#ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர்
வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் அவா. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது.
புதுச்சேரி
அருகில் வில்லியனுர் என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்து உள்ளது #ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி
பாய்வதால், சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே, நாம் சங்கராபரணி நதியானது
கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்து கொள்ளலாம். இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஐயனை வேண்டினால் பதினாறு செல்வங்களும் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம். அதோடு பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும். இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள் பல இருப்பதாக குறிப்புகள் உள்ளன.
இந்த ஸ்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண கதையும் உள்ளது. ஒரு சமயம் வேத விற்பன்னர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார். போகும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசிக்க விரும்பிய அவர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததும் தந்தையின்
அஸ்தி முழுவதும் பூக்களாய் மாறி உள்ளது. இதை கண்டு அவர் மெய் சிலிர்த்துள்ளார். அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி இந்த தளத்திற்கு உள்ளது என்றால் இது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற ஒரு தலம் என்பதை உணர்ந்தார். அந்த சமயம் அவருக்கு, காசியில் செய்வேண்டிய பிதுர் கர்மாக்களை இங்கும்
செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.
இங்குள்ள சிவலிங்கமானது ஏறத்தாழ 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். காசியில் ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ அன்னபூரணி
ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர, அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள். இங்குள்ள
கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பௌர்ணமி தோறும் கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோவிலுக்கு வந்து முன்னோர்களுக்கு
தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை
வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.
பாண்டிச்சேரி – விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம். வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. சென்று தரிசிப்போம்.
அருள் பெறுவோம்.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ததிபாண்டனின்_மோக்ஷம்
ததிபாண்டன் இடையரில் தயிர்க் கடையன். படிப்பறிவு எல்லாம் கிடையாது. மிகவும் எளியவன். ஆனால் அன்பே உருவானவன். மாட்டை அடிக்கக் கூட மாட்டான். ததிபாண்டன் ஒருமுறை ஒருவரின் இறந்த வீட்டுக்கு சென்று வந்த பிறகு யோசித்தான், நாமும் இறந்தால் இவ்வுலகம் விட்டு சென்று
விடுவோமா? உயிர் போனால் போகிறது. ஆனால் கண்ணன் இல்லாமல் இருக்க முடியாதே என்று கண்ணீர் மல்காத குறையாக நினைத்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் ஒரு ரிஷியை எதேச்சையாக பார்த்தான். அவரின் கால்களில் விழுந்தான்.
"சாமி என்னை ஆசீர்வதியுங்கள்"
"ஆசிர்வதித்தேன். சொல் மகனே, உனக்கு என்ன வேண்டும்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சுவாமி"
"கேள் மகனே"
"எப்போதும் கண்ணனுடன் இருக்கனும். நான் இறந்த பிறகும் அவனிடம் எப்பவும் இருக்கனும்"
"அட மோக்ஷத்தை இவ்வளவு எளிதாக கேட்டு விட்டாயே"
"அப்படினா"
"மோக்ஷம் என்றால்...இறைவன்.. திருவடி.. சரணடைதல்.. கருணை" என்று வேதாந்த தத்துவங்களை விளக்கி கொண்டே
#ஆதிசங்கரர்#ஶ்ரீநரசிம்ஹர் மண்டனமிஸ்ரர் என்னும் பண்டிதரை வாதில் வெல்வதற்காக அவரது ஊரான மகிஷ்மதிக்குச் சென்றார் ஆதிசங்கரர். பல நாட்கள் கடும் வாதம் செய்து மண்டனமிஸ்ரரை வீழ்த்தித் தன் சிஷ்யர் ஆக்கினார். ஆனால் மண்டனமிஸ்ரரின் மனைவியான உபயபாரதி, “ஸ்வாமி! நீங்கள் பெற்றது பாதி வெற்றி
தான்! நான் என் கணவரில் பாதி. என்னையும் நீங்கள் வாதம் செய்து வென்றால் தான் உங்கள் வெற்றி முழுமை அடையும். என்னுடன் வாதிட நீங்கள் தயாரா?” என்று ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டாள்.
“தயார்!” என்றார் சங்கரர். உபயபாரதியுடன் பல நாட்கள் சங்கரர் வாதம் செய்தார். திடீரென ஒருநாள் காம
சாஸ்திரத்திலிருந்து அவள் கேள்வி தொடுத்தாள். எட்டு வயதிலேயே துறவியான சங்கரருக்குக் காம சாஸ்திரம் பற்றி எதுவுமே தெரியாது. பதில் தெரியாமல் திகைத்தார்.
“என்னிடம் போய் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே இது தகுமா?” என்று கேட்டார். “கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றதாகத் தான்
#மகாபெரியவா#குலதெய்வ_வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் ஏற்படும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம். தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வம் குல தெய்வம்.
தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த
தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும். இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில்
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
On one occasion, I went along with my doctor friend to a town in Maharashtra to have darshan of Maha Periyava. We found that His Holiness had left
the town three days earlier and was camping in the outskirts of the town near a small river in a mango grove. When we reached the camp, all facilities for the visiting devotees had been made in the grove. The officials of the Mutt told me a very interesting anecdote of how His
Holiness came to stay there.
Maha Periyava was staying in the centre of the town and performing pooja everyday, one elderly gentleman used to come and stand at the boundary of the crowd, watch the pooja and go away without coming near His Holiness. Maha Periyava noted this and
#ஶ்ரீராகவேந்திரஸ்வாமி
1992 - 93 மந்த்ராலயத்தில் நடந்த உண்மை சம்பவம்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். பெண் பருவ வயது வந்ததும்
தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர். எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த
வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை சிறப்பாக கரையேற்ற வேண்டும்
#ஷோலிங்கர்_யோகநரசிம்மர்#கார்த்திகை_ஸ்பெஷல்
நரசிம்மரை குலதெய்வமாகக் கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமாக கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். 1305 படிகள் ஏறி யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்ய கொடுத்து வைத்து
இருக்க வேண்டும். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான்
கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். படிகளில் ஏறி (குரங்குகளின் தொல்லை நிறைய) துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தவல்லியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். பிரிய மனமில்லாமல்