலை முடிந்ததால் சிவபெருமானும், திருமாலும் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள் தங்கள் மனைவிகள் ஒருவரின் அழகில் மனம் மயங்கியதை எண்ணி கோபம்கொண்டனர்.
இதற்கெல்லாம் காரணம் சிவபெருமான்தான் என்பதை அறிந்த அவர்கள் அனைத்துலகுக்கும் தலைவனான சிவபெருமானை தண்டிக்க எண்ணினர்.
அதன்படி விஷ விருட்சங்களை யாகப் பொருட்களாக்கி, வேம்பு, நெய் போன்றவற்றை தீயிலிட்டு வேள்வி ஒன்றை நடத்தினர்.
அந்த வேள்வியில் இருந்து பல ஆயுதங்கள் தோன்றின. அந்த ஆயுதங்களை ஈசனைக் கொல்ல ஏவிவிட்டனர்.
அவற்றைத் தடுத்த சிவனார் யாகத்தில் இருந்து தோன்றிய புலியைக் கொன்று தன் ஆடையாக்கிக் கொண்டார்.
இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது இத் திருத்தலத்தில் ஆகும்.
பாலைவனம், புன்னாகவனம், பிரம்மவனம், அரசவனம் போன்ற பல பெயர்களைக்கொண்ட இத் திருத்தலத்தில் தான் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வனவாசத்தின் போது தௌமிய மகரிஷியின் ஆலோசனையின் பேரில் வந்து வழிபட்டு,
வில்வித்தையின் நுட்பங்களை அறிந்து உணர்ந்து, அதன் பயனாக பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்றும் கூறப்படுகிறது.
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
370 அடி நீளமும், 260 அடி அகலமும் உடையது.
முன்புறத்தில் 70 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை கோபுரமும், அதன் பின் 45 அடி நீளம் கொண்ட மூன்று நிலை கோபுரமும் அமைந்துள்ளன.
மூன்று நிலை கோபுரத்தைக் கடந்து சென்றால், மகா மண்டபம் அமைந்துள்ளது.
அதன் இடப்புறம் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இதற்கு நேர் எதிரில் நால்வர் சந்நிதி வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.
மூலஸ்தானத்தில் பாலைவனநாதர் லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார்.
ஆலயத்தின் வடக்குப்புறத்தில் அழகே வடிவான தவளவெண்ணகை அம்பிகை சந்நிதி தனிக்கோயிலாக அமைந்துள்ளது.
வரம் வேண்டி வந்தாருக்கு குறைவின்றி அருள்புரிந்து வாழவைக்கும் கற்பகத்தருவாய் காட்சி தருகிறாள், இந்த அம்பிகை. இந்த அன்னையை ஒரு கணம் தரிசித்தாலே போதும்; நம் கவலைகள் யாவும், இருந்த இடம்தெரியாமல் பறந்தோடிவிடும்.
அவ்வளவு சாந்நித்தியம் அம்பாளின் திருமுகத்தில்!
கருவறையில் இருந்து துவங்கி வலமாக வந்தால், கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்கை, பிட்சாடனர்
ஆகியோரைத் தரிசிக்கலாம்.
இவை மட்டுமன்றி, உட்பிராகாரத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஸதல விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தொடர்ந்து, வசிட்டர் பூஜித்த ராமலிங்கம்; மகாலட்சுமி, அர்ஜுனன் பூஜித்த அர்ஜுன லிங்கம்,
மலையத்துவசன் பூஜித்த மலையத்துவச லிங்கம் ஆகிய சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.
மேலும் வடக்குப்புற மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சந்நிதியும், வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும், கோயில் தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளன.
வடகிழக்கு திசையில் நவகிரகங்கள், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
மற்றொரு சிறப்பாக உட்பிராகாரத்தின் வலப்புறத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
திருமண பாக்கியம் மட்டுமன்றி குழந்தை பாக்கியம் அருளும் தலமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம்.
‘‘குழந்தை வரம் வேண்டுவோர், தொடர்ந்து 11 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து, அம்பாளையும் ஸ்வாமியையும் வேண்டிக் கொண்டு, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
11-வது வாரம் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டுச் சென்றால், பாலைவனேஸ்வரரின் திருவருளால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’
அப்படி, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மீண்டும் கோயிலுக்கு வந்து ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
நாமும் ஒருமுறை பாலைவனேஸ்வரரைத் தரிசித்து, அவரின் திருவருளால் வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.
*சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?*
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு :
*கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது,* *நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது.
அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது.*
*சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும்.*
தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.
90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.
விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..
சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள்.
ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தார் என்பது தான் வரலாறு.
அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம்.
*திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் காவிரித்தாய் மத்தியில் குழந்தையாக பெருமாள்*
ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள்.
இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.
பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார்.
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.
அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.