*ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும்.*
ஆகையால்,
பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்.
இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
சரி என திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது.
பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்.
அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்.
மறுபடியும் உண்டியல் உதவியது.
பிறகு ஒரு பிள்ளை.
அதற்கும் அதே உண்டியல்.
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் பேரன் பேத்தி இப்படியே காலம் கழிந்தது.
தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்.
ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார்.
அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது.
பட்டரோ இனி ஆறு மாதங்களுக்கு பிறகு நடை திறக்கப்படும் என கூற முதியவர் அதிர்ந்தார்.
பட்டரின் கால்களை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் முதியவர்.
அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது.
ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன்.
தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார்.
பட்டரோ அசைவதாக இல்லை.
மூடிய நடை திறக்கபடாது என கூறி நகர்ந்தார்.
இவரோ தன் தலை விதி என்னி வருந்தினார்.
இனி மேல் எந்த காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார்.
பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இரங்க போகிறோம் வாரும் என கூற கிழவனோ நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் என கூறினார்.
சரி என அனைவரும் இரங்க சிறிது நேரத்தில் இருட்ட தொடங்கியது.
அப்போது,
ஒரு சிறுவன் அங்கு வருகிறான்.
அவன் அந்த முதியவரிடம் ஏ தாத்தா இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர் என கேட்க.
அவரோ அந்த சிறுவனிடம் தன் வயிற்றெரிச்சலை கூறி அழுகிறார்.
இதை கேட்ட சிறுவனோ சரி வாரும் அருகில் தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவருந்து பிறகு பேசி கொள்ளலாம் என கூறி அவரை அழைத்து சென்றான்.
அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூறி சென்றான்.
முதியவரும் நாரயணா கோவிந்தானு பக்தியோடு நாமஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார்.
பொழுது விடிந்தது கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால் கோவில் திறந்துள்ளது.
கூட்டமோ ஏராளம்.
கிழவனுக்கோ அதிர்ச்சி.
என்னடா இது.
பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார் நடை திறக்கப்பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று ஏ சாமி கோவில் திறக்க படாது என சொன்னிங்க இப்ப மறுநாளே திறந்து இருக்கிங்கனு கேட்க பட்டரோ யோசித்தார்.
இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா என கூற இவரும் உள்ளே சென்றார்.
அங்கே நாரயணன் அந்த சிறுவனாக தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது.
ஆறு மாத பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளளே
அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம் தான் என்னவோ எம் வேந்தே.
உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகாதசி என்றும் அழைப்பர்.
இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி எனவே இது இந்த பெயர் பெற்றது.
எவரொருவர் ஏகாதசி புனித விரதத்தின் மூலத்தினையும் மகத்துவத்தையும் கேட்கிறாரோ, அவர் இவுலகில் பல வித இன்பங்களையும் அனுபவிப்பதோடு
விஷ்ணு லோகத்திற்கும் நேரடியாகச் செல்கிறார்.
எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ (அ) சொல்கிறாரோ, (அ) வீட்டில் உள்ளவர்க்கு படித்து காண்பிக்கிறாரோ அவரும் கேட்டவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் இந்த விரதம் தோன்றிய கதையை, பற்றி எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)
சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.
இந்த கோயிலின் மூல தெய்வம் தண்டீஸ்வரர் - கருணாம்பிகை அம்மன் ஆகும். ஒரு முறை, சோமுகன் என்ற அசுரன் படைப்புக்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து கவர்ந்து சென்றான்.
பிறகு, எவரும் கண்டறியா வண்ணம் அவற்றை கடலுக்கு அடியில் சேற்றில் புதைத்து வைத்தான்.
இதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது.
பெரிதும் வருந்திய பிரம்மன், திருமாலிடம் சென்று முறையிட்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால் மச்ச அவதாரம் எடுத்து, அசுரனை அழித்ததுடன் வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார்.