M.SivaRajan Profile picture
Nov 19 20 tweets 4 min read
#மெய்பொருள்_நாயனார்_குருபூஜை

#மெய்பொருள்_நாயனார்_வரலாறு

மெய்ப்பொருள் நாயனார், சிவனடியார் வேடத்தில் தன்னைக் கொல்லக் கத்தியால் குத்திய பகைவனைக் காப்பாற்றிய குறுநில மன்னர்.

நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர்
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரைத் தலைமையாகக் கொண்டு, பழங்காலத்தில் சேதி நாடு என்ற சிற்றரசு ஒன்று இருந்தது.

சேதியர் என்ற இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்ததால் இது சேதி நாடு என்று வழங்கப்பட்டது.
இது தொண்டை நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்ததால் நடு நாடு என்றும் அழைக்கப்பட்டது.

இச்சிற்றரசை மலையமான் என்ற குலத்தினர் ஆண்டு வந்தனர்.

இக்குலத்தினர் மாதொரு பாகனாக விளங்கும் சிவபெருமானை வழிவழியாக வழிபட்டு வந்தனர்.
சேதி நாட்டுக் குறுநில மன்னர் பரம்பரையில் தோன்றியவர் மெய்ப்பொருள் நாயனார். இவரும் சிவனாரிடம் பேரன்பு கொண்டிருந்தார்.

திருநீறு பூசி, உருத்திராக்கம் அணிந்த சிவனடியார்களின் திருவேடமே உண்மையான மெய்ப்பொருள் என்று இவர் எண்ணினார்.

ஆதலால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார்.
மெய்ப்பொருளார் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, அறநெறி தவறாது குடிமக்களைக் காத்து நல்லாட்சி புரிந்து வந்தார்.

சிவனடியார்கள் வேண்டியதை கொடுக்கும் தாரள குணத்தவராகத் திகழ்ந்தார்.

சிவாலயங்களுக்கு பல திருத்தொண்டுகள் புரிந்தார்.
மெய்ப்பொருளார் மீது முத்தநாதன் என்ற அரசன் பகைமை கொண்டிருந்தான். அவன் பலமுறை மெய்ப்பொருளாளருடன் போரிட்டு தோல்வி கண்டவன்.

அவன் தன்னுடைய தோல்விகளுக்கு காரணமான மெய்ப்பொருளாரைத் தண்டிக்க எண்ணினான்.
அவனுடைய மனதில் வஞ்சகத் திட்டம் ஒன்று உதித்தது.

முத்தநாதனுக்கு, மெய்ப்பொருள் நாயனாரின் சிவனடியார் பக்தி பற்றி தெரியும்.

ஆதலால் சிவனடியாராகச் சென்று அவ்வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டான்.
திட்டமிட்டபடி முத்தநாதன் ஒருநாள் உடலெங்கும் வெண்ணீறு பூசி, உருத்திராக்கங்களை அணிந்து சிவனடியாராக உருமாறினான்.

குத்துவாளை ஓலைசுவடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு சுவடியுடன் மெய்பொருளாரின் அரண்மனையை அடைந்தான்.
இரவானதால் வாயில் காவலர்கள் அவனை அரண்மனைக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

உடனே அவர்களிடம் மன்னருக்கு ஆகமம் உரைக்கவே வந்ததாகக் கூறினான்.

ஆதலால் அவர்கள் அவனை அரண்மனைக்குள் விட்டனர்.

முத்தநாதன் அரசரின் பள்ளியறையை நெருங்கினான்.
அங்கிருந்த தத்தன் என்னும் மெய்க்காப்பாளன் அரசர் உறங்கும் நேரம் ஆதலால் சிவனடியார் தற்போது உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்தான்.

சிவனிடம் பெற்ற ஆகமத்தை இப்போதே மன்னருக்கு தெரிவிக்க வேண்டும் என்று சிவனடியார் கூறியதும் அரைகுறை மனதுடன் மன்னரின் பள்ளியறைக்குள் அனுமதித்தான் தத்தன்.
தூங்கிக் கொண்டிருந்த மன்னருக்கு அரசியார் விசிறிக் கொண்டிருந்தார்.

சிவனடியார் சிவ ஆகமத்தை அரசருக்கு விளக்க வந்திருப்பதாக் கூறியதும் அரசியார் மன்னரை எழுப்பினார்.

கண் விழித்த மெய்ப்பொருளார் சிவனடியாரைக் கண்டதும் கைகூப்பி வணங்கினார்.
சிவனிடமிருந்து பெற்ற ஆகமத்தின் பொருளை உடனே மன்னருக்கு கற்பிக்க இருப்பதாகக் கூறினார் சிவனடியார்.

அதனைக் கேட்ட மன்னரும் மகிழ்ந்தார்.

சிவ ஆகம விளக்கத்தை மன்னருக்கு மட்டுமே விளக்க முடியும் என்று சிவனடியார் கூறியதும் மன்னர் அங்கிருந்த எல்லோரையும் அனுப்பி வைத்தார்.
பின்னர் சிவனடியாருக்கு தகுந்த ஆசனம் அளித்து தான் கீழே அமர்ந்து சிவஆகம விளக்கத்தை கேட்க தயாரானார்.

சிவனடியாராக வேடமிட்ட முத்தநாதன் ஓலைச்சுவடியைப் பிரித்து உள்ளே இருந்த குத்துவாளை எடுத்து மெய்ப்பொருளார் அறியாதபோது மார்பில் குத்தினான்.
குத்துப்பட்ட நிலையிலும் சிவனடியாரை வணங்கியபடியே மெய்ப்பொருளார் தரையில் சாய்ந்தார்.

அப்போது சந்தேகமடைந்த தத்தன் உள்ளே எட்டிப் பார்த்தான்.

அரசன் குத்துவாளால் குத்துப்பட்டு கிடப்பதைப் பார்த்ததும் உடைவாளை உருவி சிவனடியாரை நோக்கிப் பாய்ந்தான்.
உடனே மெய்ப்பொருளார் தத்தனைப் பார்த்து “தத்தா, அவர் நம்முடைய சிவனடியார்; வேண்டாம்” என்று தடுத்தார்.

அதிர்ச்சி அடைந்த தத்தன் “தற்போது யான் செய்யும் பணி யாது?” என்று கேட்டான்.

“இந்த சிவனடியாரை யாரும் தாக்காத வண்ணம் பாதுகாத்து, இவ்வூரின் எல்லையில் விட்டுவிட்டு வா” என்றார் அரசர்.
அரசனுடைய ஆணையைப் பின்பற்றி, தத்தன் சிவனடியாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். விவரம் அறிந்தோர் சிவனடியாரைத் தாக்க முற்பட்டனர்.

சிவனடியாரைத் தாக்கக் கூடாது என்பது அரசனுடைய ஆணை என்று தத்தன் கூறியதும் அவர்கள் விலகினர்.
எல்லையில் சிவனடியாரைப் பாதுகாப்பாக விட்டதும், வேகமாகத் தத்தன் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரத்தைச் சொன்னான்.

“நீ எனக்கு செய்த பேருதவியைப் போல, எனக்கு யாரும் செய்ய முடியாது” என்று மனமகிழ்ச்சியுடன் கூறினார் மன்னர்.
அரண்மனையில் கூடியிருந்தோரிடம் “திருநீற்று நெறியைக் காப்பீர்” என்றபடி சிவனடியை நினைத்தார்.

அப்போது சிவபெருமான் உமையம்மையுடன் இடப வாகனத்தில் காட்சியளித்தார். மெய்ப்பொருள் நாயனார் சிவபதத்தைப் பற்றி பெரும் பேறு அடைந்தார்.
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

உயிர் பிரியும் நிலையிலும் சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் என்று வியக்கிறார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 19
#உத்பன்ன_ஏகாதசி

உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகாதசி என்றும் அழைப்பர்.

இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி எனவே இது இந்த பெயர் பெற்றது.

எவரொருவர் ஏகாதசி புனித விரதத்தின் மூலத்தினையும் மகத்துவத்தையும் கேட்கிறாரோ, அவர் இவுலகில் பல வித இன்பங்களையும் அனுபவிப்பதோடு
விஷ்ணு லோகத்திற்கும் நேரடியாகச் செல்கிறார்.

எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ (அ) சொல்கிறாரோ, (அ) வீட்டில் உள்ளவர்க்கு படித்து காண்பிக்கிறாரோ அவரும் கேட்டவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் இந்த விரதம் தோன்றிய கதையை, பற்றி எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)
Read 32 tweets
Nov 19
#தூய_பக்தி

*ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும்.*

ஆகையால்,

பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்.

இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
சரி என திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது.

பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்.

மறுபடியும் உண்டியல் உதவியது.

பிறகு ஒரு பிள்ளை.

அதற்கும் அதே உண்டியல்.
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் பேரன் பேத்தி இப்படியே காலம் கழிந்தது.

தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்.

ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார்.
Read 12 tweets
Nov 19
#நரசிம்மர்_சக்கரத்தாழ்வார்

*சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்*

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.

சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து
Read 6 tweets
Nov 18
#ஸ்ரீ_சக்கரம்

ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சில

🌹 *காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.* Image
🙏🏻 லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

🌹பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

🌹கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்
ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

🌹 *புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.*

🌹 *ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.*
Read 12 tweets
Nov 18
#சிம்ம_வாகன_முருகன்

சென்னை அருகே உள்ள பொன்னேரி அடுத்துள்ளது ஆண்டார்குப்பம்.

இங்கு அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, அதிகாரத் தோரணையுடன் இருப்பது போல் காட்சி தருகிறார்.
இடுப்பில் கை வைத்திருப்பது போல் அருளும் இந்த முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றங்களில் ஒருவராக திகழ்கிறார்.

பொதுவாக முருகப்பெருமானுக்கு மயில்தான் வாகனமாக இருக்கும்.

ஆனால் இந்த ஆலயத்தில் சிம்ம வாகனம் மயிலைத் தாங்கியபடி இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும்.

ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.
Read 5 tweets
Nov 18
#இழந்த_பதவி_கிடைக்க

இழந்த பதவி கிடைக்க வேண்டிக் கொள்ள தலம்
 
செ‌ன்னையை அடு‌த்து‌ வேள‌ச்சே‌ரி‌‌க்கு செ‌ல்லு‌ம் மு‌க்‌கிய சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது ஸ்ரீ த‌ண்டீ‌‌ஸ்வர‌ர் ‌திரு‌க்கோ‌யிலாகு‌ம். Image
இ‌ந்த கோ‌யி‌லி‌ன் மூல த‌‌ெ‌ய்வ‌ம் த‌ண்டீ‌ஸ்வர‌ர் - கருணா‌ம்‌பிகை அ‌ம்ம‌ன் ஆகு‌ம். ஒரு முறை, சோமுகன் என்ற அசுரன் படைப்புக்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து கவர்ந்து சென்றான்.

பிறகு, எவரும் கண்டறியா வண்ணம் அவற்றை கடலுக்கு அடியில் சேற்றில் புதைத்து வைத்தான்.
இதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது.

பெரிதும் வருந்திய பிரம்மன், திருமாலிடம் சென்று முறையிட்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால் மச்ச அவதாரம் எடுத்து, அசுரனை அழித்ததுடன் வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

அசுரனிடம் இருந்து விடுதலை பெற்று விட்டாலும்
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(