அனைவருக்கும் வணக்கம், ஒருவயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொடை பகுதியில் தான் தடுப்பூசிகள் போடப்படும், அப்போது ஒரு சில சமயம் அரிதிலும் அரிதாக எதிர்வினைகள் ஏற்படலாம். @DrVinoth_ortho#orthotwitter#MedTwitter *1/8
கடந்த வாரம், பிறந்து 18 நாட்கள் ஆன குழந்தையை ,அவரது பெற்றோர்கள் 15 நாட்கள் தொடர் காய்ச்சல் மற்றும் இடது தொடையில் ஏற்ப்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனை அழைத்து வந்தனர் .*2/8
குழந்தைக்கு பிறந்தவுடன் HbsAg தடுப்பூசி இடது தொடையில் அருகில் உள்ள மருத்துவமனையில் செலுத்தியுள்ளனர், பின்பு லேசான காய்ச்சல் மற்றும் தொடையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் காய்ச்சல் இல்லை. ஆனால் வீக்கம் குறையவில்லை, மீண்டும் காய்ச்சல் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.*3/8
தீபாவளி காரணமாக மருத்துவமனை செல்லவில்லை , அருகில் உள்ள மருந்து கடையில் மருந்துகள் வாங்கி கொடுத்துள்ளனர் . பரிசோதனை செய்ததில் எலும்புகளை சுற்றி சீழ் கொர்தது தெரிந்தது, வெள்ளை அணுக்கள் 34,000 இருந்தது.*4/8
உடனே அறுவை சிகிச்சை செய்து சீழ் நீக்கப்பட்டது. இவ்வளவு அடர்த்தியான சீழ் நான் பார்த்தது இல்லை , கிட்டதட்ட ஜெல்லி போல இருந்தது. குழந்தைக்கு தொடை எலும்பிலும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.*5/8
இதனால் எலும்பின் ஒரு பகுதியில் சிறிய துளைகள் போடப்பட்டது. உள்ளே சீழ் இருந்தால் , அதுவாக வடிய,இந்த துளைகள் பயன்தரும். பின்பு தையால் போடப்பட்டது. அடுத்தநாள் காய்ச்சல் இல்லை - இரத்த அணுக்கள் அளவு - 15,000 ஆக குறைத்தது.*6/8
இந்த அரிதான பிரச்சனையை தவிர்ப்பது எப்படி ?
1.குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் , தடுப்பூசிகள் எடுக்க வேண்டாம்.
2. தடுப்பூசி எடுத்த பின் காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். *7/8
3. தடுப்பூசி செலுத்திய தொடை பகுதி மட்டும் சூடாக இருந்தால் - தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது, உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. தடுப்பூசி எடுத்தவுடன் குழந்தை காரணமின்றி அதிக நாட்கள் அழுகிறது என்றால் - அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.*8/8
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அனைவருக்கும் வணக்கம், பல பதிவுகளில் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவமுறையினால் ஏற்படும் தீமைகள் பற்றி சொல்லியிருக்கிறேன். கடந்த வாரம் 14 வயது சிறுவன் , காய்ச்சல் மற்றும் வலது தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனை வந்திருந்தார்.1/7
இரண்டு வாரம் முன்பு கிரிக்கெட் பந்து மூலம் தொடையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள பாரம்பரிய வைத்தியரிடம் சென்று எண்ணெய் மஸாஜ் மற்றும் மஞ்சள் பத்து போட்டுக்கொண்டுள்ளார் . அதன் பின்பு 12 நாட்கள் ஆகியும் வீக்கம் குறையவில்லை.2/7
2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் சோர்வு ஏற்பட்டதால் , அவரது தந்தை மருத்துவமனை அழைத்து வந்தார், தொடை பகுதியில் வீக்கம் அதிகமாக இருந்தது, தொடை மிகவும் சூடாக இருந்தது (inflammation), இரத்த பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் 20,000 மேல் இருந்தது.3/7
அனைவருக்கும் வணக்கம் , osteomyelitis - எலும்பில் ஏற்படும் சீழ் பிரச்சனை, எலும்பு மருத்துவர்களின் சிம்ம சொப்பனம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் ஒரு முறை சீழ் எலும்புகளுக்கு சென்று விட்டால், வாழ் நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் திரும்ப ஏற்படலாம். 1/9
இதை கட்டுப்படுத்த தான் முடியும் .
6 மாதம் முன்பு நான் பார்த்த ஒரு நோயாளி எலும்பு முறிவு ஏற்பட்டு ,35 cm மேல் தொடையில் வெட்டு காயத்துடன் வந்திருந்தார். பிரச்சனை ஏற்பட்டு வேறொரு மருத்துவமனையில் இருந்து 7 நாட்கள் கழித்து இங்கு refer செய்யப்பட்டார்.2/9
நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம், Debridement செய்து , வெளிப்புற ரோட் (External fixator) பொருத்தினோம் . பிரத்யேகமான antibiotic மருந்துகள் கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் தொடையில் இருந்து சீழ் வடிந்தது, மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.3/9