*கார்த்திகையில் கண் திறக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்*
ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம் நமக்கு முக்தியை அளிக்க வல்லது.
🌹 *ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்*.
*திருக்கடிகை* என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.
கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும்.
ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது.
அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.
🌹நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள்.
750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள்
யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை தவம் புரிந்தார்கள்.
ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் ஆகும்.
அந்த இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக விரைவில் மனம் உகந்து,
யோக நரசிம்மப்பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்தார்.
அந்த யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.
மேலும், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்த விசுவாமித்திரர்,
இந்த சோளிங்கர் மலைக்கு மேல் இருப்பத்து நான்கு நிமிடங்கள் தவம் புரியவே,
வசிஷ்டர் அவரைத்தேடி வந்து பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்றும் இவ்வூரின் தலவரலாறு சொல்கிறது.
மலைக்கு மேல் அம்ருதவல்லித் தாயாரோடு யோக நரசிம்மராகத் திகழும் திருமால்,
அந்த மலையின் அடிவாரத்தில் பக்தவத்சலப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார்.
மேலும் திருக்கடிகை மலைக்கு அருகிலேயே 350-அடி உயரத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது.
அந்த மலையிலே யோக ஆஞ்சநேயர் யோகம் செய்யும் நிலையில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கிறார்.🌹
🌹திருக்கடிகை யோக நரசிம்மப் பெருமாளை அக்காரக்கனி என்று ஆழ்வார்கள் அழைக்கிறார்கள்.🌹
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு