#ஶ்ரீராகவேந்திரஸ்வாமி
1992 - 93 மந்த்ராலயத்தில் நடந்த உண்மை சம்பவம்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். பெண் பருவ வயது வந்ததும்
தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர். எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த
வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை சிறப்பாக கரையேற்ற வேண்டும்
என்ற எண்ணத்தில் பணம் புரட்டலானார். தெரிந்தவரிடத்திலும் கடன் வாங்கினார். அப்படியும் ₹60000 பணம் அதிகமாக தேவைப்பட்டது. சரி நாம் நேரிடையாக மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் முறையிடுவோம், மடாதிபதியிடம் ஆசி வாங்கி மங்கள அட்சதை வாங்கி வருவோம் என மூவரும் கிளம்பினர்.
அதிகாலையிலேயே துங்கபத்ராவில் குளித்தனர். மூலராமர் பூஜையை கண்டு களித்தனர். பிருந்தாவனத்தில் மனமுருகி வேண்டினர். ஆலய இடதுபுறம் உள்ள ஒரு சிறிய அறையில் அன்றைய மடாதிபதி பிரசாதம் வழங்குவார். அன்றைய தினம் மடத்தின் தலைமை குருவாக இருந்தவர் சுஷ்மீந்திர தீர்த்தர்.
இவர்களும் ஒரு தட்டில் பழம்
திருமண பத்திரிக்கை வைத்திருந்தனர். எப்படியாவது இதை குருவிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம். இவர்களுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் எல்லாம் நிறைய பழங்கள், சால்வைகள் என அவர்கள் கையில் வைத்திருந்த தட்டுகளே அவர்களை அடையாளம் காட்டியது. ஒவ்வொருவராய்
குருவிடம் காணிக்கைகளை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினர். இவர்களது முறை வந்ததும் இவர்களும் பத்திரிக்கை தாங்கிய தட்டை கொடுத்து திருமணத்திற்கு பணம் தடையாக இருக்கிறது சுவாமி. நீங்கள் தான் என் பெண்ணை ஆசிர்வதிக்க வேண்டும் கண்ணீர் மல்க உருகினர் தாய், தந்தையர். மகளின் கண்ணீரும் கரைந்தது.
உடனே தலைமை குரு எல்லாம் அவர் பார்த்து கொள்வார் என கூறி மந்திராட்சதையை கொடுத்து ஆசிர்வதித்து இவர்களுக்கு முன்னால் ஒரு தம்பதியர் கொடுத்த தட்டை இவர்களிடத்திலே கொடுத்து இது தான் அவருடைய ஆசி என கூறி ஆசிர்வதித்தார். இவர்களும் பயபக்தியுடன் வாங்கி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.
ஆனால் தட்டை கொடுத்த தம்பதிக்கோ அவமானமாகி விட்டதே. நாம் குருவுக்கு கொடுத்ததை அவர் யாருக்கோ அப்படியே கொடுத்து விட்டாரே? என்ன இருக்கிறது அந்த தட்டில் என பார்க்க கூட இல்லையே என சங்கடத்தில் நெளிந்தனர். உடனே குருவின் பக்கத்தில் இருந்த சீடரிடம் விஷயத்தை கூறினர். அவரும் அப்படியா என
ஆச்சரியப்பட்டு தலைமை பீடாதிபதியிடம் "குருவே இவர்கள் மகான் பெயரில் அந்த தட்டில் ரூ 60000 க்கான செக் வைத்துள்ளனர். அதை கவனிக்காமல் அதை அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டீர்கள்" என்று கூற, குருவும் அவர்கள் இருக்கிறார்களா என பார்த்து இருந்தால் அவர்களை அழைத்து வா என கட்டளை இட்டார்.
சீடரும் உடனே நாலைந்து சீடர்களை அழைத்து கொண்டு பிருந்தாவனம் முழுவதும் தேடி கண்டுபிடித்து அவர்களை குருவிடம் அழைத்து வந்தனர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு மறுபடியும் நம்மை அழைத்திருக்கிறார் என்று. உடனே சீடர் அவர்களிடம் குரு உங்களுக்கு கொடுத்த பிரசாத தட்டை கொடுங்கள் என
கேட்டு வாங்கி குருவின் முன்னால் வைத்தார். அவர்கள் அதை கொடுத்தவுடன் அவர்களை வெளியில் நிற்க வைத்து முகவரியை வாங்கி கொண்டு சிறிது நேரம் காத்திருங்கள் என கூறி வெளியில் நிற்க வைத்தனர். உடனே குரு முன்பு அந்த தட்டை அளித்த தம்பதியை வரவழைத்து அதில் இருந்த அந்த வெள்ளை கவரை எடுக்க செய்து
செக்கின் பின்னால் குருவின் கையெழுத்தும், அன்பளிப்பாக அளித்தவரின் கையெழுத்தும் அதில் இடம்பெற செய்து அந்த பணம் முழுவதும் அந்த வறுமையான குடும்பத்திற்கே வழங்கிட வழி செய்தார். பிறகு அந்த குடும்பத்தை உள்ளே அழைத்து விவரமாக நடந்ததை கூறினர். ஐயா நீங்கள் உங்கள் மகளுக்கு திருமண செலவுக்கு
பணம் தேவை என்று ஸ்ரீ ராகவேந்திரரிடம் கோரிக்கை வைத்தீர்கள். அந்த கோரிக்கை தான் இப்போது அவரின் கையாலே நடத்தி வைக்கப்பட்டது. மகானின் பெயரால் இருந்த செக்கை உங்கள் பெயரில் மாற்ற முடியாது என்பதால் பணம் கொடுத்த அந்த தம்பதியர் அனுமதியுடன் தலைமை குருவின் கையெழுத்து அடங்கிய செக்கை
மறுபடியும் அந்த குடும்பத்திற்கு வழங்கி இதுதான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் பரிபூரன ஆசிகள் என கூறி மீண்டும் அந்த செக்கை மந்திராட்சதை கொடுத்து குரு வழங்கினார். அந்த குடும்பத்தினர் ஓம் ஸ்ரீ ராகவேந்திராயா என கதறியது மந்த்ராலயம் முழுக்க ஒலித்தது. இது கற்பனை அல்ல. 1992 - 93 வருடத்தில்
நடந்ததாக மந்திராலய மகானின் பெருமைகளை ஆராய்ச்சி செய்து ஒன்பது பதிப்புகளை வெளியிட்டு விரைவில் தமது 20வதுபதிப்பை வெளியிட ஏற்பாடுகளை செய்து வரும் திருமிகு அம்மன் சத்தியநாதன் அவர்களின் இரண்டாம் பாகத்தில் இது இடம்பெற்றுள்ளது.
ஓம் குரு ராகவேந்திராய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ததிபாண்டனின்_மோக்ஷம்
ததிபாண்டன் இடையரில் தயிர்க் கடையன். படிப்பறிவு எல்லாம் கிடையாது. மிகவும் எளியவன். ஆனால் அன்பே உருவானவன். மாட்டை அடிக்கக் கூட மாட்டான். ததிபாண்டன் ஒருமுறை ஒருவரின் இறந்த வீட்டுக்கு சென்று வந்த பிறகு யோசித்தான், நாமும் இறந்தால் இவ்வுலகம் விட்டு சென்று
விடுவோமா? உயிர் போனால் போகிறது. ஆனால் கண்ணன் இல்லாமல் இருக்க முடியாதே என்று கண்ணீர் மல்காத குறையாக நினைத்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் ஒரு ரிஷியை எதேச்சையாக பார்த்தான். அவரின் கால்களில் விழுந்தான்.
"சாமி என்னை ஆசீர்வதியுங்கள்"
"ஆசிர்வதித்தேன். சொல் மகனே, உனக்கு என்ன வேண்டும்"
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சுவாமி"
"கேள் மகனே"
"எப்போதும் கண்ணனுடன் இருக்கனும். நான் இறந்த பிறகும் அவனிடம் எப்பவும் இருக்கனும்"
"அட மோக்ஷத்தை இவ்வளவு எளிதாக கேட்டு விட்டாயே"
"அப்படினா"
"மோக்ஷம் என்றால்...இறைவன்.. திருவடி.. சரணடைதல்.. கருணை" என்று வேதாந்த தத்துவங்களை விளக்கி கொண்டே
#ஆதிசங்கரர்#ஶ்ரீநரசிம்ஹர் மண்டனமிஸ்ரர் என்னும் பண்டிதரை வாதில் வெல்வதற்காக அவரது ஊரான மகிஷ்மதிக்குச் சென்றார் ஆதிசங்கரர். பல நாட்கள் கடும் வாதம் செய்து மண்டனமிஸ்ரரை வீழ்த்தித் தன் சிஷ்யர் ஆக்கினார். ஆனால் மண்டனமிஸ்ரரின் மனைவியான உபயபாரதி, “ஸ்வாமி! நீங்கள் பெற்றது பாதி வெற்றி
தான்! நான் என் கணவரில் பாதி. என்னையும் நீங்கள் வாதம் செய்து வென்றால் தான் உங்கள் வெற்றி முழுமை அடையும். என்னுடன் வாதிட நீங்கள் தயாரா?” என்று ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டாள்.
“தயார்!” என்றார் சங்கரர். உபயபாரதியுடன் பல நாட்கள் சங்கரர் வாதம் செய்தார். திடீரென ஒருநாள் காம
சாஸ்திரத்திலிருந்து அவள் கேள்வி தொடுத்தாள். எட்டு வயதிலேயே துறவியான சங்கரருக்குக் காம சாஸ்திரம் பற்றி எதுவுமே தெரியாது. பதில் தெரியாமல் திகைத்தார்.
“என்னிடம் போய் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே இது தகுமா?” என்று கேட்டார். “கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றதாகத் தான்
#மகாபெரியவா#குலதெய்வ_வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் ஏற்படும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம். தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வம் குல தெய்வம்.
தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த
தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும். இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில்
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
On one occasion, I went along with my doctor friend to a town in Maharashtra to have darshan of Maha Periyava. We found that His Holiness had left
the town three days earlier and was camping in the outskirts of the town near a small river in a mango grove. When we reached the camp, all facilities for the visiting devotees had been made in the grove. The officials of the Mutt told me a very interesting anecdote of how His
Holiness came to stay there.
Maha Periyava was staying in the centre of the town and performing pooja everyday, one elderly gentleman used to come and stand at the boundary of the crowd, watch the pooja and go away without coming near His Holiness. Maha Periyava noted this and
#ஷோலிங்கர்_யோகநரசிம்மர்#கார்த்திகை_ஸ்பெஷல்
நரசிம்மரை குலதெய்வமாகக் கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமாக கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். 1305 படிகள் ஏறி யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்ய கொடுத்து வைத்து
இருக்க வேண்டும். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான்
கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். படிகளில் ஏறி (குரங்குகளின் தொல்லை நிறைய) துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தவல்லியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். பிரிய மனமில்லாமல்
#ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர்
வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் அவா. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது.
புதுச்சேரி
அருகில் வில்லியனுர் என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்து உள்ளது #ஸ்ரீகங்கைவராக_நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி
பாய்வதால், சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே, நாம் சங்கராபரணி நதியானது