(1/8) நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும், நீங்கள் நடக்கும்போதும், ஓடும்போதும் அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போதும் உங்கள் முழங்கால் கூடுதலாக 4 கிலோ அழுத்தத்தை உள்வாங்குகிறது.
(2/8) எனவே முழங்கால் வலியை விட உடல் எடையின் முக்கியத்துவத்தை இது குறிக்கும் விதமாக இருக்க வேண்டும். அதனால்தான் நமக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பது முக்கியமான ஒரு விஷயமாகும்.
(3/8) மேலும் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், உடல் எடையை குறைப்பது முழங்கால் கீல்வாதம் எனப்படும் ஆர்த்ரைட்டிசின் வளர்ச்சியைக் குறைக்க கணிசமாக பங்களிக்கும்.
(4/8) அதிக எடை / பருமன் உள்ளவர்களுக்கு கீல்வாதம் அதிக விகிதங்களில் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உடல் பருமன் உள்ளவர்களுக்கு முழங்கால்களில் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்பு 4-5 மடங்கு அதிகம்.
(5/8)உங்களுக்கு மூட்டுகளில் வலி இருந்தால், கூடவே உங்கள் உடல் எடையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தால், அந்த கூடுதல் கிலோவை இழப்பது நிச்சயமாக உங்கள் மூட்டுகளில் இருந்து அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும்.
(6/8) அதுவே உங்கள் மூட்டு வலியை குறைக்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆர்த்ரைட்டிஸ் இருந்தாலோ, அதன் காரணமாக மூட்டில் உள்ள குருத்தெலும்பு சேதமடைந்து இருந்தாலோ,
(7/8) ACL அல்லது PCL போன்ற கால் மூட்டுகளில் ஏற்படும் உள்காயங்கள் இருந்தாலோ, உடல் எடையை குறைத்தால் கூட உங்கள் மூட்டு என்றைக்கும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
(8/8) இந்த சிக்கல்களை உடைய நோயாளிகள், உடல் எடை இழந்தால் அவர்களின் மூட்டுவலி கண்டிப்பாக குறையும். அதுமட்டுமில்லாமல் கிழிந்த தசைநாரும், சவ்வும் மேலும் சேதமாவதை இது கண்டிப்பாக தடுக்கலாம்.