திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம்.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார்.
அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.
புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு.
இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார்.
இவர் யோக நரசிம்மர்.
இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது.
இந்த ராமருக்கும் மூலவர் வல்வில் ராமருக்கும் கண் திருஷ்டி பட்டு விடாதபடி இந்த நரசிம்மர் பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, பக்தர்களின் உத்தியோகம், திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீர்த்து வைக்கிறார்.
காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப்புட்குழி திவ்ய தேசத்திலும் ஜடாயுவுக்கு ராமன் இறுதிக்கைங்கர் யங்களைச் செய்தான் என்ற தலபுராணக் குறிப்பு இருந்தாலும் திருப்புள்ள பூதங்குடியைப் பொறுத்த வரை பூமிதேவியுடன் அந்த சாங்கியங்களை அவன் அனுசரித்தான் என்ற வகையில் சற்றே மாறுபட்டிருக்கிறது.
இப்படி தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு அந்தி மக்கிரியைகளை நிறைவேற்றிய ராமன் இத்தலத்தில் ஓய்வு கொண்டான்.
ஏற்கனவே சீதையைப் பிரிந்த துக்கம், இப்போது ஜடாயுவை இழந்து விட்ட சோகம் எல்லாமுமாகச் சேர்ந்து அவனை மிகவும் களைப்படைய வைத்திருக்கும் போலிருக்கிறது.
ஆகவே இந்த புள்ள பூதங்குடியில் ஓய்வெடுத்து கொண்டான்.
அந்த நிலையே சயனக்கோல ராமபிரானாக இன்றளவும் நமக்கு தரிசனம் கிடைக்கிறது.
ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்ச கதி அளித்து, அதன் பூத உடலுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ராமன் செய்ததால் இந்தத் தலம் புள்ளபூதங்குடி என்றாகியது.
ஸ்ரீரங்கம் போலவே இந்தத் தலமும் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது.
நீத்தார் கடன் நிறைவேற்றும் பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும், வடநாட்டில் உள்ள பிரபலமான கயா தலத்தில் அதனை மேற்கொண்டால் என்ன நற்பலன்கள் கிட்டுமோ
அந்தப் பலன்கள் எல்லாம் கொஞ்சமும் குறைவின்றி, இந்தத் தலத்தில் மேற்கொள்பவர்களுக்கும் கிட்டும்..
அமைவிடம்..
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைக்காவூர் செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புள்ள பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது வல்வில் ராமர் கோவில்.
இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !
ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற நன்னாளே ரம்பாதிரிதியை.
இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’
இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.
தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்' என்பது திருப்பெயர்.
இந்த சிவலிங்கப் பெருமான் அமிர்தமயமானவர் என்பதால் இவ்வாறு நிறம் மாறிக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, சிவலிங்கத் திருமேனி கரிய நிறத்தில் வழுவழுப்புடன் காணப்படும்.
ஆனால், இங்குள்ள மூர்த்தி கருப்பும் வெள்ளையு மாய், மேலிருந்து கீழாகக் கோடுகள் பதிந்து காட்சியளிக்கிறார்.
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன்.
அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான்.
மிகச் சுவையா சமைப்பது,
அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
எத்தனையோ சிறப்புகளுடன் அமைய பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தியும் தனி சிறப்புடன் அமைய பெற்று இருக்கிறது.
அதாவது கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது.
இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.
சைவ புராணங்களை வெளிப்படுத்தும் கோபுரங்கள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான்உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளது.
கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.