திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று பாவாடை தரிசனம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரமும் நடந்தது.
இன்று காலையில் சட்ட தேரோட்டம் நடைபெறும் .
இந்த நிலையில் வழக்கம் போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு மாலையில் நடைபெறும்.
இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும் .
மேலும் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு "#தங்க_கவசம்" அணிவிக்கப்படும்.
இதேபோல கருவறையில் அமைந்து உள்ள சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர் ஆகிய விக்ரங்களுக்கும் #வெள்ளிக்_கவசம்
அணிவிக்கப்படும் .
அரனும் அரியும் ஒன்றே’ என்று கூறும் முதல் குரல், ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.
பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்,
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று. (5)
-என்றவாறு,
“அரன், நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள்.
ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள்.
மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.
ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.