K. RAJESH Profile picture
Nov 6 11 tweets 3 min read
SIP என்றால் என்ன? SIP யில் எப்படி முதலீடு செய்வது? ஏன் இதனை ஒரு சிறந்த முதலீட்டு முறையென சொல்கிறார்கள்? பார்ப்போமா?

SIP என்றால் "Systematic Investment Plan".

அதாவது...
ஒவ்வொரு மாதமும்,
ஒரு குறிப்பிட்ட தொகையினை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
தவறாமல் முதலீடு செய்து வருவது.
சரி. முதலீட்டு வழிகளில், இதைத்தான் சிறந்ததொரு வழியென்று சொல்கிறார்களே. ஏன்?

பொதுவாக, முதலீடு செய்யும்போது, consistency மற்றும் discipline, இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. இதனை பின்பற்ற பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் முடியாது.
இந்த இரண்டையும், SIP முறை முதலீடு, முதலீட்டாளர்களை தவறாமல் பின்பற்ற வைக்கிறது. Automated Debit மூலம் Discipline மற்றும் consistency யை கொடுக்கிறது.

சரி. SIP மூலம் எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?
1) Mutual Funds (பரஸ்பர நிதி)
2) Shares (பங்குகள்)
SIP மூலம் பங்குகளிலும் முதலீடு செய்யலாமென்றாலும், தானியங்கி முறையில் (Automated Debits) முதலீடு செய்வது பரஸ்பர நிதிகளில் மட்டுமே மிக அதிகமாக காணப் படுகிறது. தற்போது அனைத்து புரோக்கர் களும் பங்குகளில் முதலீடு செய்யும் SIP வசதியை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
SIP முதலீடு செய்ய என்னென்ன தேவை?
1) டீமேட் கணக்கு (Demat Account) - டீமேட் கணக்கு இல்லாதவர்கள், இந்த லிங்க்கிற்கு சென்று கணக்கு தொடங்கிக் கொள்ளுங்கள்.
bit.ly/skymaniifl2
2) முதலீட்டு செய்வதற்கு பணம்.
3) Financial Advisor - எந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யவேண்டுமென்பதை கூற
4) Bank Mandate

SIP முதலீட்டில் உள்ள advantages என்ன?
1) மிகக் குறைவான, குறைந்தபட்ச முதலீடு. ₹500 முதல் தொடங்குகிறது.
2) EMI போன்று உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து automated debit மூலம் முதலீடு செய்யும் வசதி.
3) மாதாந்திர முதலீட்டை வேண்டாமென்றால் Pause செய்துகொள்ளும் வசதி.
4) குறைந்தபட்ச முதலீட்டு காலம் 6 மாதம் முதல் அதிகபட்ச முதலீட்டு காலம் 99 ஆண்டுகள் வரை.
5) Step-Up முறையில் முதலீடு செய்யும் வசதி. அப்படியென்றால் என்ன? படத்தை பார்க்கவும்.

SIP முதலீடு எப்படி செய்ய வேண்டும்?
1) உங்களது டீமேட் கணக்கில் Login செய்து கொள்ளவும்.
2) Mutual Fund முதலீட்டு screen க்கு செல்லவும்.
3) புதிய முதலீடு தேர்ந்தெடுத்து, அதில் SIP முறையை தேர்ந்தெடுக்கவும்.
4) மாதாந்திர முதலீட்டு தொகை, Fund பெயர், மற்றும் முதலீட்டு காலங்களை உள்ளிடவும்.
5) Submit செய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு Mandate Authorization அனுப்பப்படும்
6) உங்கள் ஈமெயில் க்கு சென்று, உங்களுக்கு அனுப்பப்பட்ட லிங்க் கிளிக் செய்து mandate authorization ஐ approve செய்யவும்.
7) Payment Link கிளிக் செய்து பணப் பரிமாற்றத்தை முடிக்கவும்.

பணம் பரிமாற்ற நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் நீங்கள் வாங்கிய யூனிட்டுகள் உங்களது டீமேட் கணக்கில்
வரவு வைக்கப்படும். எங்கள் மூலம் கணக்கு தொடங்கினால், மேற்கண்ட steps அனைத்தையும் நாங்களே செய்து கொடுக்கிறோம்.

அதன் பிறகு, நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அதை விற்று பணமாக்கலாம் (ELSS தவிர்த்து). ஆனால், நீண்ட காலம் முதலீடு செய்து வைத்திருப்பது நல்லது.
மேலும் விபரமறிய: wa.me/message/GCVBKT…
புதிய டீமேட் கணக்கு தொடங்க: bit.ly/skymaniifl2

SIP முறையில் முதலீடு செய்து, பணத்தை பல மடங்காக பெருக்கி, வாழ்க்கையில் மகிழ்வுற்று இருக்க வாழ்த்துக்கள்.

#வாழ்கபணமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K. RAJESH

K. RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajeshkmoorthy

Nov 4
வீட்டுக் கடன்கள் - An Alternative Approach

ரொம்ப மாசங்களா, வீட்டுக் கடன் பத்தியும், அதை கடன் மாதிரி பாக்காம, முதலீடு மாதிரி consider பண்ணினா, என்னவெல்லாம் செய்யணும்ன்னு ஒரு திரட்டு போடணும்ன்னு பிளான் பண்ணி, இப்போதான் பண்ண முடிஞ்சிது. முழுக்க படிங்க.
உங்களுக்கு/உங்க குடும்பத்துக்கு இந்த முறை சரியாக தோன்றினால், அதை செய்யுங்க. போதும்.

இந்த திரட்டுக்கு நாம எடுக்கப் போற கடன் விபரங்கள்:
தொகை: ₹60,00,000 (60 லட்சம்)
EMI தொகை: ₹50,186
கடன் காலம்: 20 ஆண்டுகள்
நீங்கள் செலுத்தும் மொத்த தொகை: ₹1,20,44,737
விலையில்லா வீடு:

நீங்க வாங்குற வீடு, உங்களுக்கு 20 வருட முடிவில் எந்தவொரு செலவுமில்லாமல் இலவசமாக வேண்டுமா? நான் சொல்லும் வழியை பின்பற்றுங்கள்.

EMI செலுத்துவது கூடவே, ₹15,000 க்கு ஒரு SIP தொடங்குங்கள். அந்த SIP முதலீட்டுத் தொகையை வருடா வருடம் 10% அதிகரித்துக் கொண்டே வாருங்கள்.
Read 6 tweets
Oct 28
குரங்குகளின் கையில் பூமாலை

RBI’s MPC வரும் நவம்பர் 3ஆம் தேதி கூடவிருக்கிறது. இது, வழக்கமான quarterly review அல்ல.

ரிசர்வ் வங்கி, தனது பணவீக்க கட்டுப்பாட்டு விகித (4% +/-2%) இலக்கை எட்டாததால், தங்களது விளக்கத்தை அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த கூட்டம்.
கடந்த 9 மாதங்களாக ரிசர்வ் வங்கி எடுத்த வரி அதிகரிப்பு முயற்சியினால் பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கை எட்ட முடியவில்லை. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம் 7.41% ஆக இருந்தது.

இந்த நேரங்களில், கூட்டம் கூட்டி, ஏன் இலக்கை எட்ட முடியவில்லை? அதற்காக என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஏன் அந்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன? அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப் படுகிறது.

கூட்டம் கூடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. விஷயம் அறிந்தவர்கள் தான் அறிக்கைகளை தயாரிப்பார்களா?
Read 10 tweets
Sep 18
பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை நமது குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லித் தருவது?

வேகமாக வளர்ந்துவரும் காலத்தின் கட்டாயத்தினால், நம்முடைய குழந்தைகள் பல விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில், நமக்கு 30+ வயதினிலே தெரிந்த பணத்தை கையாளும் விதங்களை இப்பொழுதே
பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது நல்லது என்றே கருதுகிறேன்.

சரி. முடிவு செய்தாகிவிட்டது. எப்படி கற்றுக் கொடுப்பது?

கற்றுக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன:
• விளையாட்டின் மூலம்
• நிஜ வாழ்க்கை அனுபவங்கள் மூலம்.

நிஜ உலகில் கற்றலை எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால்?
"ஒரு படி முன்னே" என்ற எனது உத்தியைப் பயன்படுத்தவும்.

இதைச் செய்வதற்கான சில வழிகள் இங்கே:

• எல்லா இடங்களிலும் பணம் வைத்திருப்பதில் இருந்து ஒருவித வங்கி அமைப்புக்கு செல்லுங்கள்.

அவர்களின் பணப்பை, பாக்கெட்டுகள் மற்றும் படுக்கையறையின் தரை போன்ற வெவ்வேறு இடங்களில் பணம் இருந்தால்,
Read 16 tweets
Sep 14
Byju's - A disaster waiting to happen.

#Byju's revenue fell 14% YoY to Rs 2,428 crore on a consolidated basis, down from Rs 2,704 crore the previous year, according to the FY21 results. Byju's reported a Rs 4,500 crore loss in FY21, nearly 17 times the Rs 262 crore loss in FY20.
According to Byju, due to a change in accounting practices, a significant increase in business was not reflected in the revenue figure, and nearly 40% of the revenue was deferred to subsequent years.
Even though Byju's is a privately held company, its financial results got more attention because Deloitte seemed to have taken a long time to sign off on them. Deloitte had some concerns about how Byju's was counting its income,
Read 13 tweets
Mar 27
சம்பள உயர, சேமிப்பும் உயரட்டும்.

வருடாந்திர appraisals இந்நேரம் முடிவடைந்து சம்பள உயர்வு கடிதங்கள் இந்நேரம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இல்லையா? சம்பள உயர்விலிருந்து கூடுதல் பணத்தை எவ்வாறு செலவிடுவது என்று உங்களில் பெரும்பாலோர் ஏற்கனவே திட்டமிட்டிருப்பீர்கள் இல்லையா?
என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எதில் EMI கட்டி வாகனங்கள்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கலாம், எங்கெங்கு வெளிநாட்டு சுற்றுலா செல்லலாம் போன்றவற்றை திட்டமிட தொடங்கி இருப்பீர்கள்.

கொஞ்சம் பொறுங்கள்.

நான் சொல்வதை கேட்ட பிறகு, உங்கள் பிளானிங்கை தொடருங்கள் (உங்கள் மனது மாறாவிட்டால்).
அதற்கு முன்னர்:

Financial planning எப்படி செய்வது என்கிற வழிமுறைகளை கீழ்க்கண்ட திரட்டியில் தந்துள்ளேன். படித்து, புரிந்துகொண்டு, முயற்சி செய்து பார்க்கவும்.

Read 13 tweets
Mar 8
பணவீக்கம் (Inflation) - ஒரு பார்வை...

பணவீக்கம் என்பது பலருக்கும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் அதன் தாக்கத்தை நாம் அனைவரும்தினசரி அனுபவிக்கிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், அதே விலைக்கு குறைவான quantity கிடைப்பது போன்றவை பணவீக்கத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பணவீக்கம் எவ்வாறு செயல்படுகிறது?
அது உங்கள் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

பணவீக்கம் உங்களது பொருளாதாரத்திற்கு எதிரி. அந்த எதிரி எப்படியெல்லாம் உங்களை தாக்கக் கூடுமென்று புரிந்து வைத்துக்கொள்வது வரப்போகும் சிக்கல்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும்.
பணவீக்கம் என்பது காலப்போக்கில் பணத்தின் மதிப்பு அதிகரிப்பதாகும். அது - மளிகைப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம், வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் முதலீடுகளின் வருமானத்தையும் பாதிக்கிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்த வருடம் ₹100க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(