அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், “திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்” என்றார்.
அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு, தெரிந்து கொள்கிறார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது.
இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி
இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார்.
“சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல இரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால்
சாபம் நீங்கும்” எனக் கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது.
இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.
அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார்.
இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று.
இத்தலத்திற்கு பாரிஜாதவனம் வன்னிவனம் வில்வ வனம் ஆதிரத்னேஸ்வரம் அஜகஜபுரம் பதுமபுரம் முத்திபுரம் என்பன வேறு பெயர்களாகும்.
கோயில் கோபுரம் மிக உயர்ந்தது 9 நிலை 130 அடி உயரம் கொண்டதாகும்.
இங்கு விநாயகர், முருகர், சூரியன், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர் மாணிக்கவாசகர், பைரவர், சந்திரன், தண்டாயுதபாணி முதலிய சந்நிதிகள் உள்ளன.
அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்” பாடியுள்ளார்.
சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.
சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த
தீவினை நீங்கும்.
அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.
*குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :*
குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.
அதன் விபரம் :
*தேவையான பொருட்கள்*
எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்..
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு,
அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .
பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்..
சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
சிவபுராணத்தின் பெருமைகள் :
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.