1.அருள்மிகு சூரியணார் கோயில், சிவன்/காசிவிஸ்வநாதர்
2 அருள்மிகு பாபநாசம் சிவன் கோவில், பவநாசர்
3.அருள்மிகு. கொளப்பாக்கம் சிவன் கோவில்,
4.அருள்மிகு ஸ்ரீவைகுந்தம் சிவன் கோவில், கைலாசநாதர்
5.அருள்மிகு. பரிதிநியமம் சிவன் கோவில், பருதியப்பர்
சந்திர பகவான் வழிபாட்டிற்கு
1.அருள்மிகு திங்களூர் சிவன் கோவில், கைலாசநாதர்
2.அருள்மிகு.சேரன்மாதேவி சிவன் கோவில், அம்மைநாதர்
3.அருள்மிகு. சோமங்களம் சிவன் கோவில், சோமநாதர், சந்திரன்
4.அருள்மிகு. திருவரகுணமங்கை பெருமாள் கோவில், விஜயாசனர்
செவ்வாய் பகவான் வழிபாட்டிற்கு
1.அருள்மிகு. வைத்தீஸ்வரன் கோயில், வைத்தீஸ்வரர்
2.அருள்மிகு. கோடகநல்லூர் சிவன் கோவில், காசி விஸ்வநாதர்
3.அருள்மிகு. பூவிருந்தவல்லி சிவன் கோவில் வைத்தீஸ்வரன்
4.அருள்மிகு. சிறுவாபுரி சின்னம்பேடு முருகன்/ஸ்ரீஆதிமூலவர்
5.அருள்மிகு. திருக்கோளூர் பெருமாள் கோவில், வைத்தமாநிதி பெருமாள் 6. அருள்மிகு உஜ்ஜெயின் சிவன் கோவில், மங்களநாதர்
புதன் பகவான் வழிபாட்டிற்கு
1. அருள்மிகு. ஆரண்யேசுவரர் கோயில், ஆரண்ய சுந்தரேஸ்வரர்.
2.அருள்மிகு. தென்திருப்போரை சிவன் கோவில், கைலாசநாதர்
3.அருள்மிகு. கோவூர் சிவன் கோவில் திருமேனீஸ்வரர் 4. அருள்மிகு. திருப்புளியங்குடி பெருமாள் கோவில், பூமிபாலர்.
வியாழன்-குருபகவான் வழிபாட்டிற்கு
1.அருள்மிகு. ஆலங்குடி சிவன் கோவில், காசிஆரண்யேசுவரர்
2.அருள்மிகு. முறப்பநாடு சிவன் கோவில், கைலாசநாதர்
3.அருள்மிகு. திருவலிதாயம் (பாடி) சிவன் கோவில் வலிதாயநாதர்.
4.அருள்மிகு. தென்குடித்திட்டை சிவன் கோவில், வசிஷ்டேஷ்வரர்.
5.அருள்மிகு. ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், ஆதிநாதன்.
வெள்ளி-சுக்கிர-பகவான் வழிபாட்டிற்கு.
1. அருள்மிகு. கஞ்சனூர் சிவன் கோவில், அக்னீஸ்வரர்.
2.அருள்மிகு. சேர்ந்தபூமங்கலம் சிவன் கோவில் கைலாசநாதர்
3.அருள்மிகு.மாங்காடு சிவன் கோவில், வெள்ளீஸ்வரர் சுக்கிரன்
4.அருள்மிகு. தென்திருப்போரை பெருமாள் கோவில் மகர நெடுங்குழைக்காதன்.
சனிபகவான் வழிபாட்டிற்கு
1.அருள்மிகு. திருநள்ளாறு சிவன் கோவில், தர்ப்பாரண்யேசுவரர்
2.அருள் மிகு. ஸ்ரீவைகுந்தம் சிவன் கோவில் கைலாசநாதர்
3.அருள்மிகு. பொழிச்சலூர் சிவன் கோவில் அகஸ்தீஸ்வரர், சனி
4.அருள்மிகு. கல்பட்டு சனிபகவான்
5.அருள்மிகு. கோலியனூர் சிவன் கோவில் வாலீஸ்வரர், சனி
6.அருள்மிகு. குச்சனூர் சனிபகவான்.
7.அருள்மிகு. பெருங்குளம் சிவன் கோவில், வழுதீயீசர்
8.அருள்மிகு. திருக்கொள்ளிகாடு-சிவன் கோவில், அக்கினீஸ்வரர்
9.அருள்மிகு. திருநாரையூர் சிவன் கோவில், சௌந்தரநாதர்.
10. அருள்மிகு. விளங்குளம் சிவன் கோவில் அட்சயபுரீஸ்வரர்
இராகு பகவான் வழிபாட்டிற்கு
1.அருள்மிகு. திருநாகேஸ்வரம் சிவன் கோவில், நாகேஸ்வரர்
2.அருள்மிகு. குன்னத்தூர் சிவன் கோவில் ஸ்ரீகோதபரமேஸ்வரன்
3.அருள்மிகு குன்றத்தூர் சிவன் கோவில், நாகேச்சுவரசுவாமி, இராகு
4. அருள்மிகு ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோவில் ஆதிகேசவர் 5. அருள்மிகு திருதொலைவில்லி மங்கலம் பெருமாள் கோவில் தேவப்பிரான்.
6.அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் காளத்திநாதர்
கேது பகவான் வழிபாட்டிற்கு
1.அருள்மிகு. கீழப்பெரும்பள்ளம் சிவன் கோவில், நாகநாதர்.
2.அருள்மிகு. ராஜபதி சிவன் கோவில் கைலாசநாதர்
3.அருள்மிகு. கெருங்கம்பாக்கம் சிவன் கோவில், நீலகண்டேஸ்வரர், கேது
4.அருள்மிகு. ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோவில் ஆதிகேசவர்.
5.அருள்மிகு. திருதொலைவில்லி மங்கலம் பெருமாள் ஸ்ரீஅரவிந்தன்.
6.அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் காளத்திநாதர்.
சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?
என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள்.
ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள்.
சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?
சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.
சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவே தான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை.
ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள்.
திருமால், ஆவணி நாராயணபுரம் என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.
*குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :*
குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.
அதன் விபரம் :
*தேவையான பொருட்கள்*
எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்..
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு,
அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .
பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்..
சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
சிவபுராணத்தின் பெருமைகள் :
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.