#ஆழ்வார்_பாசுர_அமுதமொழி
ஸதாம் கதயே நமஹ என்பதை #நம்மாழ்வாரின் நிலை விளங்க வைக்கிறது.
திருக்குடந்தையில் கோமளவல்லித் தாயாரின் கேள்வனான சாரங்கபாணிப் பெருமாள் திருவடிகளிலே நம்மாழ்வார் சரணாகதி செய்தார். “திருமாலே! உன்னை விட்டால் எனக்கு வேறு புகல் இல்லை! நீயே அடியேனை இப்பிறவி பெரும்
துயரில் இருந்து காத்து முக்தி அளிக்க வேண்டும்” என்று திருமாலிடம் மன்றாடிய #நம்மாழ்வார்
“என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!”
என்று பாடினார்.
“இறைவா! நானும் முக்திக்காக எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன். உன்னைத்
தவிர மற்றொருவர் காலிலும் நான் விழ மாட்டேன். உன்னைத் தவிர வேறு எந்த வழியில் முக்தி வந்தாலும் அந்த முக்தியே எனக்கு வேண்டாம்!” என்று இப்பாடலின் மூலமாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட சாரங்கபாணிப் பெருமாள், “ஆழ்வீர்! உங்களுக்கு முக்திதானே வேண்டும்? அது எப்படிக் கிடைத்தால் என்ன? உங்கள்
முயற்சியால் கிடைத்தால் என்ன? வேறொருவர் காலில் விழுந்து பெற்றால் என்ன? கிடைக்க வேண்டிய முக்தி கிடைத்ததே என்று நீங்கள் பெற்று மகிழலாமே! அதை விட்டுவிட்டு நான் கொடுத்தால் தான் முக்தியையே ஏற்பேன் என்பது சரியாகப் படவில்லையே!” என்றார்.
அதற்கு நம்மாழ்வார், “இல்லை இறைவா! நீ கொடுத்தால்
தான் அது முக்தி! வேறு வழியில் வந்தால் அதை முக்தியாகவே நான் கருத மாட்டேன்! அது காலனைக் கொண்டு மோதிரம் இடுமா போலே!” என்றார்.
காலனைக் கொண்டு மோதிரம் இடுதல் என்றால் என்ன? ஒரு ஊரில் வாழ்ந்துவந்த ஏழைக்கு நீண்ட நாட்களாக தங்க மோதிரம் செய்து கையில் அணிய வேண்டும் என்ற ஆசை. ஆனால் வறுமையில்
வாடிய அவரால் தங்க மோதிரம் வாங்க முடியவில்லை. இந்நிலையில் அவ்வூரில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கான பத்து நாள் இறுதிச் சடங்குகளைச் செய்த அவரது மகன், பத்தாம் நாளில் தங்கத்தில் யம தர்ம ராஜாவின் விக்கிரகம் செய்து அதைத் தானம் செய்ய முன்வந்தான். தங்கத்தில் யமதர்ம ராஜா விக்கிரகம்
செய்து அதைத் தானம் செய்தால், இறந்தவர் நற்கதி அடைவார் என்பதற்காக அவ்வாறு செய்தான். ஆனால் அந்த யமதர்மன் விக்கிரகத்தைத் தானமாக வாங்க யாருமே முன்வரவில்லை. வீட்டிலேயே பல பிரச்னைகள் இருக்க, யமனை வேறு வீட்டுக்கு அழைத்துச் செல்ல யார்தான் முன்வருவார்கள்? மோதிரம் வாங்க நினைத்த இந்த ஏழை,
அவசர அவசரமாகப் போய் அந்த யமன் விக்கிரகத்தைத் தானம் வாங்கி வந்தார். அதை உருக்கித் தங்க மோதிரம் செய்து கையில் அணிந்து கொண்டார். ஆனால் இப்போது என்ன பிரச்னை என்றால் மோதிரத்தைக் காணும் போதெல்லாம், யமன் எப்போது நம்மை வந்து பிடித்துச் செல்வானோ என்ற யம பயம் அவருக்கு ஏற்பட்டது. இக்கதையை
உதாரணமாகக் காட்டிய ஆழ்வார், “இறைவா! மோதிரம் தான் தேவை என்பதற்காக யமனை உருக்கி மோதிரம் அணிதல் உசிதமாகுமா? நல்ல தங்கத்தால் தானே மோதிரம் செய்வோம்? அது போலத் தான் மோட்சம் தேவை என்றால் அதற்காக ஏதோ ஒரு வழியில் அதைப் பெற்றால் அது உண்மையான மகிழ்ச்சி அளிக்காது. உன்னைப் பெறுவது தான் முக்தி
அதையும் உன் மூலமாகவே பெற்றால்தான் மகிழ்ச்சி! உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!” என்றார் ஆழ்வார்.
“நம்மாழ்வாரே! உங்கள் வாயால் உங்கள் சரணாகதி நிஷ்டையை நன்றாகக் கேட்டு மகிழவே உங்களிடம் இப்படிக் கேள்வி கேட்டேன்!” என்று சொன்ன சாரங்கபாணிப் பெருமாள், "திருவாய்மொழி ஆயிரம்
பாசுரங்களையும் பாடி நிறைவு செய்யுங்கள். அதன்பின் என் திருவடிகளை வந்து அடைவீர்கள்!” என்று கூறி அருளினார். இப்படி இறைவனை அடைவதற்கு இறைவனே வழி என்ற திடமான உறுதி பூண்டிருக்கும் நம்மாழ்வாரைப் போன்ற சரணாகதர்களுக்கு ஒரே புகலிடமாகத் திருமால் இருப்பதாலே, அவர் ‘ஸதாம் கதி:’ என்று அழைக்கப்
படுகிறார். ஸத் என்பது சரணாகதி நிஷ்டையில் நிலைபெற்றவர்களைக் குறிக்கிறது. கதி என்றால் புகலிடம். ‘ஸதாம் கதி:’ என்றால் சரணாகதர்களுக்குப் புகலிடமாக இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 451-வது திருநாமம்.“ஸதாம் கதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தானே புகலிடமாக இருந்து
திருமால் காத்தருள்வார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பூஜை அறையில் வக்கப்படும் தண்ணீர் பற்றிய தகவல்:
பொதுவாகவே எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். சில பேர் வீட்டு பூஜை அறையில் செம்பு அல்லது பித்தளை சொம்பிலும் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த தண்ணீர் எதற்காக பூஜை அறையில் வைக்கப்
படுகிறது? ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் தெய்வங்களுக்கு அருந்துவதற்காக இந்த தண்ணீரை நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கிறோம். தண்ணீரை எந்த இடத்தில் திறந்து வைத்தாலும் அது இயற்கையாக ஆவியாகத்தான் போகும். திறந்தபடி வைத்திருக் கக்கூடிய தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத்தான் செய்யும். வீட்டு
பூஜையறையில் வைக்கும் நீர் குறைவதினால் எந்த பிரச்சனை கிடையாது மாறாக வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறையாமல் இருந்தால் தான் வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பது அர்த்தம். ஆவியாதல் என்ற செயல்பாடும் இறைவனால் நடத்தப்படும் ஒரு விஷயமே ஆகவே வீட்டு பூஜை அறையில்
#தீர்த்தகிரீஸ்வரர்_திருக்கோயில்
தர்மபுரியிலிருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் அமைந்துள்ளது. தீர்த்தமலையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர்
வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை ஆகும். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். இத்தலத்தில் அமைந்துள்ள
விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். இக்கோயிலில் மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம் மற்றும் வருண தீர்த்தமும், கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும், மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தமும் உள்ளது. (அதனாலேயே தீர்த்தமலை என்று பெயர்) மலை மீது அமைந்த
#MahaPeriyava
To live a life inspired by dharma means coming under a certain discipline and following certain rules of conduct. It is important for people to acquaint themselves with these rules. It would be ideal if they lived according to them on their own because to abide by
them out of compulsion is not a matter of pride. "Sampradaya" or tradition is something that has evolved naturally and it is natural that people adhere to them. The customs and rules making up a sampradaya are not all of them written down in the sastras. Anything laid down as a
law becomes a matter of compulsion. Nowadays everywhere people are asked to "Do this" and "not to do that." Notices are displayed about this and that. They are displayed even where I perform the puja (in the Matha), notices that say, "Don't keep talking", "Don't wear shirts" etc.
26,000 கொலைக்கு ஒரு அப்ரூவர் கூட இல்லை! ஆவேசமான பொன்மாணிக்கவேல் ( ஐபிஸ் ஓய்வு )
இவரால் தான் கொஞ்சமாவது திருட்டுப் போன தெய்வ விக்ரகங்கள் கிடைத்துள்ளன. ஓரளாவது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தது. இவருக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும் ஆதங்கமும் நமக்கு இல்லை #ponmanikavel#htt
தொடர்ச்சி
ஆன்மீக விஷயங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் இவர்! கையெடுத்துக் கும்பிடணும்🙏🏻
#MahaPeriyava
It must have been 1957. Kanchi Maha Swamigal and Sri Jayendra Saraswathi Swamigal were camping in a house in Rameswaram Road, T. Nagar Chennai. I was living with my parents in the Northern end of the same street. My age then was 22. I was studying in a Secondary
Grade Teachers Training School.
Sometimes Maha Periyava used to pass through my house, either in the morning or in the evening. I have often seen Sri Swamigal cross my house on the street. My mother at those times would be waiting at the entrance with a camphor plate, after
having drawn a kolam in front of our house. It became her custom to show the lighted camphor before Sri Maha Periyava when he came in front of our house, and prostrate to him. The progressive thoughts in my mind, a sense of defiance, the nerve of youth, the lack of maturity to
The sastras have ordained that Vaisvadevam or Bhuta Yagnam, puja and homam or Deva Yagnam, Anna danam or Manushya Yagnam and Tarpanam, Sraddham or Pitru Yagnam are to be performed by all. Apart from these, those who are well versed in the Vedas and have benefited from learning
them, should pass on this knowledge to others by teaching the Vedas. This is Bramha Yagnam or ‘Intellectual Sacrifice’. This is the principle laid down.. These five yagnas have been performed right from the time of the Rishis, down the generations. They were performed as per
the codes laid down, from the beginning till the time of our grandparents. In the normal course, these would have continued without break till the end of the world. However, our generation has the dubious distinction of having snapped this precious thread. We have not only