🌷குலதெய்வம் என்பவர் யார்...வணங்கினால்
சுபிட்சம் பெறலாம்....🌷
🌸ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம்.🌼
குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் பெறலாம்.
குல தெய்வம் என்பவர் யார்....
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம்.
தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வத்தை குல தெய்வம்.
தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும்.
தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை
வழி கோத்திரத்தில் மாறுவர்.
இதை ரிஷி வழி பாதை
எனவும் கூறுவதுண்டு.
ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த
தேதி மாறி இருக்கலாம்.
ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும்.
இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில் தான் செய்து வருவது வழக்கமாக இன்றும் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர்.
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு,
முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர்.
முன்னோர்களின் கூற்று படி,
“நாளும், கோளும் கைவிட்டாலும் கூட, நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது” என கூறியுள்ளனர்.
குலதெய்வத்தை முறைப்படி வணங்கினால், நாம் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும், அவர் நம் கூடவே இருந்து நம்ம காப்பார்.
குல தெய்வத்தை எப்படி வழிபடுவது:
குல தெய்வம் தெரிந்தவர்கள் அடிக்கடி சென்று வணங்குவது நல்லது.
அப்படி இல்லையெனில் ஆண்டுக்கு ஒரு முறை யாவது சென்று, குல தெய்வத்திக்கு அபிஷேகம் செய்து புது துணி சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருவது சிறந்தது.
சிலரின் வீட்டில் பணம், பொருள் என எல்லாம் இருந்தும் நிம்மதி இருக்காது. இது குல தெய்வ வழிபாடு செய்யததால் ஏற்படும் குறை என கூறுவார்கள்.
அவர்கள் குல தெய்வத்தை வணங்கினால் பிரச்சினை தீரும்.
நாம் தேடினால் நம் குல தெய்வம் கிடைப்பார்.
குல தெய்வம் தெரியாதவர்கள் குல தெய்வம் தெரியும் வரையில், வீட்டில் கலசத்தில் தண்ணீர் வைத்தோ, விளக்கேற்றியோ அதை குல தெய்வமாக வணங்கி வாருங்கள்.
கோயில்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தில், அலைகள் தவழும் அழகிய கடற்கரை ஓரத்தில் அமைந்த நகரம் திருக்கடல்மல்லை. இந்த நகரின் கடற்கரைக்கு அருகிலே அமைந்திருந்தது அழகான கோயில் ஒன்று.
அந்தத் தலத்தில் உறையும் இறைவனை அடியார்கள் பலர் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அந்தத் தலத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு.
அதுதான், முதலாழ்வார்கள் மூவரில் இரண்டாமவரான பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்பது.
மிகப் பழைமையானஅந்த நகரம் இப்போது மாமல்லபுரம் என்றும், மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்தத் தலத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.
பொதுவாக வைணவத் தலங்களில்,
ஸ்ரீமந் நாராயணனின் மூன்று நிலைகளான, நின்றான், இருந்தான், கிடந்தான் என்றபடி,
அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.
நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
அரனும் அரியும் ஒன்றே’ என்று கூறும் முதல் குரல், ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.
பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்,
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று. (5)
-என்றவாறு,
“அரன், நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள்.
ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள்.
மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.
ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.