தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.
ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.
ராஜ ராஜ சோழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது,
இந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
கருவறை மூலவர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் காமாட்சியம்மன் தெற்கு நோக்கி
தனிச் சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர்.
கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன.
கோயிலின் நுழைவாயிலில் நந்தி, கருவறைக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் சிவசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளன்று, அந்தியும் இரவும் சந்திக்கின்ற பொழுதினில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அச்சமயம், கண் பார்வை தொடர்பான நோகளோடு வரும் பக்தர்களின் குறைபாட்டினைக் களைந்து அருள் பாலிக்கிறார் இத்தல ஈசன்.
மூன்றாம் பிறையன்று மூலவருக்கு, ‘தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன.
ஆகிய பத்து வித பொருட்களை அதனதன் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘#தசாவனி_தைலம்.’
இந்த தசாவனிதைலக் காப்பே மூலவருக்குச் சாத்தப்படுகிறது.
பிரார்த்தனைக்காக மூலவருக்குத் தைலக்காப்பிட விரும்புவோருக்கு இந்தத் தைலக்காப்பை கோயில் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது.
அன்று மாலை, இரவு கவிழும் சமயம், வானில் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கும் நேரம் பக்தர்கள் கோயிலின் கருவறை பின்புறம் உள்ள பிராகாரத்தில் சூழ்ந்து நின்று வானத்தையே பார்க்கின்றனர்.
வானில் மெல்லியக் கீற்றாகக் காட்சி தருகிறது மூன்றாம் பிறை நிலவு.
பக்தர்கள் சூழ்ந்து நின்று மூன்றாம் பிறையினைத் தரிசித்து வணங்குகின்றனர்.
அதன் பின்னரே மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.
அமாவாசை கழித்து, மூன்றாம் நாளின் இரவு 6.30 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கிவிடும்.
மழை நாட்கள் மற்றும் கருமேகம் சூழ்ந்த நாட்களில் மூன்றாம் பிறை தெரிய வாய்ப்பு கிட்டாது. அப்போது மேற்குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, கோயிலில் மூன்றாம் பிறை வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கோயில்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தில், அலைகள் தவழும் அழகிய கடற்கரை ஓரத்தில் அமைந்த நகரம் திருக்கடல்மல்லை. இந்த நகரின் கடற்கரைக்கு அருகிலே அமைந்திருந்தது அழகான கோயில் ஒன்று.
அந்தத் தலத்தில் உறையும் இறைவனை அடியார்கள் பலர் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அந்தத் தலத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு.
அதுதான், முதலாழ்வார்கள் மூவரில் இரண்டாமவரான பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்பது.
மிகப் பழைமையானஅந்த நகரம் இப்போது மாமல்லபுரம் என்றும், மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்தத் தலத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.
பொதுவாக வைணவத் தலங்களில்,
ஸ்ரீமந் நாராயணனின் மூன்று நிலைகளான, நின்றான், இருந்தான், கிடந்தான் என்றபடி,
அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.
நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
அரனும் அரியும் ஒன்றே’ என்று கூறும் முதல் குரல், ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.
பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்,
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று. (5)
-என்றவாறு,
“அரன், நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள்.
ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள்.
மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள்.