ரொம்ப மாசங்களா, வீட்டுக் கடன் பத்தியும், அதை கடன் மாதிரி பாக்காம, முதலீடு மாதிரி consider பண்ணினா, என்னவெல்லாம் செய்யணும்ன்னு ஒரு திரட்டு போடணும்ன்னு பிளான் பண்ணி, இப்போதான் பண்ண முடிஞ்சிது. முழுக்க படிங்க.
உங்களுக்கு/உங்க குடும்பத்துக்கு இந்த முறை சரியாக தோன்றினால், அதை செய்யுங்க. போதும்.
இந்த திரட்டுக்கு நாம எடுக்கப் போற கடன் விபரங்கள்:
தொகை: ₹60,00,000 (60 லட்சம்)
EMI தொகை: ₹50,186
கடன் காலம்: 20 ஆண்டுகள்
நீங்கள் செலுத்தும் மொத்த தொகை: ₹1,20,44,737
விலையில்லா வீடு:
நீங்க வாங்குற வீடு, உங்களுக்கு 20 வருட முடிவில் எந்தவொரு செலவுமில்லாமல் இலவசமாக வேண்டுமா? நான் சொல்லும் வழியை பின்பற்றுங்கள்.
EMI செலுத்துவது கூடவே, ₹15,000 க்கு ஒரு SIP தொடங்குங்கள். அந்த SIP முதலீட்டுத் தொகையை வருடா வருடம் 10% அதிகரித்துக் கொண்டே வாருங்கள்.
இதே போன்று தொடர்ந்து 20 வருடங்கள் செய்து வாருங்கள். 20 வருட முடிவில், வீட்டுக் கடனுக்கு நீங்கள் ₹1,20,44,737 செலுத்தியிருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் செய்த SIP முதலீடு எப்படி வளர்ந்து நிற்கும் தெரியுமா?
மேற்படி செய்கையில், நீங்கள் வீட்டுக் கடனுக்கு செலுத்திய தொகை மொத்தமும் உங்களுக்கு வருமானமாக கிடைத்துவிடும். இது போதாதென்று உங்களது முதலீட்டு தொகையும் (₹1,03,09,500) உங்களிடம் இருக்கும். So, வீடு இலவசமாக கிடைத்ததாக அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?
இதுல வருமானம் ரொம்ப conservative ஆ 10% மட்டும்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். நீண்ட கால முதலீடுகளில், குறிப்பாக SIP முதலீடுகளில் கண்டிப்பாக இதைவிட அதிகமாக வருமானம் எதிர்பார்க்கலாம்.
ஆகையால், மேற்கண்ட யோசனையை செயல்படுத்தி, முதலீடு செய்து, வருமானம் ஈட்டுங்கள்.
SIP என்றால் என்ன? SIP யில் எப்படி முதலீடு செய்வது? ஏன் இதனை ஒரு சிறந்த முதலீட்டு முறையென சொல்கிறார்கள்? பார்ப்போமா?
SIP என்றால் "Systematic Investment Plan".
அதாவது...
ஒவ்வொரு மாதமும்,
ஒரு குறிப்பிட்ட தொகையினை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
தவறாமல் முதலீடு செய்து வருவது.
சரி. முதலீட்டு வழிகளில், இதைத்தான் சிறந்ததொரு வழியென்று சொல்கிறார்களே. ஏன்?
பொதுவாக, முதலீடு செய்யும்போது, consistency மற்றும் discipline, இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. இதனை பின்பற்ற பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் முடியாது.
இந்த இரண்டையும், SIP முறை முதலீடு, முதலீட்டாளர்களை தவறாமல் பின்பற்ற வைக்கிறது. Automated Debit மூலம் Discipline மற்றும் consistency யை கொடுக்கிறது.
சரி. SIP மூலம் எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்? 1) Mutual Funds (பரஸ்பர நிதி) 2) Shares (பங்குகள்)
RBI’s MPC வரும் நவம்பர் 3ஆம் தேதி கூடவிருக்கிறது. இது, வழக்கமான quarterly review அல்ல.
ரிசர்வ் வங்கி, தனது பணவீக்க கட்டுப்பாட்டு விகித (4% +/-2%) இலக்கை எட்டாததால், தங்களது விளக்கத்தை அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த கூட்டம்.
கடந்த 9 மாதங்களாக ரிசர்வ் வங்கி எடுத்த வரி அதிகரிப்பு முயற்சியினால் பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கை எட்ட முடியவில்லை. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம் 7.41% ஆக இருந்தது.
இந்த நேரங்களில், கூட்டம் கூட்டி, ஏன் இலக்கை எட்ட முடியவில்லை? அதற்காக என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஏன் அந்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன? அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப் படுகிறது.
கூட்டம் கூடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. விஷயம் அறிந்தவர்கள் தான் அறிக்கைகளை தயாரிப்பார்களா?
பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை நமது குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லித் தருவது?
வேகமாக வளர்ந்துவரும் காலத்தின் கட்டாயத்தினால், நம்முடைய குழந்தைகள் பல விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில், நமக்கு 30+ வயதினிலே தெரிந்த பணத்தை கையாளும் விதங்களை இப்பொழுதே
பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது நல்லது என்றே கருதுகிறேன்.
சரி. முடிவு செய்தாகிவிட்டது. எப்படி கற்றுக் கொடுப்பது?
கற்றுக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன:
• விளையாட்டின் மூலம்
• நிஜ வாழ்க்கை அனுபவங்கள் மூலம்.
நிஜ உலகில் கற்றலை எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால்?
"ஒரு படி முன்னே" என்ற எனது உத்தியைப் பயன்படுத்தவும்.
இதைச் செய்வதற்கான சில வழிகள் இங்கே:
• எல்லா இடங்களிலும் பணம் வைத்திருப்பதில் இருந்து ஒருவித வங்கி அமைப்புக்கு செல்லுங்கள்.
அவர்களின் பணப்பை, பாக்கெட்டுகள் மற்றும் படுக்கையறையின் தரை போன்ற வெவ்வேறு இடங்களில் பணம் இருந்தால்,
#Byju's revenue fell 14% YoY to Rs 2,428 crore on a consolidated basis, down from Rs 2,704 crore the previous year, according to the FY21 results. Byju's reported a Rs 4,500 crore loss in FY21, nearly 17 times the Rs 262 crore loss in FY20.
According to Byju, due to a change in accounting practices, a significant increase in business was not reflected in the revenue figure, and nearly 40% of the revenue was deferred to subsequent years.
Even though Byju's is a privately held company, its financial results got more attention because Deloitte seemed to have taken a long time to sign off on them. Deloitte had some concerns about how Byju's was counting its income,
வருடாந்திர appraisals இந்நேரம் முடிவடைந்து சம்பள உயர்வு கடிதங்கள் இந்நேரம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இல்லையா? சம்பள உயர்விலிருந்து கூடுதல் பணத்தை எவ்வாறு செலவிடுவது என்று உங்களில் பெரும்பாலோர் ஏற்கனவே திட்டமிட்டிருப்பீர்கள் இல்லையா?
என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எதில் EMI கட்டி வாகனங்கள்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கலாம், எங்கெங்கு வெளிநாட்டு சுற்றுலா செல்லலாம் போன்றவற்றை திட்டமிட தொடங்கி இருப்பீர்கள்.
கொஞ்சம் பொறுங்கள்.
நான் சொல்வதை கேட்ட பிறகு, உங்கள் பிளானிங்கை தொடருங்கள் (உங்கள் மனது மாறாவிட்டால்).
அதற்கு முன்னர்:
Financial planning எப்படி செய்வது என்கிற வழிமுறைகளை கீழ்க்கண்ட திரட்டியில் தந்துள்ளேன். படித்து, புரிந்துகொண்டு, முயற்சி செய்து பார்க்கவும்.
பணவீக்கம் என்பது பலருக்கும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் அதன் தாக்கத்தை நாம் அனைவரும்தினசரி அனுபவிக்கிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், அதே விலைக்கு குறைவான quantity கிடைப்பது போன்றவை பணவீக்கத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பணவீக்கம் எவ்வாறு செயல்படுகிறது?
அது உங்கள் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
பணவீக்கம் உங்களது பொருளாதாரத்திற்கு எதிரி. அந்த எதிரி எப்படியெல்லாம் உங்களை தாக்கக் கூடுமென்று புரிந்து வைத்துக்கொள்வது வரப்போகும் சிக்கல்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும்.
பணவீக்கம் என்பது காலப்போக்கில் பணத்தின் மதிப்பு அதிகரிப்பதாகும். அது - மளிகைப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம், வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் முதலீடுகளின் வருமானத்தையும் பாதிக்கிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்த வருடம் ₹100க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்வோம்.