உத்தரகாண்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறை சுவரில் வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டு இருந்தது.
இதை மாற்றுவதற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த சிவபக்தர் ஒருவர் தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து, கோயிலின் கருவறையில் இருந்த வெள்ளி தகடுகளை அகற்றி விட்டு, தங்கத் தகடு பதிக்கும் பணி நடந்து முடிந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.
தற்போது குளிர் அதிகமாக உள்ளதால் கேதார்நாத் ஆலயத்தின் நடை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கும் பணிகள்
கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றுவந்தது.
தற்போது, இதன் பணி நிறைவடைந்து 550 தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.
இது பற்றுக் கூறிய ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டித் தலைவர் அஜேந்திர அஜய், "கடந்த மூன்று நாள்களாக இப்பணி நடந்து வந்தது. 'IIT Roorkee', இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த என ஆறு பேர் கொண்ட குழு கேதார்நாத் தாமுக்குச் சென்று கோயிலின் கருவறையை ஆய்வு செய்தது.
நிபுணர்களின் அறிக்கைக்குப் பிறகு கேதார்நாத் கோயிலின் கருவறையில் தங்கம் பூசும் பணி தொடங்கப்பட்டது.
18 கோவேறு கழுதைகள் மூலம் 550 தங்கத்தகடுகள் மூன்று நாள்களுக்கு முன்பு கேதார்நாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு ASI அதிகாரிகளின் மேற்பார்வையில் 19 கைவினைஞர்கள் தங்க அடுக்குகளைப் பதிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தனர் " என்று கூறினார்.
திருக்கேதாரநாதரின் புகைப்படம், புதிய தங்க தகடுகள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்வர்ண மயமாக காட்சியளிக்கும் திருக்கோவில் மூலஸ்தானம் .
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்.
கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால் அவ்விருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள்.
அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும்,