M.SivaRajan Profile picture
Nov 24 24 tweets 4 min read
#அகோரிகள்

*அகோரிகள் யார்?

அவர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்*

அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு.

புத்தகங்கள், ஊடகங்கள், இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம்.
சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு.

உண்மையில் அகோரிகள் என்பவர் யார் ?

அவர்களை பற்றி ஒரு சில தகவல்.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன் முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.
தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது.

இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது.

சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள்.
உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள்.

மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.

அகோரிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம்.

அனைவரும் ஒரே போல இருப்பார்கள்.
ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் இருப்பர்கள்.

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது.

உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும்.
ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள்.

மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது.

நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது.
முக்கியமாக இவர்கள் பிறருடன்பேசுவது குறைவு.

தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவே மாட்டார்கள்.

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள்.

இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள்.

கும்ப மேளாவில் கஞ்சா எல்லா இடத்திலும் கிடைக்கும்,
சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள்.

ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டு வருவார்கள்.

வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில்
அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள்.

மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள்.

பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள்.

இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.
ரிஷிகேசத்திலும்,கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.

இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி,கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது.
கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை.

குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம்.

எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.
அகோரிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது.

இங்கே உடல் சக்தி என குறிப்பிடுவது பூஸ்ட்,காம்ளாண் குடித்து வருவதில்லை.

யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள்.
இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி.

மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்
சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள்.
சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.

கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு.

பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும்
மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம்.

அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க ,

இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது?

ஏதோ ஒரு சூட்சுமசக்தி அனைவரையும் வரவழைக்கிறது.
பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை.

உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார்.

மற்றொருவரோ அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வினியோகம் செய்கிறார்.
இவர்களை தூண்டியது எந்த சக்தி?

தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும்,வைராக்கியமும் அலாதியானது.

தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள்.

அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது.
புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்­…!

காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம்.

ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம்.
தினமும் சராசரியாக 700 முதல் 1000 பிணங்கள் எரிக்கப்படுகிறது.

சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம்.

காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல,

மக்கள் அகோரிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும்
வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்து விடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறுவது வருந்ததக்கது.
அகோரிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள்.

ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள்.

உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.

சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள்.
உடலில் எந்த ஒரு மதசின்னங்களோ அடையாளமோ இருக்காது.

ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள்.

ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள்.

தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும்,மார்ப்பிலும் முடி இருக்காது.
கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள்.

உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல .

( நிர்வாணத்திற்கான காரணம் ஆசை ,பாசம் , பொருள் ஆடை என்று எல்லாவற்றையும் கடந்து பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து முற்றும் துறந்த நிலை என்று கூறலாம்.) .
சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

#அகோரிகள்

#அகோரிகள்_பற்றிய_தகவல்கள்

#அகோரிகள்_வாழ்வியல்

#அகோரிகள்_வாழ்க்கை_முறை

#அகோரிகள்_பற்றிய_குறிப்புகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 25
#சந்திர_தரிசனம் 🌜

இன்று பிறை பார்க்க தவறாதீங்க" புண்ணியம் ஏராளம்.*

கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளி மட்டுமே நம் கண் முன் வந்து செல்லும் அல்லவா

பெண்கள் சுமங்கலி பூஜை செய்வது முதல், இம்மாத நன்நாளில் ஐயப்பனுக்கு மாலை இட்டு சபரி மலை செல்வது நாம் அறிந்ததே.. Image
திருவண்ணாமலை தீபம் முதல்.. கார்த்திகை மாத பிறை வரை அனைத்தும் விசேஷமே அல்லவா....

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை நாளான இன்று பிறை பார்ப்பதால் எந்த அளவிற்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை படித்து பாருங்கள்
*பிறை பார்ப்பதன் புண்ணியம்*
🌜

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.

மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை.
Read 11 tweets
Nov 25
#பஞ்ச_பைரவர்_ஆலயம்

*பிதுர் தோஷத்தை நீக்கும் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச பைரவர்*!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம்.

இங்கு பசுபதீஸ்வரர் எனும் சிவாலயம் இருக்கிறது. Image
இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆவூர் பெயர் காரணம்:

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும்.
எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது.

‘ஆ’ என்பது பசுவை குறிக்கும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்ச பைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
Read 6 tweets
Nov 25
#ராகு_கால_துர்கா_பூஜை

*அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ராகு காலம் துர்கா பூஜை*!

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம்.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால் தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்

ராகுவின் சிறப்பு:

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை.

ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும்.
Read 21 tweets
Nov 25
#ஆணவம்

#தற்பெருமை

*ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது.

உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு.

*குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.

பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். Image
களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.

தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர்.

அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது.

அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
Read 10 tweets
Nov 25
#சிவ_அபிஷேக_பலன்கள்:

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்.

7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.
9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.
Read 8 tweets
Nov 25
#ஜெய்_ஸ்ரீராம்

வல்வில் ராமர் கோவில்
பூதங்குடி..

திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம். Image
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார்.

அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.

புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு.
பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 10-வது திவ்ய தேசமாகும்.

இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார்.

இவர் யோக நரசிம்மர்.

இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(