*சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?*
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு :
*கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது,* *நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது.
அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது.*
*சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும்.*
தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு.
இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள்.
இயற்கையிலேயே அசுபகிரகமான சனி கிரகத்தின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால்,
கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
இது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து
தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும்.
ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.
இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக,
இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரகங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார்.
அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற,
ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.
தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கவே,
சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது.
ராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது.
அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று.
புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.
ஆகையால் தான் கோயில்களில் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வணங்குவது இல்லை.
பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.
90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.
விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..
சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள்.
ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தார் என்பது தான் வரலாறு.
அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம்.
*திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் காவிரித்தாய் மத்தியில் குழந்தையாக பெருமாள்*
ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள்.
இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.
பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார்.
அதாவது, ஸ்வாமி சந்நிதியின் வலப் புறம் அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது.
இப்படி, அம்பாள் ஸ்வாமியின் வலப்பாகத்தில் சந்நிதி கொண்டிருப்பதை, கல்யாண கோல அமைப்பு என்று சிறப்பிப்பார்கள்.
ஆகவே, இந்த ஆலயத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருகி வழிபட்டுச் செல்ல, தடைகள் யாவும் நீங்கி, விரைவில் கல்யாணம் கைகூடும் என்கிறார்கள், பக்தர்கள்.
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.
அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.