புராணங்களில் எவ்வளவோ உள்ளன!
#சிவபுராணத்தில்_உள்ளது_என்ன
தில்லையில் ஓர் ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவத்தில், திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய #திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால்
அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து
விட்டு மறைந்து விட்டார். மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச் சுவடிகளை கண்டு திகைத்து போயினர். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில்
"மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது. திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள். ஓலைச் சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து,
கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய், ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான் என்று சொல்லி வந்தது பெருமான் தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மாணிக்கவாசகர் Image
மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி "இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்" என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார். Image
ஆக , ஆனி மகம் மாணிக்கவாசகரின் குருபூஜை நாள் ஆகும்.
#புராண_சிறப்பு
1. நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.
2. சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.
3. அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.
4. அடுத்த 8 வரிகள் போற்றி என
முடியும்.
5. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
6. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
7. திருவாசகத்தின் 18 வது வரியான
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
8. ரமண மகரிஷி திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
9. காஞ்சி மகா பெரியவரிடம்
குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.
பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.
10. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி,
பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
ஓம் நமச்சிவாய🙏🏼
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 18
#மகாபெரியவா ஸ்ரீமடத்தில் மகாபெரியவளின் பரமேஷ்டி குருகள் ஆராதனைகள் வருடா வருடம் நடத்தப்படுவது வழக்கம். அந்த ஆராதனையில வேத வித்துக்கள், வைதீகர்கள், பண்டிதர்கள் என்று பல நூறு பேர் கலந்து கொள்வார்கள். ஆராதனைகள் நடக்கும் நாட்களில் அவர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் போஜனம் செய்விப்பது Image
வழக்கம். இந்த வைபவம் மட்டும் அல்லாமல் ஸ்ரீமடத்தின் விசேஷ ஆராதனைகள் நடக்கும் சமயங்களில் நிறைய பேருக்கு ஒரே சமயத்தில் சமைக்க வேண்டியிருக்கும். அதற்காகவே விசேஷமாக சிலரை அழைப்பது உண்டு. இந்த வைபவங்கள் ஆராதனைகளின் போது குறிப்பிட்ட ஒரு சமையல்காரரை கட்டாயமாக கூப்பிடுவார்கள். அவரின்
சமையல் திறன் அற்தமானது. மகாபெரியவாளின் பரம பக்தரான அந்த பரிசாரகர் வேற ஒரு ஊரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும், அந்த முதலாளியிடம் உத்தரவு வாங்கி, முதல் வேலையாக மடத்துக்கு வந்து சமையல் கைங்கரியத்தை செய்ய ஆரம்பித்து விடுவார். அப்படி சமைக்கக் கூலியா எதையும் அவரா கேட்க மாட்டார்.
Read 18 tweets
Nov 18
சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்மர் இருப்பதற்குக் காரணம் என்ன?
திருமாலின் கையிலுள்ள சக்கரமே #சக்கரத்தாழ்வார். திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. பஞ்சாயுதங்களில் முதன்மையான சுதர்சனம் சக்கரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுகின்றன.
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், மன அமைதியின்மை எதிலும் ImageImage
தோல்வி, மரண பயம், பில்லி, சூனிய பாதிப்புகள், வியாபார நஷ்டம், கண் திருஷ்டி, முன்னேற்றத் தடை போன்றவற்றை போக்கும் வல்லமை கொண்டவர் சக்கரத்தாழ்வார். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார். தாயின் கருவில்
இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச்
Read 6 tweets
Nov 18
#MahaPeriyava
A devotee told Sri Maha Periyava that he was suffering from persistent stomach ache. He was advised to do vaisvadevam (food offering done according to rules in Agama Dharma, one of the samskaras or religious duties) every day, offer the rice so cooked according to Image
scriptural injunctions to a guest and then eat his food. He did as advised and was cured of his incurable stomach ache. Periyava told him, "If possible, do Annadanam for a hundred or thousand people in some Kshetra (holy place)."
The devotee went to Guruvayur and organised
Annadanam at the Guruvayurappan temple.
'Noi Nadi, Noi Mudal Nadi' - Thiruvalluvar says. The Noi Mudal is actually paapa (sin). Our Periyava is the parihara chikitsa shiromani (expert remedial medical specialist) who seeks the root and destroys it completely!

Source: Maha
Read 4 tweets
Nov 17
#விஷ்ணுசித்தர் #எங்களாழ்வான் #விஷ்ணு_சித்தீயம் (விஷ்ணுபுராண வியாக்யானம்)
திருவெள்ளறையில் சித்திரை ரோஹிணியில் பிறந்த எங்களாழ்வானுக்கு அவருடைய பெற்றோர் விஷ்ணு சித்தர் என்று திருநாமமிட்டனர். பின்னர் இவர் எம்பெருமானாரின் சிஷ்யரானார். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானை Image
போலவே இவரிடம் இருந்ததால் எம்பெருமானார் இவருக்கு #எங்களாழ்வான் என்று திருநாமம் சூட்டினார். நடாதூர் ஆழ்வானின் (எம்பெருமானாரின் சிஷ்யர்) சிஷ்யரான நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யார்) எங்களாழ்வானின் பிரதான சிஷ்யராவார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிகப்
பெரிய ஆசார்யன் ஆனபடியால், எங்களாழ்வான் #அம்மாள்_ஆசார்யன் என்றே அறியப்பட்டார். இவர் எழுதிய விஷ்ணு புராணத்துக்கான வியாக்கியானமான #விஷ்ணு_சித்தீயம் இன்றளவும் அனைவரும் பொருள் உணர படித்து வருகின்றனர். மிகப் பெரிய பொக்கிஷம்! எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்களாழ்வானை அழைத்து
Read 12 tweets
Nov 17
#MahaPeriyava
Sri Maha Periyava once visited Madurai. He was staying in a school in North Masi Street. It was raining heavily, and the rains lasted for three days! ThamizhVel P.T. Rajan, who was a resident of Madurai, had a desire to take Maha Periyava to the Meenakshi Amman
temple. He brought the car he had purchased recently and parked it in front of the building where Maha Periyava was staying. "It is raining heavily. If you get inside the car you may go and alight near the temple. I have great happiness to take you in the car". P.T. Rajan told
the Sage politely.
Periyava asked him, "A new car?"
"Yes, but no other person has sat inside it; only you should sit first!"
Periyava smiled at these words. Then He called His disciple who stood nearby and said, "Go and have a look at the path that leads to the Meenakshi Amman
Read 9 tweets
Nov 16
நம் கோவில்களில் உள்ள அற்புதங்கள்:
1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை Image
இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

2. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள (கோனேரிராஜபுரம்) ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று Image
தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

3. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(