#வள்ளலார்
இராமலிங்க வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதி. இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்.
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று, பயிர்களுக்கு தேவையான நீர் பசியையே பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தவர் வள்ளலார். அவரால் மனிதர்களின் பசியை நிச்சயமாக பொறுத்துக் கொண்டிருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் வடலூர் தருமசாலை ஒன்றை நிறுவி, பசித்த நிலையில் வாடுபவர்களுக்கு
உணவு வழங்கும் வசதியை தொடங்கிவைத்தார். வள்ளலாரின் வழியில் நின்றவர்களும், அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்த செல்வந்தவர்களும், தங்களால் இயன்ற உதவியை அரிசியாகவோ, மற்ற தானியங்களாகவோ தருமசாலைக்கு வழங்கி வந்தனர். அதனால் தான் அந்த தருமசாலையில் உள்ள உணவு சமைக்கும் அடுப்பானது, ‘அணையா
அடுப்பு’ என்ற பெயரை இன்றளவும் பெற்று திகழ்கிறது. வள்ளலார் வாழ்ந்த நாட்களில், தருமசாலை தொடங்கப்பட்ட சில நாட்களில் ஒரு நாள் இரவு உணவு போடுவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. இரவு உணவிற்கான சோறு வடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. கொஞ்சம் பேர் சாப்பிடக்கூடிய அளவிலே சோறு வடிக்க
ப்பட்டு இருந்தது. வேறு அரிசியும் கையிருப்பு இல்லாத நிலையில், தருமசாலைக்கு நிறைய அன்பர்கள் வந்து சாப்பிட அமர்ந்துவிட்டார்கள்.
அந்த நேரத்தில் தருமசாலையின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அன்பர், வள்ளலார் பெருமானிடம் வந்து நிலைமையை சொல்லி வருந்தினார். ஆனால் வள்ளலார் எந்த
சலனத்தையும் முகத்தில் காட்டவில்லை. அதோடு “நீங்கள் சென்று இலை போடுங்கள்” என்று கூறி அனுப்பிவிட்டு, சிறிது நேரத்திலேயே உணவு பரிமாறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். சோறு இருந்த பாத்திரத்தை எடுத்து, தமது திருக்கரங்களால் அனைவருக்கும் பரிமாறத் தொடங்கினார். எடுக்க எடுக்க சோறு குறையாமல்
பாத்திரத்தில் இருந்து வந்துகொண்டே இருந்தது. அதைப் பார்த்து தருமசாலையில் உணவு தயாரித்த அன்பர்கள், அதன் நிர்வாகி உள்ளிட்ட அனைவரும் வாயடைத்து நின்று விட்டனர். சாப்பிட வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் வயிறாற வள்ளலாரின் கரங்களால் சோறு வழங்கப்பட்டது. வள்ளலார் தன் வாழ்வில் நடத்திய
மிகப்பெரிய அற்புதமாகவே, அவரது அன்பர்கள் அனைவரும் கருதுகிறார்கள். அவர் தருமச்சாலைக்கு, வடலூரை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து விவசாயம் செய்வோர் பலரும் அறுவடை நாட்களில் நெல்மணிகளை மூட்டைகளாக கொண்டு வந்து கொடுப்பார்கள். அதை அரிசியாக்கி, உணவுக்கு தயார் செய்வார்கள். வள்ளலார்
வடலூரில் வாழ்ந்த நாட்களில், பல்வேறு அன்பர்கள் வள்ளலாரை தரிசிக்கவும் அவரது பிரசங்கத்தைக் கேட்கக் கூடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல, வள்ளலாரின் பெருமை நாடு முழுவதும் பரவியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வடலூர் நோக்கி வரத் தொடங்கினர். பலரும் வள்ளலாரின் திருமுகத்தை தரிசிக்கும்
ஆவலில் அவரை சந்தித்து அருளாசிப் பெற்று வந்தனர். இதனால் ஓய்வின்றி தினமும் சுழன்றதில் வள்ளலார் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டது. இதனால் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பிய வள்ளலார், மேட்டுக்குப்பம் என்ற சிறிய கிராமத்திற்கு தம் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். அப்படி அவர் தங்கியிருந்த
நேரத்தில், சிலர் அவரைப் பார்ப்பதற்காக பல நாட்களாக வந்து போயினர். ஒரு வழியாக மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் இருப்பதை அறிந்த அவர்கள் அங்கு வந்து வள்ளலாரை சந்தித்தனர். கோடைப்பருவமான சித்திரை மாதம் அது. இந்த நேரத்தில் மழையின்றி ஊர் வாடுவதையும், ஏரி, குளம், கிணறுகளில் நீர் வற்றியுள்ள
நிலையையும் சொல்லி வருந்தினர். உடனே வள்ளலார் ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து தமது பாதங்களில் ஊற்றும்படி கூறினார். அன்பர்கள் அவ்வாறே செய்ததும், அன்றைக்கே நல்ல மழை பெய்தது. பயிர்களும் செழித்து வளர்ந்தது. ஒரு சமயம், கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் பணியாற்றிய அன்பர் வள்ளலாரை
தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக எண்ணினார். இருவரும் மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்றனர். வண்டியில் அவரின் உதவியாளர் ஒருவர், வண்டியோட்டி ஒருவர் உடன் இருந்தனர். வண்டி இரவு நேரத்தில் குள்ளஞ்சாவடி அருகே வந்தபோது, திருடர்கள் இருவர் வண்டியை வழி மறித்தனர். வண்டியில் இருந்தவர்களை
இறங்குமாறு மிரட்டினர். பயந்துபோன வண்டியோட்டியும், உதவியாளரும் அருகில் இருந்த முந்திரி தோப்பிற்குள் ஓடி ஒளிந்தனர்.
‘வள்ளலாருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே’ என்று எண்ணிய அன்பர், வண்டியை விட்டு கீழே இறங்கினார். அவருடைய கையில் இருந்த வைர மோதிரத்தை கழற்றித் தரும்படி திருடர்கள் மிரட்டினர்
அதுவரை அமைதியாய் இருந்த வள்ளலார், ‘கொடுக்க வேண்டாம்’ என்று அன்பரை தடுத்தார். உடனே திருடர்கள் கையில் வைத்திருந்த தடியால் வள்ளலாரை தாங்க முயன்றனர். வள்ளலார் திருடர்களை உற்றுப்பார்க்க, அவர்களது ஓங்கிய கைகள் செயலற்றுப் போய் அப்படியே நின்றுவிட்டன. கையை அசைக்க முடியாமல் தவித்தனர். உடனே
தங்கள் செயலுக்கு வருந்தி வள்ளலாரிடம் மன்னிப்பும் கேட்டனர். இதனால் மனமிரங்கிய வள்ளலார், திருடர்களின் கைகளை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். வள்ளலாரை வணங்கிய திருடர்கள் இருவரும், இனிமேல் உழைத்து உண்பதாக வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றனர்.
எத்தனையோ மகான்களை கொண்டது இப்புண்ணிய பூமி!
#அறிவோம்_மகான்கள் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் மக்களை நல்வழி படுத்த தங்கள் பக்கம் ஈர்க்கவே. அற்புதங்களைத் தாண்டி அவர்கள் சொன்ன அறிவுறைகளையும் போதனைகளையும் பின்பற்றுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா ஸ்ரீமடத்தில் மகாபெரியவளின் பரமேஷ்டி குருகள் ஆராதனைகள் வருடா வருடம் நடத்தப்படுவது வழக்கம். அந்த ஆராதனையில வேத வித்துக்கள், வைதீகர்கள், பண்டிதர்கள் என்று பல நூறு பேர் கலந்து கொள்வார்கள். ஆராதனைகள் நடக்கும் நாட்களில் அவர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் போஜனம் செய்விப்பது
வழக்கம். இந்த வைபவம் மட்டும் அல்லாமல் ஸ்ரீமடத்தின் விசேஷ ஆராதனைகள் நடக்கும் சமயங்களில் நிறைய பேருக்கு ஒரே சமயத்தில் சமைக்க வேண்டியிருக்கும். அதற்காகவே விசேஷமாக சிலரை அழைப்பது உண்டு. இந்த வைபவங்கள் ஆராதனைகளின் போது குறிப்பிட்ட ஒரு சமையல்காரரை கட்டாயமாக கூப்பிடுவார்கள். அவரின்
சமையல் திறன் அற்தமானது. மகாபெரியவாளின் பரம பக்தரான அந்த பரிசாரகர் வேற ஒரு ஊரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும், அந்த முதலாளியிடம் உத்தரவு வாங்கி, முதல் வேலையாக மடத்துக்கு வந்து சமையல் கைங்கரியத்தை செய்ய ஆரம்பித்து விடுவார். அப்படி சமைக்கக் கூலியா எதையும் அவரா கேட்க மாட்டார்.
சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்மர் இருப்பதற்குக் காரணம் என்ன?
திருமாலின் கையிலுள்ள சக்கரமே #சக்கரத்தாழ்வார். திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. பஞ்சாயுதங்களில் முதன்மையான சுதர்சனம் சக்கரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுகின்றன.
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், மன அமைதியின்மை எதிலும்
தோல்வி, மரண பயம், பில்லி, சூனிய பாதிப்புகள், வியாபார நஷ்டம், கண் திருஷ்டி, முன்னேற்றத் தடை போன்றவற்றை போக்கும் வல்லமை கொண்டவர் சக்கரத்தாழ்வார். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார். தாயின் கருவில்
இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச்
#MahaPeriyava
A devotee told Sri Maha Periyava that he was suffering from persistent stomach ache. He was advised to do vaisvadevam (food offering done according to rules in Agama Dharma, one of the samskaras or religious duties) every day, offer the rice so cooked according to
scriptural injunctions to a guest and then eat his food. He did as advised and was cured of his incurable stomach ache. Periyava told him, "If possible, do Annadanam for a hundred or thousand people in some Kshetra (holy place)."
The devotee went to Guruvayur and organised
Annadanam at the Guruvayurappan temple.
'Noi Nadi, Noi Mudal Nadi' - Thiruvalluvar says. The Noi Mudal is actually paapa (sin). Our Periyava is the parihara chikitsa shiromani (expert remedial medical specialist) who seeks the root and destroys it completely!
#விஷ்ணுசித்தர்#எங்களாழ்வான்#விஷ்ணு_சித்தீயம் (விஷ்ணுபுராண வியாக்யானம்)
திருவெள்ளறையில் சித்திரை ரோஹிணியில் பிறந்த எங்களாழ்வானுக்கு அவருடைய பெற்றோர் விஷ்ணு சித்தர் என்று திருநாமமிட்டனர். பின்னர் இவர் எம்பெருமானாரின் சிஷ்யரானார். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானை
போலவே இவரிடம் இருந்ததால் எம்பெருமானார் இவருக்கு #எங்களாழ்வான் என்று திருநாமம் சூட்டினார். நடாதூர் ஆழ்வானின் (எம்பெருமானாரின் சிஷ்யர்) சிஷ்யரான நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யார்) எங்களாழ்வானின் பிரதான சிஷ்யராவார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிகப்
பெரிய ஆசார்யன் ஆனபடியால், எங்களாழ்வான் #அம்மாள்_ஆசார்யன் என்றே அறியப்பட்டார். இவர் எழுதிய விஷ்ணு புராணத்துக்கான வியாக்கியானமான #விஷ்ணு_சித்தீயம் இன்றளவும் அனைவரும் பொருள் உணர படித்து வருகின்றனர். மிகப் பெரிய பொக்கிஷம்! எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்களாழ்வானை அழைத்து
#MahaPeriyava
Sri Maha Periyava once visited Madurai. He was staying in a school in North Masi Street. It was raining heavily, and the rains lasted for three days! ThamizhVel P.T. Rajan, who was a resident of Madurai, had a desire to take Maha Periyava to the Meenakshi Amman
temple. He brought the car he had purchased recently and parked it in front of the building where Maha Periyava was staying. "It is raining heavily. If you get inside the car you may go and alight near the temple. I have great happiness to take you in the car". P.T. Rajan told
the Sage politely.
Periyava asked him, "A new car?"
"Yes, but no other person has sat inside it; only you should sit first!"
Periyava smiled at these words. Then He called His disciple who stood nearby and said, "Go and have a look at the path that leads to the Meenakshi Amman
புராணங்களில் எவ்வளவோ உள்ளன! #சிவபுராணத்தில்_உள்ளது_என்ன
தில்லையில் ஓர் ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவத்தில், திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய #திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால்
அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து
விட்டு மறைந்து விட்டார். மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச் சுவடிகளை கண்டு திகைத்து போயினர். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில்