டீ பற்றி எழுதனும் னு ரொம்ப நாளா முயற்சி செஞ்சு நேரம் கிடைக்காதால் எழுதி எழுதி Draft செஞ்சு வெச்சுட்டு இருந்தேன். இப்போ இந்த #அறிவோம்_தேநீர் Poll க்கு பிறகு பதிவு செய்வது சரியான நேரம் னு நினைக்குறேன்.
காபியை விட அதிகமா குடிக்கும் ஒரு பானம்னா அது டீ தான்.ஆனா நாம் குடிக்கும் டீ பற்றி சில பேருக்கு தான் awareness இருக்கு.அது dust tea, leaf,Green tea எதுவானாலும் சரி.மேம்போக்காகா மார்க்கெட் ல கிடைக்கும் brand name மட்டுமே பார்த்து வாங்கறோம்.
//டீ வகைகள் நம் websiteல விரிவா எழுதறேன்
அதில் இருக்கும் ingredients, caffeine content, origin of garden இது பற்றி எல்லாம் யோசிப்பது கூட இல்லை. இதை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டுமா? எந்த டீ நல்லா இருக்கோ அதை வாங்கி குடிக்க வேண்டியது தானே என்று நீங்கள் கேட்கலாம்? இதை பற்றி எல்லாம் நாம் கேட்காததால் தான்
100 க்கு 90 சதவீத நல்ல டீத்தூள்களை வெளிநாட்டிற்கு Export செஞ்சுட்டு மீதி இருக்கும் low quality tea யை நம் தலையில் கட்டி காசு சம்பாரித்து கொண்டு இருகிறார்கள் இந்த தேயிலை தயாரிப்பாளர்கள்.
//This image is not accurate..Because even in herbal tea - caffeine content is there
சரி அப்படினா என்ன மாதிரி டீயை வாங்கலாம் னு உங்க அடுத்த கேள்வியாக இருக்கும்.
முதலில் Green tea பற்றி பார்க்கலாம். நீங்க தினமும் green டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர் என்றால் உடனே உங்க டீ பேக்கிங்கை check செய்யுங்க. அதில் "Caffeine free" னு போட்டிருக்கான னு?
அப்படி இல்லைனா ஒரு blood test செய்யும் lab ல போய் உங்க ரத்தத்தை பரிசோதித்தால் 100 க்கு 90 சதவீதம் பேருக்கு caffeine இருக்கு னு தான் ரிப்போர்ட் வரும். பயப்பட தேவை இல்லை.Caffeine ஒன்றும் விஷம் இல்லை.ஆனா நீங்க ஒரு health Insurance எடுக்க blood test செஞ்சு அதுல Caffeine Positive னு
வந்தால் நீங்க கட்டும் premium அதிகம் ஆகும். அதனால நீங்க health consious க்காக குடிக்கும் Green tea நாளைக்கு உங்களுக்கு சிக்கல் உண்டாக்கி விட கூடாது. இந்த brand அந்த brand னு நான் Open platform ல பரிந்துரைக்க விரும்பல ஆனா "Caffeine Free" னு போட்டிருக்கா னு கண்டிப்பா பாருங்க.
உங்களால் தேர்ந்தெடுக்க முடியல,உதவி வேண்டும் என்றால் DM செய்யுங்க..நான் கண்டிப்பா சொல்றேன். அப்படி சொன்னாலும் கூட அந்த brand பற்றி review எல்லாம் படித்து,Expiry எல்லாம் check செய்து வாங்குங்கள்.
அடுத்து நாம் தினமும் குடிக்கும் டீயை பற்றி பார்ப்போம்.
ஒரு கிலோ டீ Rs.99,000 ரூபாய்கு ஏலம் போச்சுனு நியூஸ்ல படிச்சேன்.ஆம்,ஒரு கிலோ டீ 1 லட்ச ரூபாய்க்கு இருக்கு, வெறும் 150 ரூபாய்க்கும் இருக்கு.இதில் நாம் எதை தேர்ந்தெடுத்து பயன் படுத்துவதுனு குழப்பம் நிச்சயம் இருக்கும்.
நான் tea expert எல்லாம் இல்லை..நான் எப்படி டீ வாங்குவேன் னு மட்டும் பகிர்கிறேன். நான் பொதுவா டீ வாங்கும் போது கவனிப்பது இரண்டு விஷயம்.
1.கொடுக்கும் காசுக்கு அந்த டீ தரமானதா இருக்கனும். 2. அது single garden டீ ஆக இருக்கனும்.
அது என்ன Single Garden tea?
நாம் marketல பார்க்கும் 100க்கு 95 சதவீத டீ single garden tea கிடையாது என்பது தான் உண்மை.நீங்க வாக்களித்த top brand tea உட்பட.பொதுவா டீத்தூள்களை Grade number வைத்து தரம் பிரிப்பார்கள்.Top Grade எல்லாம் விலை அதிகமானது,Low Grade எல்லாம் விலை குறைவானது.
மேலும் டீயின் விலை அது எங்கு விளையுது னு பொருத்து விலை மாறுபடும்.அசாம், நீலகிரி, மலபார்,வால்பாறை இப்படி இடத்திற்கு ஏற்ற விலை. இந்த tea manufacturers என்ன செய்வார்கள் என்றால் Top Grade டீயுடன் விலை குறைந்த low grade dust டீயை கலந்து விடுவார்கள்.அப்போ தான் அவங்களுக்கு நிறைய லாபம்.
நீங்களே ஒரு சின்ன calculation செஞ்சு பாருங்க..ஏலத்தில் ஒரு கிலோ அசாம் டீ Rs.350 க்கு போகுதுனா..அவர்களால் எப்படி வெறும் 500 ரூபாய்க்கு(Avg) அதை விற்பனை செய்ய முடிகிறது?(After ad,packing, transport) நமக்கு சேவை செய்யவா அவங்க வியாபாரம் செஞ்சுட்டு இருப்பாங்க😊 வாய்ப்பில்லை ராஜா😊
அதனால நீங்க வாங்கும் டீ ஒரே இடத்தில் இருந்து வருதா னு பாருங்க.. அது 100% தரமானதா இருக்கும் னு நான் சொல்ல வரல.. Atleast நாம் கொடுக்கும் காசுக்கு கொஞ்சமாவது நியாயம் செய்யும் னு நம்பறேன். அந்த tea poll ல ஒரே ஒருவர் மட்டும் Single garden டீ சாப்பிடுவதாக Comments ல கூறி இருந்தார்👌
Online ல வாங்கினாலும் சரி, factory சென்று வாங்கினாலும் சரி இதை தெளிவு படுத்தி வாங்கி பயன் படுத்துங்கள். இதிலும் உங்களுக்கு தெரிந்தெடுக்க குழப்பம் இருந்தால் DM செய்யுங்கள்.
இப்போ டீ க்கு எழுதி இருக்கேன், இதே மாதிரி நாம் தினமும் பயன் படுத்தும் எத்தனையோ பொருட்கள் இருக்கு. நாம் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே நமக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும்.
சாப்பிடும் பொருட்களில் தொடங்கி Mobile, Laptop, Car னு இப்படி எல்லாதலையும் வெளிநாட்டவர்களுக்கு தனி தயாரிப்பு, நம் இந்தியர்களுக்கு தனி தயாரிப்பு..ஏன்னா மட்டமான பொருட்கள் கொடுத்தால் அமெரிக்கா காரன் செருப்பாலையே அடிப்பான். ஆனா நாம் இங்கே எது கொடுத்தாலும் பரவால, குறைந்த காசா இருந்தா
போதும்னு ஒரு மனநிலைல இருக்கோம்.காச விட தரமான உணவுதான் முக்கியம்னு உணரனும்.
இந்த பதிவு ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதியிருக்கேன்.எனவே தயவுசெஞ்சு வன்மமா கமெண்ட்ஸ் செய்ய வேண்டாம்🙏நியாயமான சந்தேகம் இருந்தால் Comments செய்யுங்கள் இந்த வாரத்தில் எப்டியாச்சும் reply செஞ்சிடுறேன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அறிவோம்கடை : தம்பியண்ணன் இயற்கை நாட்டுக்கோழி விருந்து, கடத்தூர் பிரிவு, கணேசபுரம்
இந்த கடையை பற்றி எழுத ரொம்ப நாளா தவணை. இங்க நிறைய முறை சென்றிருக்கேன். இவங்க special மதிய உணவு தான்.
எப்போ இங்க போனாலும் Non veg மீல்ஸ் தான் சாப்பிடுவேன். உடன் கோச்சை கோழி வறுவல். எங்க போனாலும் பிராய்லர் தான் கிடைக்குது.. இந்த கோச்சை சாப்பிடவே இங்க போவேன். இவங்க நாட்டுக்கோழி குழம்பு கூட ரெண்டு வகையான ரசம் தருவாங்க.. அதுல பச்சை புளி ரசம் சும்மா அல்டிமேட் ஆக இருக்கும்👌
போன முறை போனப்போ மீல்ஸ் தீர்ந்திருச்சு னு. நாட்டுக்கோழி பிரியாணி வாங்கினேன். சீரக சம்பா அரிசில நல்லா இருந்திச்சு. அளவு போதுமானதாக இல்லை😓 ஆனா கொஞ்சம் white rice கேட்டாலும் தருவாங்க.. வாங்கி ரசம் போட்டு சாப்பிடுங்க👌
சமீபத்தில் திவ்யா என்ற பெண் தன் அனுபவத்தை கோவை புட் குரூப்பில் பகிர்ந்திருந்தார் .
சுருக்கமாக இங்கே :
இந்த ஆர்யாஸ் ஹோட்டல் ( ஓமலூர் #omalloor , கேரளா ) லில் restroom மட்டும் பயன் படுத்திவிட்டு , சாப்பாடு ஏதும் சாப்பிடாமல் வெளியேறி இருக்கார் . அதை பார்த்த உரிமையாளர்
உணவு ஏன் சாப்பிடலை னு கேட்டிருக்கார் . உடம்பு சரி இல்லை , நான் வேண்டும் என்றால் பார்சல் எதாவது வாங்கி கொள்கிறேன் னு சொல்லி இருக்கார். அதற்கு அந்த உரிமையாளர் இதென்ன 'Public Toilet' ah , யார் வேணா வந்து பாத்ரூம் போக .. ஒழுங்கு மரியாதையா 500 ரூபாய் எடு னு மிரட்டி இருக்கார்
இந்த பெண் கொடுக்க மறுத்து இருக்கார் . எந்த ஹோட்டல் போனாலும் இலவச தண்ணீர் , இலவச பாத்ரூம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஹோட்டல் களின் கடமை னு சொல்லி இருக்கார் . இதை கேட்டு கெட்ட கெட்ட வார்த்தையில் அந்த பெண்ணை திட்டி இருக்கார் . தாங்க முடியாம அங்கயே அழுது இருக்கார் .
நான் சில வருடங்கள் முன்னாடி ஒரு மருத்துவரிடம் பேசிட்டு இருந்தப்போ அவர் சொன்னது.. முடிஞ்ச அளவு குழந்தைகளை வெளிய சாப்பிடுவதை தவிர்த்திடுங்க.. அதுலயும் இந்த சவர்மா னு ஒன்னு விக்கறாங்க ல அதை ஒரு முறை கூட ஆசைக்கு வாங்கி கொடுத்திட வேண்டாம். அதை ஒரு நாள் சாப்பிடுவது என்பது
ஒரு மாசம் junk food சாப்பிடுவதற்கு சமம்னு சொன்னார்.கூடவே coke or any carbonated drinks(Disolved carbondioxide gas)அது மதுவிற்கு மேல் தீங்கானதுனு குழந்தைக்கு சொல்லி வளர்க்க சொன்னார்.சவர்மா எவ்ளோ கேடானது,இதை நிறைய பேருக்கு தெரியப்படுத்தனும்னு தயார் செஞ்சது தான் மேல இருக்கற போஸ்டர்.
இப்போ சமீபத்தில் ஒரு பெண் சவர்மா சாப்பிட்டு இறந்தார் மேலும் நிறைய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி னு செய்தி எல்லாரும் படிச்சிருப்பீங்க. கூடவே ஒரு மருத்துவர் சொல்ற அறிவுரையும் இங்கே பகிருந்துள்ளேன். படிங்க
#அறிவோம்கடை : Chin chin, Residency Towers,CBE
நான் நேத்து போஸ்ட் செஞ்ச பில் இங்க சாப்பிட்டது தான். இதுதான் முதல் முறையும் கூட.இது தான் கடைசி முறைனும் சொல்லலாம்.சில elite people கொடுத்த பில்ட்அப் எல்லாம் பார்த்து தான் இந்த ரெஸ்டரண்ட்க்கு போனேன்.சரி hypeக்கு worth ஆனு பார்க்கலாம்
இவங்க கிட்ட மெனு கார்டு கிடையாது.மெனுவை தெரிந்துகொள்ள இதோ கீழே படத்தில் உள்ளது போல் ஒரு QR கோட் இருக்கும் அதை ஸ்கேன் செய்தால் எல்லா dishes ம் விலையுடன் பார்த்து கொள்ளலாம்.நாங்க எல்லா dishesம் விலை பார்த்து தான் ஆர்டர் செய்தோம்.ஆனால் அளவு அதற்கு ஏற்றதாக இருந்ததா?வாங்க பார்க்கலாம்
Lung Fung Soup : 2.5/5
ரொம்ப சுமாரான சூப். ஒரு சூப் வாங்கி அதை 1 by 2 ஆக தர சொன்னோம்.
அளவு வகையில் இதை குறை சொல்ல முடியாது.. ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாராக தான் இருந்திச்சு. இதன் விலை : ₹300/-
#அறிவோம்கடை : மதுரை ஜிகர்தண்டா, Near Ramakrishna Hospital, Coimbatore.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா கடை பற்றி எழுதி இருந்தேன். அங்க எந்த ஒரு தனித்துவ சுவையும் இல்லாமல் நார்மல் ஆக இருந்திச்சு. ஆனா இங்க நான் எதிர்பார்கல இவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் னு.
Nuts Jigarthanda : 4.5/5
வேற எங்கேயும் இந்த nuts ஜிகர்தண்டா நான் சாப்பிட்டதில்லை.. முந்திரியை மிக அருமையா roast செஞ்சு அதை இந்த ஜிகர்தண்டா ல mix செஞ்சிருக்காங்க..சாப்பிடும் போது roasted nuts சுவை தனியா தெரியும். கோவையில் இப்போ வரை இது தான் பெஸ்ட் ஜிகர்தண்டா👌👌👌
Special Jigarthanda: 3.75/5
இது நம் எல்லா பக்கமும் கிடைக்கும் ஜிகர்தண்டா தான். முதலில் nuts சாப்பிட்ட காரணத்தால் இதன் சுவை பெருசா தெரியல.. ஆனா குறை ஏதும் சொல்ல முடியாது..