#ஷோலிங்கர்_யோகநரசிம்மர்#கார்த்திகை_ஸ்பெஷல்
நரசிம்மரை குலதெய்வமாகக் கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமாக கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். 1305 படிகள் ஏறி யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்ய கொடுத்து வைத்து
இருக்க வேண்டும். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான்
கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். படிகளில் ஏறி (குரங்குகளின் தொல்லை நிறைய) துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தவல்லியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். பிரிய மனமில்லாமல்
தாயாரை தரிசித்து உள்ளே சென்றால் பிரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், பிரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தி யோக கோலத்தில் வீற்றிருப்பதை காணலாம்.
உட்கார்ந்திருக்கும் அழகு அதற்கும் மேல் பிரம்மாண்ட
உருவம். பத்மாசனத்தில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்த கோலம், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார். சப்த ரிஷிகளும், வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க
வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்கபுரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர். அவர்களிடமிருந்து முனிவர்களைக் காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு,
சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களைக் கொல்ல ஆணை இட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும், ஆஞ்சநேயரும் இத்திருத்தலத்தில் நரசிம்ம மூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரியமலையின் அருகே உள்ள சிறிய மலையில் அமர்ந்து அனுமன் அருள்
பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன. சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது தெரியும். உற்சவர்
பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. பில்லி
சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்
தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி யோக நரசிம்மரையும், யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். திருமங்கையாழ்வார், பேயாழ்வார்,
நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த நரஹரியை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்துள்ளனர். திருமங்கை ஆழ்வார் ‘அக்காரக்கனி’ என இந்த நரசிம்ம மூர்த்தியைப் போற்றிப் பாடியுள்ளார். சுவை மிகுந்த கனி போன்றவராம் இந்த நரசிம்மர். இந்த புண்ணிய மலை மீது ஏறி வழிபட
முடியாதவர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனதால் சிந்தித்தாலே போதும், மோட்சம் சித்திக்கும் என்று அருளியுள்ளார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். வேலூர் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் சோளிங்கர் என அழகைப்பட்டாலும், இதன் அருகில் 3 கி.மீ. தெற்கில் கொண்டபாளையம் எனும் சிறு கிராமத்தில் தான்
பெரிய மலையும் சிறிய மலையும் உள்ளன. பெரிய மலைக் கோயிலுக்கு 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறியமலை உள்ளது. இக்கோயிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.
பொன்மலையை தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே
விளக்கம்: சிறந்தவனும், வேதமாக விரிவு பெற்ற விளக்கு போன்றவனும், என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருப்பவனும், கீர்த்தி வாய்ந்தவனும், ஜுவலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தகவுடையவனும், கடிகை என்னும்
பெரிய திருமலையின் மீது எழுந்து அருளி இருக்கின்ற அக்காரக் கனியுமான எம்பெருமானை அடைந்து உய்ந்து போனேன் என்று இத்தலம் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றுள்ளது. சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை
வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும். இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது. ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து
சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை நரசிம்மன்.
ஜெய் நரசிம்மா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ததிபாண்டனின்_மோக்ஷம்
ததிபாண்டன் இடையரில் தயிர்க் கடையன். படிப்பறிவு எல்லாம் கிடையாது. மிகவும் எளியவன். ஆனால் அன்பே உருவானவன். மாட்டை அடிக்கக் கூட மாட்டான். ததிபாண்டன் ஒருமுறை ஒருவரின் இறந்த வீட்டுக்கு சென்று வந்த பிறகு யோசித்தான், நாமும் இறந்தால் இவ்வுலகம் விட்டு சென்று
விடுவோமா? உயிர் போனால் போகிறது. ஆனால் கண்ணன் இல்லாமல் இருக்க முடியாதே என்று கண்ணீர் மல்காத குறையாக நினைத்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் ஒரு ரிஷியை எதேச்சையாக பார்த்தான். அவரின் கால்களில் விழுந்தான்.
"சாமி என்னை ஆசீர்வதியுங்கள்"
"ஆசிர்வதித்தேன். சொல் மகனே, உனக்கு என்ன வேண்டும்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சுவாமி"
"கேள் மகனே"
"எப்போதும் கண்ணனுடன் இருக்கனும். நான் இறந்த பிறகும் அவனிடம் எப்பவும் இருக்கனும்"
"அட மோக்ஷத்தை இவ்வளவு எளிதாக கேட்டு விட்டாயே"
"அப்படினா"
"மோக்ஷம் என்றால்...இறைவன்.. திருவடி.. சரணடைதல்.. கருணை" என்று வேதாந்த தத்துவங்களை விளக்கி கொண்டே
#ஆதிசங்கரர்#ஶ்ரீநரசிம்ஹர் மண்டனமிஸ்ரர் என்னும் பண்டிதரை வாதில் வெல்வதற்காக அவரது ஊரான மகிஷ்மதிக்குச் சென்றார் ஆதிசங்கரர். பல நாட்கள் கடும் வாதம் செய்து மண்டனமிஸ்ரரை வீழ்த்தித் தன் சிஷ்யர் ஆக்கினார். ஆனால் மண்டனமிஸ்ரரின் மனைவியான உபயபாரதி, “ஸ்வாமி! நீங்கள் பெற்றது பாதி வெற்றி
தான்! நான் என் கணவரில் பாதி. என்னையும் நீங்கள் வாதம் செய்து வென்றால் தான் உங்கள் வெற்றி முழுமை அடையும். என்னுடன் வாதிட நீங்கள் தயாரா?” என்று ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டாள்.
“தயார்!” என்றார் சங்கரர். உபயபாரதியுடன் பல நாட்கள் சங்கரர் வாதம் செய்தார். திடீரென ஒருநாள் காம
சாஸ்திரத்திலிருந்து அவள் கேள்வி தொடுத்தாள். எட்டு வயதிலேயே துறவியான சங்கரருக்குக் காம சாஸ்திரம் பற்றி எதுவுமே தெரியாது. பதில் தெரியாமல் திகைத்தார்.
“என்னிடம் போய் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே இது தகுமா?” என்று கேட்டார். “கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றதாகத் தான்
#மகாபெரியவா#குலதெய்வ_வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் ஏற்படும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம். தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வம் குல தெய்வம்.
தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த
தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும். இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில்
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
On one occasion, I went along with my doctor friend to a town in Maharashtra to have darshan of Maha Periyava. We found that His Holiness had left
the town three days earlier and was camping in the outskirts of the town near a small river in a mango grove. When we reached the camp, all facilities for the visiting devotees had been made in the grove. The officials of the Mutt told me a very interesting anecdote of how His
Holiness came to stay there.
Maha Periyava was staying in the centre of the town and performing pooja everyday, one elderly gentleman used to come and stand at the boundary of the crowd, watch the pooja and go away without coming near His Holiness. Maha Periyava noted this and
#ஶ்ரீராகவேந்திரஸ்வாமி
1992 - 93 மந்த்ராலயத்தில் நடந்த உண்மை சம்பவம்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். பெண் பருவ வயது வந்ததும்
தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர். எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த
வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை சிறப்பாக கரையேற்ற வேண்டும்
#ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர்
வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் அவா. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது.
புதுச்சேரி
அருகில் வில்லியனுர் என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்து உள்ளது #ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி
பாய்வதால், சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே, நாம் சங்கராபரணி நதியானது