#திருப்போரூர் #கந்தசாமிகோவில்
செங்கல்பட்டு மாவட்டம். இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தசுவாமி என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார்.
திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே
எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. சுயம்புமூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும்.
பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் இக்கோயிலில் விளங்குகிறார்.
கருவறையில் உள்ள முருகன் கிழக்கு நோக்கியிருந்தாலும் கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாயிலைக் கடந்து, வெளிப் பிராகாரத்தில் உள்ள கோபுர வாயிலையும் கடந்தே முருகன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும் . மூல மூர்த்தி பனையடியில் புதைந்து இருக்கிறார். ஆதலால் புற்றிடங்
கொண்ட அந்தப் பெருமானுக்கும் அவன் துணைவியாருக்கும் புனுகுச் சட்டமே சாத்தி அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது, உருவங்களும் மொழு மொழு வென்றே இருக்கும். இந்த மூல மூர்த்திகளுக்கு முன்னால் மிகச் சிறிய வள்ளி தெய்வயானை சமேதனாகக் கந்தனை உருவாக்கி நிறுத்தி யிருக்கிறார்கள். இந்தக் கந்தன்
கரங்களிலே உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லை. தூக்கிய திருக்கரங்களிலே ஜபமாலையும் கமண்டலமுமே காணப்படுகின்றன. இங்குள்ள முருகன், பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்த பின், தானே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டிருக்கிறான்.
இங்கே வள்ளியையும் தெய்வயானையையும் உடன் உள்ளனர்
என்றாலும், அவர்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. இக் கோயிலில் இருபத்து நாலு தூண்களோடு கூடிய ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயமும், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலியோரது உருவங்கள் உண்டு. இது போர் ஊர் அல்லவா? சூரபதுமனின் துணைவர்களான அசுரர்கள்
போருக்கு எழுந்த போது, அவர்களை இங்குதான் சமர் புரிந்து வென்றார் என்பதுதானே வரலாறு. ஆகையால் சமரபுரி முருகன் சந்நிதியில் இவ்வீரர்களை யெல்லாம் உருவாக்கி நிறுத்தியிருக்கின்றனர். திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும்,
தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில் கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்து முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப் பட்டுள்ளது. இன்று இங்குள்ள கோயிலும் குளமும் 300 வருஷங்களுக்குள்
உருவானவைதான். என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது. பொதுவாக அம்மன் கோயில்களில் தான் நவராத்திரி விழா கொண்டாடப் படுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் அம்மனின் மருமகள்களான
வள்ளி தெய்வானைக்கு நவராத்திரி விழா எடுத்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருப்பதும் சிறப்பாகும். இங்கு மாசி மாத பிரம்மோத்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
முகவரி: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் (சமராபுரி) திருப்போரூர். Tamil Nadu 603110
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 14
பூஜை அறையில் வக்கப்படும் தண்ணீர் பற்றிய தகவல்:
பொதுவாகவே எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். சில பேர் வீட்டு பூஜை அறையில் செம்பு அல்லது பித்தளை சொம்பிலும் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த தண்ணீர் எதற்காக பூஜை அறையில் வைக்கப் Image
படுகிறது? ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் தெய்வங்களுக்கு அருந்துவதற்காக இந்த தண்ணீரை நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கிறோம். தண்ணீரை எந்த இடத்தில் திறந்து வைத்தாலும் அது இயற்கையாக ஆவியாகத்தான் போகும். திறந்தபடி வைத்திருக் கக்கூடிய தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத்தான் செய்யும். வீட்டு Image
பூஜையறையில் வைக்கும் நீர் குறைவதினால் எந்த பிரச்சனை கிடையாது மாறாக வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறையாமல் இருந்தால் தான் வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பது அர்த்தம். ஆவியாதல் என்ற செயல்பாடும் இறைவனால் நடத்தப்படும் ஒரு விஷயமே ஆகவே வீட்டு பூஜை அறையில்
Read 7 tweets
Nov 14
#தீர்த்தகிரீஸ்வரர்_திருக்கோயில்
தர்மபுரியிலிருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் அமைந்துள்ளது. தீர்த்தமலையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் ImageImage
வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை ஆகும். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். இத்தலத்தில் அமைந்துள்ள ImageImage
விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். இக்கோயிலில் மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம் மற்றும் வருண தீர்த்தமும், கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும், மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தமும் உள்ளது. (அதனாலேயே தீர்த்தமலை என்று பெயர்) மலை மீது அமைந்த Image
Read 11 tweets
Nov 14
#MahaPeriyava
To live a life inspired by dharma means coming under a certain discipline and following certain rules of conduct. It is important for people to acquaint themselves with these rules. It would be ideal if they lived according to them on their own because to abide by Image
them out of compulsion is not a matter of pride. "Sampradaya" or tradition is something that has evolved naturally and it is natural that people adhere to them. The customs and rules making up a sampradaya are not all of them written down in the sastras. Anything laid down as a
law becomes a matter of compulsion. Nowadays everywhere people are asked to "Do this" and "not to do that." Notices are displayed about this and that. They are displayed even where I perform the puja (in the Matha), notices that say, "Don't keep talking", "Don't wear shirts" etc.
Read 14 tweets
Nov 13
26,000 கொலைக்கு ஒரு அப்ரூவர் கூட இல்லை! ஆவேசமான பொன்மாணிக்கவேல் ( ஐபிஸ் ஓய்வு )
இவரால் தான் கொஞ்சமாவது திருட்டுப் போன தெய்வ விக்ரகங்கள் கிடைத்துள்ளன. ஓரளாவது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தது. இவருக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும் ஆதங்கமும் நமக்கு இல்லை
#ponmanikavel #htt
தொடர்ச்சி
ஆன்மீக விஷயங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் இவர்! கையெடுத்துக் கும்பிடணும்🙏🏻
Read 4 tweets
Nov 13
#MahaPeriyava
It must have been 1957. Kanchi Maha Swamigal and Sri Jayendra Saraswathi Swamigal were camping in a house in Rameswaram Road, T. Nagar Chennai. I was living with my parents in the Northern end of the same street. My age then was 22. I was studying in a Secondary Image
Grade Teachers Training School.
Sometimes Maha Periyava used to pass through my house, either in the morning or in the evening. I have often seen Sri Swamigal cross my house on the street. My mother at those times would be waiting at the entrance with a camphor plate, after
having drawn a kolam in front of our house. It became her custom to show the lighted camphor before Sri Maha Periyava when he came in front of our house, and prostrate to him. The progressive thoughts in my mind, a sense of defiance, the nerve of youth, the lack of maturity to
Read 31 tweets
Nov 12
#ஆழ்வார்_பாசுர_அமுதமொழி
ஸதாம் கதயே நமஹ என்பதை #நம்மாழ்வாரின் நிலை விளங்க வைக்கிறது.
திருக்குடந்தையில் கோமளவல்லித் தாயாரின் கேள்வனான சாரங்கபாணிப் பெருமாள் திருவடிகளிலே நம்மாழ்வார் சரணாகதி செய்தார். “திருமாலே! உன்னை விட்டால் எனக்கு வேறு புகல் இல்லை! நீயே அடியேனை இப்பிறவி பெரும் ImageImage
துயரில் இருந்து காத்து முக்தி அளிக்க வேண்டும்” என்று திருமாலிடம் மன்றாடிய #நம்மாழ்வார்
“என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!”
என்று பாடினார்.
“இறைவா! நானும் முக்திக்காக எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன். உன்னைத்
தவிர மற்றொருவர் காலிலும் நான் விழ மாட்டேன். உன்னைத் தவிர வேறு எந்த வழியில் முக்தி வந்தாலும் அந்த முக்தியே எனக்கு வேண்டாம்!” என்று இப்பாடலின் மூலமாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட சாரங்கபாணிப் பெருமாள், “ஆழ்வீர்! உங்களுக்கு முக்திதானே வேண்டும்? அது எப்படிக் கிடைத்தால் என்ன? உங்கள்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(