அரனும் அரியும் ஒன்றே’ என்று கூறும் முதல் குரல், ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.
பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்,
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று. (5)
-என்றவாறு,
“அரன், நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள்.
ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள்.
மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள்.
அழித்தலும், காத்தலும் நினது தொழில்கள்.
வேற்படையும், சக்கரப் படையும் நின் ஆயுதங்கள்.
தீயின் சிவப்பும், கார் மேகத்தின் கருப்பும் நின் உருவம்.
ஆயினும் உடல் – ஒன்றே!” என்கிறார்.
பொய்கையாழ்வார் தம் இன்னுமொரு பாசுரத்தில், ஒருவருக்குள் ஒருவர் உறைவதை எடுத்துக் காட்டியிருப்பார்.
பொன் திகழு மேனிப் புரிசடை அம் புண்ணியனும்,
நின்று உலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)
“பொன் நிற உடலும் பின்னிய சடையும் கொண்ட சிவபெருமானும், நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், எப்போதும் இரண்டு வடிவங்களில் திரிவார்கள் என்றாலும், சிவன் திருமாலின் உடம்பாக இருக்கிறான்.
திருமால் சிவனுக்குள் உறைபவனாய் அவன் வாழ்வுக்குக் காரணம் ஆகிறான்” என்று விசிஷ்டாத்வைத தத்துவப் பொருளையும் பேசுகிறார்.
கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐய! மலர்மகன் நின் ஆகத்தாள்; செய்ய
மறையான் நின் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை (28)
“கையில் சங்கு, சக்கரம் கொண்டு இலங்கும் மேகவர்ண மேனி கொண்டவனான நின் அருகில் இலக்குமி இருக்கிறாள்.
உன் உந்திக் கமலத்தில் பிரமன் இருக்கிறான்.
முப்புரம் எரித்த சிவபெருமானும் உன் உடலின் ஒரு பாகம்தான்” என்கிறார்.
இன்று ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரம். பொய்கையாழ்வார் திருவடிகளை வணங்குவோம்.
கோயில்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தில், அலைகள் தவழும் அழகிய கடற்கரை ஓரத்தில் அமைந்த நகரம் திருக்கடல்மல்லை. இந்த நகரின் கடற்கரைக்கு அருகிலே அமைந்திருந்தது அழகான கோயில் ஒன்று.
அந்தத் தலத்தில் உறையும் இறைவனை அடியார்கள் பலர் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அந்தத் தலத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு.
அதுதான், முதலாழ்வார்கள் மூவரில் இரண்டாமவரான பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்பது.
மிகப் பழைமையானஅந்த நகரம் இப்போது மாமல்லபுரம் என்றும், மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்தத் தலத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.
பொதுவாக வைணவத் தலங்களில்,
ஸ்ரீமந் நாராயணனின் மூன்று நிலைகளான, நின்றான், இருந்தான், கிடந்தான் என்றபடி,
அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.
நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.
ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.