"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்.
பூவுலகின் மகத்தான நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான்.
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.
நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.
நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும்.
நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது, 21 மாத்ருகா ரிஷிகள் சூட்சுமமாக
அந்த அன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.
அதன் பிறகு தான் நமது கையில் இருக்கும் நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும்;
இப்படிச் செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்த புண்ணியம் நமக்குக் கிட்டும்.
நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும்.
வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும்.
அல்லது கடலில் போட வேண்டும்.
நாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம்.
இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
சிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும்.
நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.
நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம்.
அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.
நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும் போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம்.
ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும்.
இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.
ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.
இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம்.
ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள்.
ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்...
சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும்.
அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.
ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாக தான் பிறக்கிறோம்.
ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.