'நமசிவாய' என்பதற்கு, சிவனை வணங்குகிறேன் என்பது பொருள்.
நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அகம் மற்றும் புறச்சாதனங்கள் :
இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள்.
திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள்.
திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம்.
இம்மந்திரமானது, உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால், நம்முள் இருந்தே நமக்குப் பயன் தருவதாக இருக்கும்.
மந்திரங்கள் பல இருந்தாலும், அவற்றில் தலையாயது பஞ்சாக்கர மந்திரம் என்பர்.
வேத ஆகமங்களில், நடுநாயகமாக நிலை பெற்றிருப்பது பஞ்சாக்கர மந்திரமே.
ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில், நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம்.
அதன் நடுநாயகமாக இருப்பது, ருத்திர ஜெபம்.
ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம், நம சோமாயச நமசிவாய என்பதாகும்.
இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும்,
பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.
மூவரின் திருமுறைகள் :
மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-வது திருமுறைகள் அப்பர் அருளியவை.
அவற்றின் நடுவில் அமைந்துள்ளது ஐந்தாவது திருமுறை.
அதன் நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன.
அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில், சிவாய நம என்ற பஞ்சாக்கர மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது.
*சித்தர்களை ஏன் நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம்...*
சித்தர்களைப் பற்றிய ஆய்வும், வழிபாடும் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் சித்தர்கள் என்றதும் ‘‘காட்டுக்குள் வாழ்பவர்கள்’’ என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவர்களை நெருங்கக் கூட பயப்பட்டதுண்டு..
சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சித்தர்கள் அனுக்கிரகம் இருந்தால், எந்த இலக்கையும், நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மலர்ந்துள்ளது.
அது மட்டுமல்ல சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால், தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.
*பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம் கயா மட்டுமல்ல, இந்தத் தலமும் தான்*
அகிலத்தில் அனந்தகோடி க்ஷேத்திரங்கள் இருக்க, ‘பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம்’ என்று கயாவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு மகத்துவம் எப்படி வந்தது?
கயாவுக்கு மட்டுமே இது பொருந்துமா?
அல்லது, வேறு ஏதாவது க்ஷேத்திரங்கள் உள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பீட்டாபுரம் குக்குடேஸ்வரர் ஆலயம்.
மகாவிஷ்ணு சக்ராயுதத்தை தாட்சாயினியின் உடலை துண்டு துண்டாக வெட்டிவீழ்த்த, அந்த பாகங்கள் பூமியில் எங்கெங்கு வீழ்ந்தனவோ அவை யாவும் சக்தி பீடங்களாயின என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.
அவ்வாறு, அன்னையின் பிருஷ்ட பாகம் வீழ்ந்த இடமே பீட்டாபுரம்.
தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே #திருமங்கை_ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார்.
அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது.
அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் #திவ்ய_தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.
திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார்.
சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள