சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.
இந்த கோயிலின் மூல தெய்வம் தண்டீஸ்வரர் - கருணாம்பிகை அம்மன் ஆகும். ஒரு முறை, சோமுகன் என்ற அசுரன் படைப்புக்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து கவர்ந்து சென்றான்.
பிறகு, எவரும் கண்டறியா வண்ணம் அவற்றை கடலுக்கு அடியில் சேற்றில் புதைத்து வைத்தான்.
இதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது.
பெரிதும் வருந்திய பிரம்மன், திருமாலிடம் சென்று முறையிட்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால் மச்ச அவதாரம் எடுத்து, அசுரனை அழித்ததுடன் வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார்.
அசுரனிடம் இருந்து விடுதலை பெற்று விட்டாலும்
வேதங்களுக்கு ஒரு மனக்குறை!
'‘புனிதமான நாம், அசுரனால் கைப்பற்றப்பட்டு சேற்றில் மறைத்து வைக்கப்பட்டதால் அசுத்தமாகி விட்டோமே!’' என்று வருந்தின.
மீண்டும் தமக்கே உரிய புனிதத் தன்மையைப் பெறுவது எப்படி? என்று பிரம்மதேவனிடமே கேட்டன.
உடனே பிரம்மதேவன், பூலோகத்தில் புனிதமான ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, '‘அங்கு சென்று சிவனாரை தியானித்து வழிபட்டால் மீண்டும் புனிதம் பெறுவீர்கள்!'' என்றார்.
அதன்படியே பூலோகம் வந்த வேதங்கள், பிரம்ம தேவன் சுட்டிக்காட்டிய இடத்தை அடைந்தன.
இயற்கை எழிலார்ந்த அந்தப் பகுதியில் ஓர் ஆசிரமத்தை உருவாக்கிய வேதங்கள், தங்களது நித்ய வழிபாட்டுக்காக சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்தன.
தினமும் நீராடி இந்த லிங்கத்தை பூஜித்து வழிபட்ட வேதங்கள், இந்த இடத்துக்கு அருகில் அமைந்திருந்த திருவான்மியூர் தலத்துக்குச் சென்று
அங்கிருந்த சிவனாரையும் வழிபட்டு வந்தன. இதனால் மகிழ்ந்த ஈசன், வேதங்களின் முன் தோன்றி, வேண்டும் வரங்களைக் கேட்குமாறு பணித்தார்.
வேதங்கள், '‘நாங்கள் மீண்டும் புனிதம் பெற வேண்டும். நாங்கள் அனுதினமும் தங்களை வழிபட்ட இந்த இடமும் அருகில் உள்ள திருவான்மியூரும்
எங்களது பெயரால் வழங்கப்பட வேண்டும்!'' என்று வேண்டின.
அதன்படியே அருளினார் எம்பெருமான். வேதங்கள் புனிதம் பெற்றன.
அவை, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த பகுதி வேதச் சிரேணி என்றும் திருவான்மியூர் தலம் வேதபுரி என்றும் பெயர் பெற்றனவாம்!
கோயிலின் ராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் வேத விநாயகர் அமைந்துள்ளார்.
இவர் கைகளில் வேதங்களுடன் காட்சி தருகிறார்.
அவரை வணங்கி விட்டு கருவறையை நோக்கி செல்லும் வழியில் இரு மருங்கிலும் விநாயகரும், முருகனும் வீற்றிருக்கின்றனர்.
சுவாமி சன்னதி கோஷ்டத்தில் துர்க்கையும், பிரகாரத்தில் லட்சுமி, சரஸ்வதியும் உள்ளனர்.
ஒரே இடத்தில் நின்று மூன்று தேவியரையும் தரிசிக்கலாம்.
திருக்கடையூரில் மார்க்கண்டேயனை காத்தருள எம் பெருமான் எமனின் தண்டத்தை பிடுங்கிக் கொண்டதாக புராணம் சொல்கிறது.
இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டான்.
அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், "தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
இழந்த பதவி திரும்பக் கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
இவர் சுயம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாள் கருணாம்பிகை சன்னதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது.
தண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி, தலையை பணிவாக கீழே சாய்த்திருப்பது விசேஷமான அமைப்பு.
சூரிய ஒளி தை முதல் தேதியில், சிவலிங்கம் மீது விழுகிறது.
தற்போது நிறைய கட்டிடங்கள் உருவாகிவிட்டபடியால் சூரிய ஒளி படுவதில்லை.
வேதங்களின் தோஷம் போக்கிய சிவன் இங்கிருப்பதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "யோக தெட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். இவரது பீடத்தில் நந்தி இருக்கிறது.
இவ்வாலயத்தில் சிறப்பு மிக்க வீரபத்திரரும் அருள் பாலிக்கின்றார்.
வீரபத்திரருக்கு தண்டாயுதம் என்ற உலக்கை போன்ற ஆயுதமே தரப்பட்டிருப்பது மரபு. இவரை நின்ற கோலத்திலேயே பார்க்க முடியும்.
ஆனால், சிவாம்சமான வீரபத்திரர், கைகளில் மான், மழு தாங்கி, அமர்ந்த கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.
அசுரன் ஒருவனை அழிக்கச்சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர்.
தங்களை அழிக்க ஏழு கன்னிகள் புறப்பட்டிருக்கும் செய்தியை அந்த அசுரனும் அறிந்து கொண்டான்.
முனிவரைக் கொன்ற தோஷம் ஒருபுறம், அசுரனின் மிரட்டல் மறுபுறமுமாக இருந்த வேளையில்,
சிவபெருமான், அவர்களைக் காக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார்.
இதன் அடிப்படையில் இத்தலத்தில் சப்த கன்னியர் அருகில் வீரபத்திரர் காவல் தெய்வமாக இருக்கிறார்.
பவுர்ணமியில் இவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடக்கிறது.
கன்னியரைக் காத்த கடவுள் என்பதால், பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி வேண்டிக் கொள்கிறார்கள்.
உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகாதசி என்றும் அழைப்பர்.
இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி எனவே இது இந்த பெயர் பெற்றது.
எவரொருவர் ஏகாதசி புனித விரதத்தின் மூலத்தினையும் மகத்துவத்தையும் கேட்கிறாரோ, அவர் இவுலகில் பல வித இன்பங்களையும் அனுபவிப்பதோடு
விஷ்ணு லோகத்திற்கும் நேரடியாகச் செல்கிறார்.
எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ (அ) சொல்கிறாரோ, (அ) வீட்டில் உள்ளவர்க்கு படித்து காண்பிக்கிறாரோ அவரும் கேட்டவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் இந்த விரதம் தோன்றிய கதையை, பற்றி எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)