உலகிலேயே மிகப்பெரிய யானைப்படையை கட்டி ஆண்ட சோழ மன்னன், தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் - இப்படி பல சிறப்புக்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட
ராஜராஜசோழனின் தலையாய சிறப்பு என்ன தெரியுமா?!!!
இன்று நாம் படித்து உருகும் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் ராஜ ராஜ சோழனே!
ராஜ ராஜ சோழன் என்கிற மன்னன் ஒருவர் இல்லையென்றால் சைவத் திருமுறைகளே நமக்கு கிடைத்திருக்காது!
திருமுறைகண்ட புராணம்!
திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார் உதவியோடு தக்கப்பண்களுடன் திருமுறைகளை மீட்ட ராஜ ராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும்!
நம்பியாண்டார் நம்பி கிடைத்த தேவாரத்
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும்
செய்தியாகும்.
முதல் 7 திருமுறைகளாகத் தேவாரத்தைத் தொகுத்தபின்
அவரால் அறிந்து கொள்ளப் பெற்ற பாடல்களை மேலும்
தொகுக்க ஆரம்பித்தார். அவ்வாறு தொகுக்க முனைந்த
நம்பியாண்டார் நம்பிக்குக் கிடைத்தவையே பதினோராம்
திருமுறை வரை உள்ள பாடல்கள். இவற்றைத் தொகுத்த காலம்
கி.பி. 9ஆம் நூற்றாண்டின்
இறுதி அல்லது பத்தாம்
நூற்றாண்டின் முற்பகுதியாகும். அதன்பின் பெரியபுராணம்
சேர்க்கப்பட்டுத் திருமுறைகள் பன்னிரண்டு என்ற
எண்ணிக்கையைப் பெற்றன!
உமாபதி சிவாசாரியார் அருளிச் செய்த
திருமுறைகண்ட புராணம்!
வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருமணத்தடையை நீக்கும் திருச்செந்தூர் திருப்புகழ்!
நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும் கூறுகிறார்!
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும்!
இதற்கு அருணகிரி நாதர் முருகனைப்பற்றி பாடி அருளிய மந்திர திருப்புகழை
திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம், 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமண தோஷங்கள் இருந்தாலும் அத்தனையும் நீங்கி 48 நாள் முடிவதற்குள் நல்ல பதில் கிடைக்கும்!
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை!
விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும்போது தோன்றிய ஆலாலம் எனும்
விஷத்தால் தேவாசுரர்கள் அங்குமிங்கும் ஓடியதை நினைவுறுத்தும் வண்ணம் இந்த பிரதட்சிணம் நடைபெறுகிறது!
முதலில் நந்நிகேஸ்வரரை வணங்க வேண்டும். நந்தியிடமிருந்து இடமாக(ஆண்டி க்ளாக் வைஸ்) சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அங்கிருந்து வலமாக(க்ளாக் வைஸ்) நந்தியிடம் வந்து அவரை
வணங்க
வேண்டும். பிறகு நந்தியிடமிருந்து வலமாக சோமசூத்ரம்(சுவாமியின் அபிஷேக ஜலம் வெளியேறும் இடம்) சென்று வணங்கவும். சோமசூத்ரத்திலிருந்து இடமாக திரும்பி நந்தியிடம் வந்து வணங்கவும். நந்தியிடமிருந்து இடமாக சண்டிகேஸரைவணங்கி அங்கிருந்து வலமாக சோமசூத்ரம் சென்று வணங்கி அங்கிருந்து இடமாக
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.