தென் தமிழக கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அறிவித்தார் பெரியார் வட தமிழக கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம் ஏன் தென் தமிழக கோவில்களுக்குள் அவர்கள் செல்ல முடியாது ? என்று 1/7
கேள்வி எழுப்பி ஆலய நுழைவு போரட்டத்தை முடுக்கினார் பெரியார் மேலும் ஏன் நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமா அல்லது சாமிக்கு சக்தி போய் விடுமா ? அப்படி சக்தியற்ற அந்த கல்லை தொழுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? என்று கேட்டார் 2/7
மேலும் நாடார்களை ஆதரிக்கும் விதமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி வரும் வரை நாடார்கள் காத்திருக்க தேவையில்லை என்று அறிவித்தார், வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தில் நாடார்களை தான் அவர் பெருமளவு ஈடுபடுத்தினார் தனது பிரச்சாரத்தை வைக்கத்துடன் நிறுத்தி கொள்ளாமல் நாகர்கோவில் 3/7
தக்கலை மார்த்தாண்டம் போன்று நாடார்கள் வாழும் பகுதிகளிலும் மேற்கொண்டார் வைக்கம் போராட்ட வெற்றிக்கு பிறகு சுசீந்திரம் ஆலய நுழைவு போராட்டத்துக்கான பிரச்சாரத்தில் தோழர் ஜீவாவுடன் ஈடுபட்டார் மேலும் காங்கிரஸ் கட்சியில் போதுமான அளவுக்கு நாடார்கள் பொறுப்புகளில் இல்லை என்று கூறி இந்த 4/7
பிரச்சினையை காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் தாம் எழுப்பி வருவதாகவும் குறிப்பிட்டுகிறார் நாடார்கள் மீது தனக்கு நல்லபிப்பிராயம் உள்ளதாகவும் கள்ளுக்கடை மறியலின் போது தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாடார்கள் கள் இறக்கவில்லை என்பதை நன்றியோடு நினைத்து கொள்வதாகவும் குறிப்பிடுகிறார் 5/7
பெரியாரின் பணியை நாடார் குல மித்ரன் நாளிதழ் “நம் தேசத்தில் துவேசமின்மை ஒருவருக்கொருவர் பரஸ்பர நன்னம்பிக்கை ஒற்றுமை சகித்தல் அகிம்சை முதலியவை வெற்றிபெற்ற சுயராஜ்யம் தான் உண்மையான விடுதலை என்ற கொள்கையுடையவர் பெரியார் எங்களுக்குள் சாதி மத சண்டை மற்றும் வகுப்பு வித்தியாசம் 6/7
எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை சுயராஜ்யம் (விடுதலை ) கொடுத்தால் போதும் என்ற கொள்கை கொண்ட நபர்களுக்கு இவர் (பெரியார்) பரம எதிரியாவர் தீண்டாமையை காலின் கீழே போட்டு மிதிப்பவர் என்று கூறி பாராட்டியுள்ளது 7/7 ..
ராவ் பகதூர் நமசிவாயம் சிவராஜ் B.A.,B.L. தந்தை சிவராஜ் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார் தன்னை தேடி வந்த துணை நீதிபதி பதவி ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதி இயங்கினார் 1927 வரை ஆதிராவிட மாணவர்களை சேர்த்து கொள்ளாத பச்சையப்பன் கல்லூரியின் மீது வழக்கு தொடர்ந்து 1/6
அந்த வழக்கில் சிவராஜ் அவர்கள் வெற்றி பெற்றார், அதன் பின்னர் தான் 1928-ஆம் ஆண்டு முதல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களை கல்லூரியில் சேர்த்து கொண்டனர் அன்றைய மதராஸ் மாகாணத்தின் மேயராகவும் 1945 முதல் 1946 பதவிவகித்தார் தந்தை சிவராஜ் 2/6
இவர் தன் பதவி காலத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய காலபந்து மைதானத்தை கட்டினார் பின்பு அந்த காலந்து மைதானத்தை காமராஜர் ஆட்சி காலத்தில் காமராஜர் ஜவஹர்லால் நேரு மைதானம் என்று பெயரிட்டார் சென்னை மாநகர மேயராக இருந்த
மக்களின் காலத்தில் கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தினார் 3/6
இந்த ஆவணங்கள் இலங்கை
மலையகத்திலிருந்து 1964 ஸ்ரீமா
சாஸ்த்திரி ஒப்பந்தப்படி தமிழ்நாடு திரும்பிய மக்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதர் வழங்கும் ஆவணம் இதில் குடும்ப உறுப்பினர் விவரமும் இந்தியாவில் பூர்வீக குடும்பத்தின் ஊர் முகவரியும் இந்தியா வந்த தேதியும் பதிவும் இருக்கும் 1/8
இங்கு வந்த சேர்ந்த மக்களுக்கு ,
கல்வி, வேலைவாய்ப்பு வணிக கடன் வழங்கவும் விதிகள் வகுத்து
செயல்படுத்தவும் குடும்ப கார்டு என்ற
அடையாள அட்டையும் மத்திய அரசு இலங்கையில் இருந்த தூதர் மூலமே
வழங்கியது மத்திய அரசுகள் ஆண்டு தோறும் நிதி அளிக்கும் தமிழக அரசு அளவில்தமிழ்நாடு அரசின் வேலை 2/8
வாய்ப்பில் 80கள் வரை முன்னுரிமை வழங்கியது ஒன்றிய அரசு ஆண்டு தோறும் நிதி அனுப்புவதுடன் நிறுத்தி கொண்டது மலையக தமிழர் என்ற ஒரு பிரிவு மக்கள் இருப்பதே சில ஆட்சியாளர்களுக்கு தெரியாது அந்த தேயிலை தோட்டங்களை எல்லாம் வெள்ளையன் வைத்திருந்த போது தொழிலாளருக்கு குறைந்த பட்சம் 5ஆவது வரை 3/8
பெரியாரின் போர்ப்படை தளபதிகள் அதில் முக்கியமானவர் திராவிடர் இயக்கத்தின் அஞ்சா நெஞ்சன் தளபதி என்ற இரு அடைமொழிக்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமான பெரியார் தொண்டர் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று நின்ற கொள்கை மறவன் 1/10
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை கட்டும் முன்பே பட்டுக்கோட்டையில் அழகிரி அவர்கள் சுயமரியாதை சங்கம் ஒன்றை நிறுவியவர் சாதி சமய சடங்குகள் சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து களப்பணி ஆற்றி பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் பரப்பி வந்தவர் இவர் 2/10
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தில்லை நடராசனையும் சீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ? என்று முதன் முதலில் முழங்கியவர் இவர் அஞ்சாநெஞ்சர் என்ற பெயருக்கு ஏற்றவாறு அந்த கருத்துக்கு உரம் போட்டவர் அதனாலே கடுமையான தாக்குதலுக்கும் ஆளானார் 3/10
பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பெரியாரின் தம்பிகள் பெரியாரை விட்டு போன போது இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில்1/1
முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும் அசாத்திய திறமைசாலி நாடகம் போடும் இடத்தில் நாத்திக கருத்துக்கு எதிராக ரவுடிகள் வந்து கலவரம் செய்தால் தனித்து நின்று அவர்களை துவம்சம் செய்து விட்டு அதே வேகத்தில் மேடையேறி வசனங்களை பேசுவார் 1/2
அவரின் ராமாயண நாடகம் ஒன்று பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் நடந்தது வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல ராமாயண கதைகளை தன் நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து எதிரிகள் வாயை அடைத்தார் ராதா 1/3
மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற வேலை அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது என்று பதிலளித்தார் காமராஜர் மேலும் சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் நான் ஒரு வேலை இறக்க நேரிட்டால் 1/3
யார் இந்த நாட்டை ஆள்கிறார்கள் நானா இல்லை இராமசாமி நாயக்காரா ? பார்த்து விடலாம் என்ற ஆணவத்தில் 1938- இல் இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்கிறார் இராசகோபாலாச்சாரியார் ஆனால் 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு 1/1
பெரியார் குடிஅரசு இதழில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வடமொழி உயர்வுக்கு வகை தேட பார்ப்பனர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார் 1930-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் 1/2
1938- பிப் மாதம் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட்டினார்
“இந்தி” கட்டாய பாடமாக்குவது ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார் தந்தை பெரியார் 1/3