M.SivaRajan Profile picture
Nov 23 14 tweets 3 min read
*#பீஷ்ம_பஞ்சகம்*

தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும்.

பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார்.

பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது.
இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களடைவார்கள்.

அது மட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும்.
விரத முறைகள் :

ஒரு பக்தருக்கு சாதிக்கும் என்றால்  பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை ப்ரீத்தி படுத்த சில பட்சணம் பதார்த்தங்கள் தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க முடியும் என்று ஹரி பக்தி விலாசம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும் இது  நிர்ப்பந்தம் அல்ல அவரவர் சௌகரியத்தை பொருத்தது.

முதல் நிலை :

பீஷ்ம பஞ்சகம் நாட்களில் பல பக்தர்கள் முழுமையான விரதம் இருப்பார்கள் அதாவது  நிர்ஜலம் -நீர் கூட  அருந்தாமல் விரதம் இருப்பார்கள்.

(இது ஒருவருடைய உடல் நிலை பொருத்து கடைபிடிக்க வேண்டும்)
அல்லது , இந்த  ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு முறை ஒரு சிறிய  தேக்கரண்டி( ஸ்பூன்) அளவிற்கு பால் அல்லது தயிர் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும்  உண்ணக்கூடாது.
இரண்டாம் நிலை :

முதல் நிலை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் .

இந்த ஐந்து நாட்களில் பழங்களும்( கொய்யா பழம், மாதுளம் பழம் போன்ற நிறைய விதை உள்ள பழங்களை தவிர்தல் நல்லது) பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவை  எடுத்து கொள்ளலாம்.
வாழைக்காய் , கிழங்கு வகைகளும் வேகவைத்து  பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பின் அந்த மகா பிரசாதத்தை உண்டு விரதத்தை கடைபிக்கலாம்.

ஐந்து நாட்களுக்கு தினமும் கீழ்க்கண்ட மலர்கள் மற்றும்  வாசனை திரவியம் அர்பணிக்க வேண்டும்.
🌷முதல் நாள் : தாமரைப் பூ

( பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடியில் தாமரை பூவை சமர்ப்பிக்க வேண்டும் )
 
🌷இரண்டு நாள்  : வில்வ இலை

 (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திரு-தொடையில் வில்வ இலை சமர்ப்பிக்க வேண்டும்)
🌷மூன்றாம் நாள்:   வாசனை திரவியம்

(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாபிகமலத்தில் வாசனை திரவியதை அர்ப்பணிக்க வேண்டும்

🌷நான்காம் நாள் :  செம்பருத்தி பூ

( பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருத் தோளில் செம்பருத்தி  பூவை சமர்ப்பிக்க வேண்டும் )
🌷ஐந்தாம் நாள் :  மாலதி மலர்  

( பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிரசில் கொடிமல்லிகை அல்லது பிச்சிப்பூவை சமர்ப்பிக்க வேண்டும்.)

தினமும் ஒருவர் கங்கையிலோ அல்லது மற்ற புனித நதிகளிலோ  நீராட வேண்டும்.
மேலும் பின்வரும் மந்திரத்தைக கூறி பீஷ்மருக்கு மூன்று முறை தர்பணம் வழங்க வேண்டும்.

#தர்பணம்

ஓம் வையாஹ்ர பத்ய கோத்ராய
ஸம்க்ரருதி ப்ரவராய ச
அபுத்ராய ததாம்யேதத்
ஸலீலம். பீஷ்மவர்மணே
அரஹ்க்ய

வாஸுநாமாவதாராய
ஸாந்தநோரத்மஜாய  ச
அர்ஹ்க்யம் ததாமி பீஷ்மாய
அஜன்ம ப்ரஹ்மசாரிணே

ப்ரணாம்

ஓம் பீஷ்ம: ஸந்தானவோ பீர:
ஸத்யவதி ஜிதேந்த்ரிய:
அபிரத்பிரவப்னாது
புத்ரபௌத்ரோசிதம் க்ரியம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 24
ஒரு நாட்டிலே ஒரு துறவி ஒருவர் இருந்தார்.

அந்த நாட்டு அரசன் அவரிடம் அடிக்கடி சென்று அவரை சந்தித்து சில ஆலோசனைகளை பெறுவான்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் " சுவாமி நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைத்துப்போக வந்திருக்கிறேன்" எனக் கூறினான். Image
துறவி வரமாட்டார் நான் எளிமையானவன் எனக்கு அரண்மனை வாசம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்து அவன் அவ்வாறு அவரை அழைத்தான்.

ஆனால் அவரும் சரி போகலாம் போய் ரதத்தை கொண்டு வா!

அரண்மனைக்குச் செல்வதற்கு எனக்கு ஆடம்பரமான ஆடைகளை கொண்டு வா என கேட்டார்.
மன்னனுக்கு தூக்கி வாரிப்போட்டது உண்மையிலேயே இவர் துறவிதானா?

என்ற சந்தேகம் ஏற்பட்டது ரதத்தைக் கொண்டு வந்தான்.

துறவி ஏறி உட்கார்ந்தார். அருகிலே அரசன்.

துறவி மிகவும் உற்சாகமாக இருந்தார்.

இவனோ சோர்ந்து போயிருந்தான்.
Read 13 tweets
Nov 24
#சம்பக_சஷ்டி

இன்று முதல் பைரவருக்கான சம்பக சஷ்டி :

தோன்றிய வரலாறு

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான். Image
தாருகாவன அழிவிற்குப் பிறகு சிவபெருமான் யோக நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடி விடுகிறாள். 

ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார்.

ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.
அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும், இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கப் பட்டனர்.  

இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருந்தனர்.  

அவர்களும் பெரிய சிவபக்தர்கள்.  

தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
Read 12 tweets
Nov 24
#அகோரிகள்

*அகோரிகள் யார்?

அவர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்*

அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு.

புத்தகங்கள், ஊடகங்கள், இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம். Image
சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு.

உண்மையில் அகோரிகள் என்பவர் யார் ?

அவர்களை பற்றி ஒரு சில தகவல்.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன் முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.
தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது.

இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது.

சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள்.
Read 24 tweets
Nov 24
#காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.

இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
Read 17 tweets
Nov 23
#ஸ்ரீதர_ஐயாவாள்_மடம்

கார்த்திகை_அமாவாசை
கங்கை நீராடல்.

மங்களகரமான சுபகிருது ஆண்டு கார்த்திகை 7தி (23.11.2022 - புதன்கிழமை)

ஆண்டு தோறும் திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள்.

இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள
திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார்.

தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார்.
அர்த்தஜாம பூஜையும் காண்பார்.

சிவன் மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.

அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார்.
Read 13 tweets
Nov 23
*சித்தர்களை ஏன் நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம்...*

சித்தர்களைப் பற்றிய ஆய்வும், வழிபாடும் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் சித்தர்கள் என்றதும் ‘‘காட்டுக்குள் வாழ்பவர்கள்’’ என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவர்களை நெருங்கக் கூட பயப்பட்டதுண்டு..

சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சித்தர்கள் அனுக்கிரகம் இருந்தால், எந்த இலக்கையும், நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மலர்ந்துள்ளது.

அது மட்டுமல்ல சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால், தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(